
தமிழகத்தில் மதுரையில் வசித்து வரும் ஸ்ரீனிவாசன் ஸம்பத், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் அலுவலகப் பிரிவில் பணியாற்றி வருபவர். சித்ரகுப்தன் என்கிற புனைப்பெயரில் ஆங்கில நாளிதழ், மாத இதழ்களில் வரும் அரிய கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து, வினவு தளம் வழியாக வெளியிட்டிருக்கிறார். இயற்பெயரில் தினமணி, தி இந்து (தமிழ்), தினமலர் போன்ற நாளிதழ்கள் மற்றும் கிழக்கு பதிப்பகத்திலிருந்து வெளிவந்த ஆழம் எனும் மாத இதழில் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். போக்குவரத்து அரங்கில் மாநில அளவிலான தொழிற்சங்க (கட்சிசார்பற்ற) நிர்வாகி. இவரது கல்வித் தகுதி முதுகலை-பொது நிர்வாகம், முதுகலை-மனித உரிமைகள், நிா்வாகம் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் குறித்த முதுகலை பட்டயத் தேர்ச்சி ஆகியவை. சென்னையிலிருந்து மாதந்தோறும் வெளிவரும் சட்டக்கதிர் எனும் சட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் சார்ந்த மாத இதழில் மொழிபெயர்ப்பாளராகவும் உள்ளார்.