7

கணபதி துணை

திருச்சிற்றம்பலம்

திருப்பூவணப் புராணம்

*****

காப்பு

1

திகழ்வரைமின்னனைவதனச் செங்கமலந்தளையவிழ்க்குந்திவாகரஞ்செய்

மகிழொருவெண்மதி மருப்பின் வயிரகிம்புரி வயங்குமத்தயானை

நிகழுமடியார்க்கன்புநீடுமறம்பொருளின்பம் வீடுநல்கும்

புகழ்தருநற்கற்பகத்தின் பொற்பதத்தையெஞ்ஞான்றும் போற்றல் செய்வாம்

நூற்பயன்

2

தந்திமுகன்றம்பியரு ணந்திதனக்குரைப்பநந்தி சநற்குமாரன்

வெந்துயரமறவெடுத்துவிரித்துரைப்பவுவன் வேதவியாதற்கோதப்

புந்தியுணர்ந்தவன்சூதமுநிக்குரைத்த புட்பவனபுராணந்தன்னைச்

சிந்தைமகிழ்வுறப் படிப்போர் கேட்போர் நல்லிகபரங்கள் சேர்வரன்றே

கடவுள் வாழ்த்து

சபாபதி

வேறு

3

பூமேவுதிருமாலும் புண்டரிகத்தயனும்

புரந்தரனும் வானவரும் புங்கவரும் போற்றப்

பாமேவு பண்டருஞ் சொற்பரிவுமையாள் காணப்படர்

தரு செம்பவள நறுஞ் சடை தாழமிலைச்சுந்

தேமேவு செழுங்கொன்றை தேன்றுளிப்ப விருள்

கால்சீக்குமினன் மதிநிலவெண்டிசாமுகஞ் சென்​றெறிப்ப

மாமேவு மணிமன்றுணடம்புரியுமெங்கோன்

மன்னுபரிபுரமலர்த்தாள் சென்னிமிசைச் சேர்ப்பாம்

திருப்பூவணநாதர்

வேறு

4

பூமாது மகிழ்துளபப்புயல்வண்ண நெடுமாலும்புகழ்வெண்கஞ்ச

நாமாதுநடனமிடுநான்மறைதேர்நான்முகனுநயப்ப நன்னீர்த்

தேமாது செழும்பவளச் சடையிருப்பத்திங்களிருடுரப்பச்சைல

மாமாது வடிவிலங்கமன்னிய பூவணத்தரன்றாள் சென்னிசேர்ப்பாம்

5

ஒருபொருளாயுயிர்க்குயிரா யுருவநான்கருவநான்குபயமொன்றா

யருள்வடிவாயகண்டிதமாயசஞ்சலமாயாதிநடுவந்தமின்றாய்க்

கருதரிதாய்ச் செல்கதியாய்க் காண்பரிதாய்க்காரணகாரியங்கடந்த

பொருவில்பரிபூரணமாம் பூவணத்தெம்புனிதனை யாம் போற்றுவாமே

6

மேவியபல்லுயிர்கட்கும்விண்ணவர்க்கு மிக்ககளைகண்ணாயெண்ணில்

பாவியவணடங்களெலாம் படைத்தளித்துத்துடைத்தருளும்பதியாய் மேலாய்த்

தாவிலருட்சச்சிதாநந்தவடிவாய்திகழ்சங்கரனைநாளும்

பூவுலகும்பணிந்தேத்தும் பூவணநாயகனை நித்தம் போற்றல் செய்வாம்

7

புகலரியபுவனமெலாம் பொருந்துயிர்கட் கிரங்கியருள் பொழிந்துநாளும்

பகர்தருமிப்படர்புவியிற் பலரறியாவகை யொளித்தபரிசு தோன்ற

மகிழுயர்வானெழுபரிதிவானவன் வந்தருச்சித்து வணங்கியேத்துந்

திகழ்தருபூம் பொழில்புடைசூழ் தென்றிருப்பூவணந்தரன்றாள் சிந்தை செய்வாம்

அழகியநாயகர்

8

திங்கடவழ்சடாமௌலித் தென்கூடற் சிவபெருமான் சித்தராகிப்

பங்கமுறு கருந்தாதுபசும்பொன்னாங்குளிகையருள்பான்மையாலே

பொங்கரவவகலல்குற் பொன்னனையாள் கண்டுவந்து போற்றுநீரா

ரங்கர்லகம்புகழுமழகியநாயகர் பாதமகத்துள் வைப்பாம்

மின்னன்னை

9

மன்னுமழைதவழ் குழலுமதி தருநன்முகோதயமுமலர்ப்பூங்கையும்

பன்னுதமிழ்ப்பால் சுரக்கும் பயோதரமுமறைகொழிக்கும் பவளவாயுந்

துன்னுமணிதிகழுடையுந்துடியிடையுந் துலங்குறுமைந் தொழிற் கும் வித்தாய்ப்

பொன்னனையானிடத்தமர்ந்த மின்னனையாள் பொற்பாதம் போற்றல் செய்வாம்

விநாயகக்கடவுள்

10

இகபரந்தந்திடுமிந் நூற்கிலக்கணச் சொல்வழுவாமலிடையூறின்றிப்

பகரவருள் புரிந்தருளப்பனிவரை மின்னனையெனும் பார்ப்பதியைப்பாங்காற்

றிகழ்கலசமுலைமுகட்டிற் றென்றி ருப்பூவணத்தரன்றான் சேர்ந்துநல்கும்

புகர்முகத்துக்கருணை மதம் பொழிகவுட்டுப் போதகத்தைப் போற்றுவாமே

முருகக் கடவுள்

11

தலம்புகழ் வச்சிரத்தடக்கை யிந்திரன் றந்தருள் பாவைதன்னேர்வள்ளி

நலம்புகழ்செவ்வேளரற்கு ஞானவுபதேசமருண்ஞானமைந்தன்.

றுலங்குகிரவுஞ்சகிரி துளைபடவெஞ்சூரனுரங்கிழியவேலை

கலங்கவயில்வேல்விடுத்த கந்தனைப்பந்தனைய கற்றிக்கருத்துள் வைப்பாம்

வயிரவக்கடவுள்

12

அரிபிரமரகந்தைகெட வண்டங்களுடைந்துமிகு மங்கிகொண்டே

யுரியபலவுலகமெலா மொழிந்திடு நாளவர்கடமதுடன் மேல்கொண்டு

குருதிவாய் கொப்பளிப்பக்கூரயின்மூவிலைச்சூலங்கொண்ட திண்டோட்

கருவரை நேர்தருவடுகக்கடவுளெமைக் காப்பக் கை கூப்புவாமே

சரசுவதிதேவி

13

அரியசுவைதருமமுதவருவிபாய்ந்தொழுகருணமண்டலஞ்சேர்

விரிகதிர் வெண்மதிக்கற்றை வெண்மகலபீடிகைமேல் வீற்றிருந்து

பரவருநற்கலைகளெலாம் பவளவாய்திறந்துரைக்கும் பனுவலாட்டி

திருவடிகடமையெமதுசிரத்தினிலுங்கருத்தினிலுமிருத்துவாமே

திருநந்திதேவர்

14

திகழ்மகுட சேகரமுஞ்சிறுபிறையுநுதற் கண்ர்ஞ் செங்கைநான்கு

மகிழ்சுரிகைப்பிரம்பினுடன் மான்மழுவும்படைத்தந்திவண்ணநண்ணி

யிகபரநல்கெம்பெருமானிணையடிவீழ்ந்தயன் முதலோரெந்தஞான்றும்

புகழ்கயிலைமலைக்காவல்பூண்ட திருநந்திபதம்புந்தி கொள்வாம்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

15

திருத்தோணிபுரத்தமர்ந்த சிவனருளானுமைகலசத்திருமுலைப்பால்

விருப்போடுமமுதுசெய்துமிகுசைவத்துறைவிளங்கவேதமோங்கக்

கருக்குழிவீழ்ந்தலறவமண்கையர்கடாங்கழுவேறக்கருதிமாற

னெருப்புறுவெப்பகன்றிடவெண்ணீறெடுத்துச் சாத்தினர் தாணினை தல் செய்வாம்

திருநாவுக்கரசுநாயனார்

16

அருள்பெருகுந்திலகவதி யாரருளாலமண்சமயமகற்றியன்பாற்

கருதரியகற்புணையாற்கடனீந்திக் கருவேலைகடப்பான்போலு

மருவுபுகழ்வாய்மூரில் வைதிகசைவந்தழைப்ப வந்து தோன்றித்

திருவதிகைப் பதிவருஞ் செந்தமிழ் நாவுக்கரையர் பதஞ்சிந்தை செய்வாம்

சுந்தரமூர்த்தி நாயனார்

17

காதலுடன் மிகுமின்பக் கடிமணப்பூம்பந்தரின் கீழ்க்கலைவல்லோர்முன்

மாதவன் போல் வந்திவனம் வழித்தொண்டனென்றிசைக்கும் வழக்கினாலே

பாதிமதிநுதற் பரவையிடையிருளிற் பங்கயப் பொற்பாதஞ்சேப்பச்

சோதிதனைத் தூதுகொண்ட சுந்தரன்றாள் சந்ததமுந் தொழுது வாழ்வாம்

மாணிக்கவாசக சுவாமிகள்

18

மருவார்கடொழுகழற்றென் மதுரைவருதமிழ்வழுதி மன்னர் கோமான்

பொருவாசிகொணர்கெனச் செம்பொன் கொடுத்துவிடுத்திடவச் செம்பொன்னாலே

பெருவாழ்வை யுறவிரைந்து பெருந்துறையின் மேவியதம்பிரானைக் கொண்ட

திருவாதவூரடிகளிரு பாதகமலங்கள் சென்னிவைப்பாம்

மெய்கண்டதேவர்

19

பொய்கண்டவெவையுமெனப் பொல்லாத கணபதிதான்புகன்றுபின்னர்

மைகண்டத்தடக்குமரன் வழங்குசிவஞானநூல்வகுத்துக் காட்டக்

கைகண்டபின்னருளே கண்ணாகக் கண்ட பெண்ணைப் புனல்சூழ்வெண்ணை

மெய்கண்ட தேவனடிகை கொண்டு கூப்பிமுடிமீது சேர்ப்பாம்

திருத்தொண்டர்

20

பார்மேவுசைவதப் பாலோராய்ப்பரசமய நிராகரித்துப்

பேர்மேவு பெருமைதரும் பெறாகரிய பேரின்பமுத்தி பெற்றோர்

போர்மேவுமழுவேந்தும் பூவணத்தெம் புண்ணியன் பொற்கோயினண்ர்ஞ்

சீர்மேவு திருத்தொண்டர் சேவடிகடினம் பணிந்து சிந்தை செய்வாம்

கடவுள் வாழ்த்து முற்றியது

ஆகச் செய்யுள் 20

*****

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book