13

111 பூண்டதண்பொருநையின்சீர்புகன்றன

நீண்டிலகுஞ்சடைநிமலர்மேவிய

வேண்டிகழ்பதிகளேழிரண்டியைந்திடு

பாண்டிநாட்டணிசில பகர்கிற்பாமரோ

வேறு

112 புரங்குன்றச்சிலைகுனித்துப் பொறியரவுநாணாகப் பூட்டி மூவர்

தரங்குன்றக்கருதாதுதழலெழவேநகைசெய்துதரைமேற்றூங்குங்

கரங்குன்றம்படைத்தனையகரடமதகரியுரி போர்த்தருளுங்காமர்

பரங்குன்றஞ்சார் கூடற் பரமனருளாலோங்கும் பாண்டிநாடு

113 பன்னுமலயத்துவச பாண்டியன் பண்டிழைத்ததவப்பயத்தினாலே

முன்னொருகாலவதரித்து மும்முலையாண்முடிதுலங்கமுறையிற்காக்கு

மந்நிலையிலமர்புரிந்தங்கவளை மணம்புணர்ந்தருளியங்கணாளன்

மன்னுநற்சுந்தரமாறனெனவரசுபுரிந்துளதுவழுதிநாடு

114 கொண்டலுறழ்மின்கூந்தற் கொண்டமணங்கொங்குதேரென்றெடுத்து

மண்டலமெண்மாகீர்த்தி வழுதி பெற வெழுது திருமுகமாம் வண்டீந்

தண்டமிழின் பொருள் விளங்கச் சங்கத்தின் கீழ் நின்று பரனுஞ் சாற்றும்

பண்டருமத்தமிழ்ச் சங்கப்பாடன் மணங் கொழித்திடுந் தென்பாண்டிநாடு

115 குலவுவடவேங்கடந்தென்குமரியெனத்தமிழெல்லைகூறுகின்ற

தலமதனிற்றலைமை பெறு தலமீரேழ்தயங்குறுசெந்தமிழ் நாடென்றே

யிலகுமரியயனமரரிந்திரன் வந்திறைஞ்சவருளேற்பநல்கு

மலைமகணல்லரசினறம்வளர்க்கவளஞ்சுரந்தளிக்கும் வைகைநாடு

116 தவலறவேயொருநான்கு தலையிட்டவறுபமூதுதந்தலீலை

சிவபெருமான் செய்தருளிச் செங்கயற்கண் மங்கையொடுஞ் சேர்ந்தநாடு

கவுணியர்தங்குலத்துதித்தகாளையமண்கையர் தமைக்கழுவிலேற்ற

மவுலிதிகழ் வழுதிமகிழ் வண்டமிழேடெதிரேறும் வைகை நாடு

117 தென்மதுரைபரங்குன்றந்திருவிராமேச்சுரமாடானைபுத்தூர்

பன்னுதமிழேடகநெல்வேலி பகர்குற்றாலமாப்பனூர்பார்

மன்னுபுனற்சுழியல்புனவாயில் கொடுங்குன்றமெழின் மருவுகானை

பொன்மதில் சூழ் பூவணமும் பொருந்துகின்ற புகழ்ப் பொதியப் பொருப்பனாடு

வேறு

118 மண்டுகின்றவன்மள்ளர்தம்மோசையும்

வெண்டிரைப்புனல்வெள்ளத்தினோசையும்

பண்டருங்கிளைப்பாடலினோசையு

மண்டகோளகைக்கப்புறஞ்சாருமால்

119 கொண்டலொன்றைமின்கூறுசெய்தென்னவே

மண்டுமோரிருவன்பகட்டின்பிடர்த்

திண்டிறன்மள்ளர் பொன்னுகஞ் சேர்த்தியே

கண்டுவைரக்கலப்பை தொடுத்தனர்

120 வேண்டுநீர்கொடுமேவநிரப்பியே

கீண்டுழுஞ்சாற்கிளர்மணிக்குப் பையைப்

பூண்டநல்வரம்பின்புறம் போக்குவார்

பாண்டிநாட்டுறும் பண்ணையின் பாங்கெலாம்

121 தக்கநற்றசும்பின்றதியென்னவே

நெக்குநெக்குநிறைநறுஞ்சேற்றின்முன்

றிக்கினிந்திர தெய்வதம் போற்றியே

மிக்கமள்ளர்விதைத்தனர் வித்தையே

122 மறுவிலாதுயர்மாதருமைந்தருஞ்

சிறுவர்தம்மைவளர்த்திடுசெய்கைடோ

லுறுமிகழ்ச்சியனோங்குமுழுநர்தா

நறியசெந்நெலினாறு வளர்த்தனர்

123 பொய்யின்ஞானப்புகலிப்பிரானமண்

கையர்தம் மைக்கழுவினிலேற்றுவான்

கொய்து சேர்த்தகுவான்முடியென்னவே

செய்யநாறுபறித்தவை சேர்த்தினார்

124 வள்ளத்தேயுறவாக்குமதுநுகர்ந்

துள்ளத்தேயுணர்வோடிடவோடிவீழ்ந்

தள்ளற்பள்ளத்தழுந்தினர் மள்ளர்தாங்

கள்ளுண்பார்க்குக்கதியுமுண்டாங்கொலோ

125 மள்ளரானவர் வான்மதிவள்ளத்திற்

றெள்ளிதாநறவுண்டு தெவிட்டியே

யுள்ளநாடியுழந்தியர்க்கூட்டுவார்

கள்ளின்மிக்ககளிப்புமுண்டாங்கொலோ

126 ஓடிமீளுவருண்டிடுகள்ளினைத்

தேடியோடித்தியங்கி மயங்குவார்

பாடியாடுவர் பண்ணைகளெங்கர்ங்

கூடுமள்ளர் குழாத் தொடுங்கூடியே

127 மாறின்மைந்தரைமாதருமைந்தரு

மீறில் செல்வமொடில்லறஞ் சேர்த்தல்போல்

வேறுவேறு விளம்பிக் கடைசியர்

நாறுசேறுநடுவான்றொடங்கினார்

128 கந்தவார்குழற்கள்ளுண்கடைசியர்

சிந்தைநொந்துதியங்கித் ​தெளிந்துவந்

திந்திரன்றனை யேத்தியிறைஞ்சியே

நந்து நென்முடிநாட்செய்து நாட்டுவார்

129 எண்களோடிய லெண்டிசையெங்கர்ங்

கண்களோடிக்கடைகள் சிவப்பவே

யுண்களோடியுழத்தியருண்டுதாம்

பண்களோடிசைபாடிநடுவரால்

130 உற்ற பண்ணையுலாவுமுழத்தியர்

மற்றையாரொடுமதுவுண்மயக்கினா

லற்றம்யாவையுமங்கைகள் கொட்டியே

குற்றமீதென்று கூறிநகைப்பரே

131 துள்ளுசேலினந்தூம்புடைக்கும்புனல்

வெள்ளமாமருதந்திகழ்வேலிசூழ்

மள்ளர்தந்தவளவயனாறெலாங்

கள்ளுண்காமக்கடைசியர் நாட்டினார்

வேறு

132 மிடைபடுசெஞ்சாலிதிகழ்மிகுந்தபுனற்பண்ணைதொறும்

புடைபெயர்ந்துபுனனிறுவிப்புகழ்பெறு செந்நெற்சாலி

தடைபடுந்தாட்டடங்கமலந்தன்னாலென்றுளந்தளர்ந்து

கடைஞர்கடைக்கண்காட்டக்கடைசியர் பூங்களைகளைவார்

வேறு

133 அங்கர்ழத்திய ரள்ளியகழ்ந்த

செங்கமலங்கள் செழுங்கதிர்கண்டு

பொங்குதணீரிடைப் போந்தனசேரத்

தங்கினை கண்டனர் தம்முகமொக்கும்

134 மங்கையர் தம்முகமானுவவென்றே

செங்கமலங்கடெரிந்து தெரிந்தே

யங்கண்மிகுந்தலமந்தமர்வுற்றே

தங்கவரிற்சிலர் தாங்களையாரால்

135 விட்டிடுகாமன்வியன்கணையொன்றே

யுட்கொடுமேவுமுழத்தியர் சில்லோர்

மட்டவிழ் செங்கமலத்தொடு காவி

கட்டனர்மிக்ககடுங்களையெல்லாம்

136 பந்தவிலங்குபரிந்தவர்தம்பால்

வந்துநன்ஞானம்வளர்ந்திடுமாபோற்

கந்தமலர்க்களை கட்டலினோங்கிற்

றந்தவியன்பணையார்தருபைங்கூழ்

137 செந்நெல்வளர்ந்துசெழுங்கதிர்சாய்தல்

பன்னுதமிழ்ப்புகல்பாலனை முன்னா

னின்னருளானதியேடெதிரேற

மன்னனெழுந்துவணங்குதல் போலாம்

வேறு

138 வரம்பருறுமுழங்கொலிவாய் மருதநிலக்கிணை கறங்க

வரம்பொருதகதிரரிவாணிரைபூட்டியாங்குழவர்

பரம்பியரிந்தரிபரப்பிப்பணிலங்கடருமுத்தஞ்

சொரிந்திடவேயவைதிரட்டிச் சொன்னமலைபோற்குவித்தார்

139 மேருகிரிசாய்த்திடல்போன்மிகுசெந்நெற்போர் சரித்துக்

காரிணங்குங்கருமேதிக்கணத்தினை நன்குறப்பிணித்துப்

பாருறவேபலகாலுஞ்சூழ்ந்து பலாலந்தெரிந்து

மாருதநேருறத்தூற்றி மன்னியநென்மலை வளர்த்தார்

140 அழகியசீர்ப்புகழ் வேந்தற்காறிலொன்று கொடுத்தைந்தில்

வழிபடுதெய்வம் பிதிரர்வருவிருந்துவான்கிளைகள்

விழைவுறவேயளித்ததற்பின்மிகுமொன்றால் வியன்குடிமை

பழகிய செல்வம் பெருகும் பாண்டிவளநன்னாடே

வேறு

141 கொண்டல்சேர்பொழில்களெங்குங் குலாவுநற்பொழில்களெங்கும்

பண்டைநான்மறைகளெங்கும்பகர்ந்திடுமறைகளெங்குந்

தண்டமிழ்மணங்களெங்குந்தகுகடிமணங்களெங்கு

மண்டராலயங்களெங்குமணிகொளாலயங்களெங்கும்

142 மாதர்தம்பண்ணையெங்குமருதநீர்ப்பண்ணையெங்கு

மேதமில்செல்வமெங்குமிந்திரசெல்வமெங்கு

மோதுமஞ்சுகங்களெங்குமுரைக்குமஞ்சுகங்களெங்கு

மேதகுமுலமெங்கும் விரும்புநல்லுலகமெங்கும்

143 வண்டமிழ்ச்சங்கமெங்கும்வார்புனற்சங்கமெங்குஞ்

சண்பகவனங்களெங்குந்தகுமடவனங்களெங்கும்

விண்படர்வேழமெங்கும் வியன்கழைவேழமெங்கும்

பண்டருபாடலெங்கும் பதமிதிப்பாடலெங்கும்

144 வேதமந்திரங்களெங்குமிக்கதந்திரங்களெங்கும்

போதலர்வாவியெங்கும் புண்ணியதீர்த்தமெங்கு

மோதுபண்ணிசைகளெங்குமுரைக்கும் யாழ்ப்பாணரெங்கு

மாதர்தம்வண்ணமெங்கும் வண்டமிழ்வண்ணமெங்கும்

145 தேமலர்பயில்வசெந்தேன் செவ்வழிபயில்வசெந்தேன்

காமநூல்பயில்வர்மாதர்கமலமாமுகமொண்மாதர்

நாமநூல்பயில்வநாவேநாவலர்பயில்வநாவே

தாமமேபயில்வவன்னந்தாமரைபயில்வவன்னம்

146 முள்ளரைநாளஞ்சேர்ந்தமுண்டகக்கையானீவி

யௌளருங்கருவிபம்பயாழ்நரம்பிசைத்தியார்த்தே

யுள்ளமிக்குவகைகூர்ந்தாங்குரைக்கும் யாழ்ப்பாணர்பாடற்

றெள்ளமுதனையதீஞ்சொற்செவியுறவாங்கின்றாரும்

147 குழலிசைபயிற்றுவாருங்குஞ்சரம்பொருத்துவாரு

மழவர்சொன்மாந்துவாருமனையறம்புரிகிற்பாரும்

விழவணிவிரும்புபவாரும் விருந்தெதிர்கொள்கிற்பாரு

முழவிசைவிரும்புவாருமுற்று மெய்த்தவஞ் செய்வாரும்

148 வாரணப்போர்சேர்ப்போருமைமறிப்போர் காண்போருந்

தேரணியூர்குவோருஞ்சிலைத் தொழில்பயிலுவோருங்

மாரணந்தேர்குவோருமஞ்செழுத்தறைகுவோரு

காரணங்கருதுவோருங்காரியந்தேர்குவோரும்

வேறு

149 கன்னலஞ்சிலைகையேந்துங்காமனூறன்னைத்தாமே

யின்னிசைபாடுவோருமிருசெவிமாந்துவோரும்

பொன்னகர்தன்னின்மன்னும்புலவரிற்பொலிந்துசூழத்

தன்னிகராகியோங்குந்தண்டமிழ்ப்பாண்டிநாடே

வேறு

150 தீதின்மாதவர்சேர்ப்பனசாலையே சிறப்பின்மல்குந்தினமன்னசாலையே

காதல்கூருங்கடிபொழின்மாலையே கருதுநீறொடுகண்டிகைமாலையே

மாதர்காதன்மிகுமந்திமாலையேவண்டுகிண்டியுறங்குவமாலையே

யாதரம்பெறுமாலெங்குமாலையே யார்வமோங்குங்கழைக்கரும்பாலையே

151

சேய்கணின்றெளவைக்கீவதுமுத்தமேசிற்றில்கோலிச்சிதைப்பதுமுத்தமே

பாய்புனற்றிரைசேர்வது பண்ணையேபாடலெங்கும்பயில்வது பண்ணையே

வாய்திறந்துவழங்குவவள்ளையேமானனார்கடம்வார்காதும்வள்ளையே

யோய்மருங்கிலுடுப்பது சேலையேயுற்றகண்களொப்பாவது சேலையே

152 கோலமாந்தரணிவதுமாரமேகுங்குமக்கொங்கைசேர்ப்பதுமாரமே

சாலவெங்குந்தவம்பயில்வாரமேதரங்கநீர்த்தரளம்புரள்வாரமே

மாலுலாவிவளருமந்தாரமேமன்னுதீஞ்சொல்வழங்குமந்தாரமே

சீலமாதவர்சிந்தையுமாரமேசேர்ந்தபண்ணைமருதமுமாரமே

153 புண்டரீகம் பொருந்துநற் சங்கமே பொங்கி யெங்கம் பொருந்துநற்சங்கமே

பண்டமாறுவபாவையராரமேபயிலுங்காமவிழாவாரவாரமே

வண்டுபாடுமலர்க்கருங்கோதையேமைந்தர் செங்கைமருவுவகோதையே

யெண்டிசாமுகமுஞ்சிவதானமேயிசைந்திடுந்தருமத்தொடுதானமே

வேறு

154 சோலையின்மறைசொல்லுவவஞ்சுகங்

கோலவேள்விருதூதுவகோகில

நீலமாடநெருங்குவமேகங்கண்

மாலைசேர்வனவண்டின்குழாமரோ

155 நீடியோங்குநிலாமுற்றமோங்குமே

மாடமூடுங்கலாபமயில்களே

பாடல்சேர்ந்திடும் பண்ர்டனோசையே

யாடுநீர்த்துறையன்னக் குழாங்களே

156 அள்ளல்வேலையகலிடமெங்கர்ந்

தெள்ளுசெந்தமிழ்ச் செல்வந்திளைக்கவே

கொள்பொருள்வெமூகிக்கொள்பவரின்மையால்

வள்ளியோர்கணமண்டலத்தில்லையே

157 செம்மைநல்குறுசெந்தமிழ்சேரலால்

வெம்மைசேர்ந்தவெளிற்றுரையில்லையாம்

டுபாய்ம்மையென்றும்புகன்றறியாமையான்

மெய்ம்மையென்றும்விளம்புவதில்லையே

158 கோதின்மாமணிகுப்பைகொழிப்பன

வோதுதேன்மதுவுண்டுகளிப்பன

பாதமேபயிலும்பரதத்துடன்

மாதரோடுநடிக்குமயிற்குழாம்

159 தென்குலர்வியதேமொழியார்கடம்

பொன்குலாவியபூண்முலைதாங்கலாற்

றுன்பமேவுந்துடியிடையன்றிமற்

றின்பமேயலதேதமங்கில்லையே

160 மேவுகின்றவிலங்குவிலங்குகள்

காவலென்பகடிமதிற்காவலே

யோவில்வன்சிறையுற்றபுனற்சிறை

தேவர்கோன்புகழ்தென்னவனாடெலாம்

161 வங்கவாரிதிசூழ்கின்றவையக

மெங்கர்ம்பகையின்றியிருத்தலாற்

றுங்கமேவுவெஞ்சூரருந்தோன்றிலர்

பங்கமேய்பண்ணைப்பாண்டிநன்னாடெலாம்

வேறு

162 கண்டவளவான்மிகுகலைப்பொருளினாலும்

வண்டவளநாயகிவழுத்தரிடதென்றாற்

கொண்டவளவில்புகழ்குலச்செழியராளு

மண்டவளநாட்டணியையாரறையவல்லார்

திருநாட்டுச் சருக்க முற்றியது

ஆகச் செய்யுள் 162

*****

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book