தி அதர் இண்டியா பிரஸ் வெளியிட்ட ராகுல் ஆல்வாரிஸ் எழுதிய ஃப்ரீ ஃப்ரம் ஸ்கூல் எனும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘பள்ளிக்கு வெளியே வானம்‘ எனும் இந்நூல் ராகுலின் ஒரு ஆண்டு பள்ளி செல்லாத வாழ்வினை வெகு இயல்பாக நம் முன் வைக்கிறது. இந்நூலானது அனைவரும் எளிமையாக தரவிறக்கி வாசிக்க ஃப்ரீதமிழ்இபுக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இதனையொத்த பல சமகால தமிழ் நூல்களை விலையில்லாமல் தரவிறக்கி வாசிக்க www.freetamilebooks.com எனும் வணிக நோக்கமற்ற தளத்தினை அணுகலாம். அதோடு தங்களது படைப்புகளை வெளியிட விரும்பினாலும் இத்தளத்தில் அதற்கான வழிகாட்டுதல்கள் உள்ளன.
நூலகவாசியின் குறிப்புகள் எனும் நூல் எளிய வாசிப்பிற்கான சிறிய வாசிப்பு விமர்சனங்களைக் கொண்டுள்ளது. இவை பெரிய முக்கியமான நூல்கள் என்றில்லாமல் ஒரு நூலகத்தில் கிடைக்கும் நூல்களை வாசிப்பவர் அதைப்பின்பற்றி நல்ல நூல்களை பின்னாளில் தேர்ந்தெடுத்து வாசிக்கும் தன்மையைப்பெறுவார் அல்லவா? அதுபோல தன் வாசிப்பைத் தொடங்கி தொடர்ந்து முன்னேறுகிறார் இந்நூலின் ஆசிரியர். படிக்க சிரமப்படுத்தாத எளிய வார்த்தைகளில் எழுதப்பட்டுள்ள இப்பிரதி வாசிப்பை மேற்கொள்வோருக்கு சிறியளவிலேனும் வழிகாட்டி உதவக்கூடும். இவை அனைத்தும் கோமாளி மேடையில் வெளியிடப்பட்ட நூல்விமர்சனங்களாகும். இவை தற்போது விலையில்லாமல் தரவிறக்கி படிக்க உதவும் வண்ணம் www.freetamilebooks.com எனும் மின்னூல்களைக்கொண்டுள்ள தளத்தினை அணுகலாம்.