22

ஏழாவது

பாற்கரபுரச் சருக்கம்

629 தன்னுயர்தவத்தின் மிக்கசவுநகமுனிவவன்பான்

மன்னியவுற்பலாங்கிவண்கதைவகுத்துரைத்தாம்

பன்னுபாற்கரபுரப்பேர்படைத்ததுபகர்வமென்னா

வின்னருட்சூதன்வேதவியாதனையிறைஞ்சிச் சொல்வான்

630 காசினியிடத்து மேலாங்காசிபன்றனக்குமிக்க

வாசிலாவழகுபூத்தவணியிழையதிதியென்பா

டேசுறநிவந்துவாளிற்செறியிருள்விழுங்கியெங்கும்

வீசுசெங்கதிரோன்றன்னை மேதினிவிளங்கவீன்றான்

631 எல்லையில்புகழ்சேர்தொட்டாவீன்றருளிலவச்செவ்வாய்

முல்லைசேர்வனமுருந்தின் முகிழ்நகைவயங்குகொங்கை

நல்லசஞ்சையேயென்னுநண்ணருங்கற்பகஞ்சேர்

வல்லியைப்பரிதிவானோன் மாமணம் புரிந்தான்மன்னோ

632 குன்றெனத்திரண்டெழுந்தகுங்குமக்குவவுத்தோளின்

மன்றலந்தொடைசேர்நல்வைவச்சுதன்றனையும்வன்கட்

டன்றனிப்பக?ர்வெற்றித்தருமராசனையுநீலந்

துன்றுமெய்யமுனையென்னுந்துடியிடைதனையுமீன்றாள்

வேறு

633 பேசியவந்தப்பெண்கொடியென்னும்ப்ரபையென்பா

டேசுறுசெங்கதிரைத் தொழுதெய்வமெனக்கொள்வாள்

வீசுசெழுங்கதிர் வெம்மையினாற்றலண்மேவாளாய்

நேசமுடன்றன்னிழறானாகநினைந்திட்டாள்

634 அந்தநிழற்றனதங்கமதாகவணங்கேநீ

யிந்தவிருத்தமியம்பலையென்னவிசைத்திட்டே

சிந்தைமகிழ்ந்துசெழுங்கதிரோனுளஞ்சேமித்து

வந்துரைதந்தனடந்தையிடத்தினில்வரலாறே

635 தன்மகடன்னிலைகண்டுவெகுண்டுதடந்தோளான்

வன்னமயிற்பெடையன்னகுலக்கொடிமாதேகே

ணின்னுறுகேள்வனையன்றியெனில்லிடைநீசேற

லுன்னகமிந்நிலையொல்லையினேகெனவுரைசெய்தான்

636 அம்மொழிகேட்டலுமக்கணமங்ஙனகன்றந்த

வெம்முனைவேல்விழிமின்மனைமேவிடவெருவுற்றே

கொம்மைகொள்பேடுறுகொய்யுளையுருவங்கொண்டந்தச்

செம்மைதரும்புகழுத்தரகுருவது சேர்கின்றாள்

637 சேர்ந்தலர்செங்கதிர்வானவன் வெம்மைதிளைப்பாளாய்ச்

சார்ந்தலரும்பொழினின்றுமுதிர்ந்துலர்சருகார்ந்து

கூர்ந்தகடுங்கதிரோனையுளத்திற்கொண்டந்த

வார்ந்தகருங்குழன்மாதுதவஞ்செய்துவருநாளில்

638 வார்தருபூண்முலைவாள்விழியாமடமயில்செய்த

தேர்வரிதாகியபட்டிமையிறையுந்தேரானா

யார்கலிவேலைமுகட்டினில்வந்தெழுமழல்வெய்யோன்

றார்குழன்மேவியசாயையையன்பிற்சார்ந்துற்றான்

639 மருவியசாவருணீயெனுமெட்டாமநுவேந்தன்

றரைபுகழ்தரவருமொருசனியீசன்றம்மோடும்

பரவருமிகுபடவரவகலல்குற்பணியின்சொ

லிருள்பருகியகுழலுறுபுத்திரியையுமீன்றாளாய்

640 முன்னவடானருண்மூவர்கடம்மையுமுனிவுற்றே

பின்னவடானருண்மைந்தர்கள் பாலருள்பெருகுற்றா

ளன்னதுகண்டுமறிந்திலன்முன்னவனனுசன்றான்

புன்மதிகொண்டுபுகன்றகடுஞ்சொல்பொறானாகி

641 தாயெதிர்வந்தவனையிடறிடவொருதா?க்கி

நீயிதுசெய்யநினைந்தனைநின்றாண்முரிகென்றே

யாயவனங்கணகன்றிடவவ்வந்தகனைத்தா

னேயெனுமுன்னமிசைத்தனளந்தவிருஞ்சாபம்

642 மாதுரைதந்துமுனிந்துவழங்கியவன்சாபந்

தாதையுணர்ந்திடவந்தகன்வந்தது சாற்றக்கேட்

டேதமின்மைந்தர்களேதுசெய்கிற்பினுமீன்றோர்க

டீதுறுமாமொழிசெப்பிடினங்கதுதீதாமால்

643 குரும்பைமுலைக்குயின்மென்மொழியிட்டகொடுஞ்சாபம்

பொருந்துபுழுக்களருந்தசையுண்டுனபொற்பாதந்

திருந்துகவென்றருண்மைந்தனொடங்குரைசெய்தற்பி

னருந்ததிநேர்தருகற்பினணங்கையடைந்தானால்

644 அந்தக்காலத்தலர்கதிர்கொண்டேயகல்வானில்

வந்திப்புவியில்வல்லிருள்சீக்குமார்த்தாண்டன்

சிந்தைக்கெட்டாச்சித்திரமதனைத்தேரானாய்ச்

சந்தக்கொங்கைத்தையலைநோக்கித்தான்சொல்வான்

645 மேயநம்மைந்தர்கண்மூவர்கடம்மைவெகுண்டிந்தச்

சேய்களையன்பினுவந்துரைசெய்தது செப்பென்பா

னீயெனலும்ப்ரபையன்றெனவஞ்சினணேர்நின்ற

சாயையெனும்படிசாற்றினள்கற்பின்றலைநின்றாள்

646 பொங்கியெழுஞ்சுடர்நின்னிலைகண்டுபொறாளாகி

யங்கவள்வைத்தெனையன்பினகன்றனளத்தன்பாற்

செங்கதிர்வீசுதிகழ்ந்தவருட்கடல்சேரெந்தா

யிங்கடியன்பிழைநீபொறுத்தாண்டருளெனநின்றாள்

647 தன்னிகர்சாயையெனுங்கொடிசாற்றியமாற்றங்கேட்

டந்நிலையின்கணறைந்திலனொன்றுமருஞ்சாப

முன்னரிதாகியபொங்கொளியாவுமொடுக்கிச்சொற்

றென்னுலகம்புகழ்மாதுலன்மாமனைசேர்ந்தானால்

648 எல்லொளிவானவனென்னொருமடமானெங்குற்றா

ளொல்லையினீயிதுசொல்லெனவுத்தரகுருவுற்றே

யல்லடுநின்கதிர்வெம்மையினாற்றலளாயோடிப்

பல்குதவந்தனையாற்றினளென்னலுமப்பானு

649 குன்றலிலாவியல்கொண்டதொராண்மாவாயேகித்

துன்றியமனையைக்கண்ர்றவெண்ணீர்த்துளிதானு

மொன்றியவிருதொளைநாசிகைவழிதரவொழுகுற்றே

பின்றொடர்காலைமருத்துவரிருவர்பிறந்தார்கள்

650 அன்னநல்வேலையினலர்கதிர்வெய்யவனன்பாலே

நின்னையடைந்தனனின்கணவன்யானீயஞ்சே

லென்னலுநற்றவமெய்தலினிரவியொடின்புற்றாண்

மின்னனெறிவிரதமிழைத்தலின்வெம்மையின்வீடுற்றாள்

651 வீடுற்றந்தவிளங்கிழையுந்திகழ்வெய்யோனுங்

கூடுற்றன்பின்முயங்குபுதன்பதிகொண்டேய்வா

னாடுற்றன்பினனாகதலத்திடைநண்ர்ங்காற்

றேடுற்றங்கணடைந்தனர்பண்ணவர்திரளோடும்

652 தேவர்கள்கந்தருவத்தவரேனையர்செகமெங்கு

மேவுமநுக்கிரகந்தருவெம்மைவிருப்பாலே

யோவறுசெங்கதிர்வானவன்மேவுவப்பிற்கூய்ப்

பூவுலகம்புகழ்பொங்கிடவாசிபுகன்றார்கள்

653 சட்டகமன்னியசர்ச்சரையைத்திகழ்சாணைக்கட்

கட்டழகுற்றிடமற்றையவும்பர்கடைந்தொப்ப

மிட்டனரப்பொடிவீழ்தலுமத்தலமெங்குந்தான்

புட்பவனம்பெயர்பெற்றதுபாற்கரபுரமென்றே

654 அப்பொடிவீழ்பதியெத்தனையுண்டத்தனைசீரார்

மெய்ப்பதியிற்றிருமேவியபூவணமேலாகுஞ்

செப்பருமப்புகழ்சேயிழையாரொடுதிகழ்வெய்யோ

னிப்புவனங்களியாவும்வழுத்தவியைந்துற்றான்

655 உத்தமமாகியவித்தலமுற்றுநலுபவாசம்

வித்தகநல்விரதஞ்செபமுண்டநமெய்த்தானம்

பத்தியினாலிவைபண்ணிலநந்தம்பலமாகுஞ்

சத்தியமாமிதுசத்தியஞானதவத்தீர்காள்

656 சுத்தமெய்ஞ்ஞானகோதயமாநீர்த்துறைமூழ்கித்

தத்துவசுத்திபிறந்திடுசவுநகதன்னேரா

மித்திகழ்பிரமகைவர்த்தத்தெழுபானைந்தாகு

மத்தகுபூவணமான்மியமறைதருமத்யாயம்

657 கருதரும்புகழ்மேவுபாற்கரபுரம்புகழ்காதைதான்

பருகுசெந்தமிழ்மேன்மையாற்பரவுபண்பொடுபாடுவோ

ரருளுடன் செவியூடுகேட்டவையுளங்கொடுதேர்குவோர்

திருமிகுந்திடுதேவரூர்தினமிருந்தரசாள்வரே

பாற்கரபுரச்சருக்கமுற்றியது

ஆகச்செய்யுள் 657

*****

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book