"

9

இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை: அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் – பி.சாய்நாத்

கடந்த 16 வருடங்களில் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமாக விவசாயிகளின் தற்கொலைகள் இந்தியாவில் பதிவாகியுள்ளது

“விவசாய தற்கொலை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  ஓட்டுப் பொறுக்கி கட்சிகளும், நாட்டை ஆள்பவர்களும் இதன் மீது சிறிதும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.  இது தொடர்பாக பத்திரிகையாளர் திரு பி.சாய்நாத் அடிக்கடி எழுதி வருகிறார்.  சமீபத்திய புள்ளி விபரங்களின்படி விவசாயத்துறைக்கு  அமைச்சராக இருந்தவரின் மகாராஷ்டிரா மாநிலம் வெட்கி தலைகுனியும் நிலையில் உள்ளது என்ற வகையில் தொகுப்பான விபரங்களை வெளியிட்டுள்ளார்.

Chap18B

கடந்த 16 வருடங்களில் இரண்டரை லட்சத்திற்கும் (கால் மில்லியனுக்கும்) அதிகமாக, இந்தியாவில் பதிவாகியுள்ள விவசாய தற்கொலைகளில் பெரும்பாலானவை மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மற்றும் சட்டீஷ்கர் மாநிலங்களில் நடைபெற்றுள்ளது.

Chap8B

மருத்ராவ் தோகே என்ற இந்த விவசாயி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக தனது மனைவியின் தாலியை (மங்களசூத்ரா) அடகு வைப்பதற்காக கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி – படம் நன்றி thehindu.com

2010-ம் ஆண்டில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கையை  மேற்படி 5 மாநிலங்களில் முந்தைய வருட விபரங்களோடு ஒப்பிடுகையில் 2009-ல் 62 சதவீதமாக இருந்தது 2010ல் 66.49 சதவீதமாக உயர்ந்திருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரிவிக்கிறது.  2009-ம் ஆண்டோடு ஒப்பிடும் போது இந்த பெரிய மாநிலங்களில் உயர்ந்துள்ள தற்கொலை எண்ணிக்கைகள் விபரம்: மகாராஷ்டிரா(+ 269),  கர்நாடகா (+ 303), ஆந்திரப் பிரதேசம் (+ 111). தேசிய அளவில் உள்ள புள்ளி விபரங்கைள பார்க்கையில் கடந்த 8 வருடங்களில் விவசாயிகள் தற்கொலை என்பது சராசரியாக 30 நிமிடத்திற்கு ஒன்று என்ற விகிதத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

2008-ல் 14 மாநிலங்களில் 2010-ல் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் 4 மாநிலங்களில் 5 அல்லது சில எண்ணிக்கையில் குறைந்துள்ளது.  அதே சமயம் 2010-ல் கீழ்காணும் மாநிலங்களில் அத்தகைய தற்கொலைகள் பெரும் அளவில் குறைந்துள்ளது.  சதீஷ்கர் (-676), தமிழ்நாடு (-519), ராஜஸ்தான் (-461), மற்றும் குறிப்பிட்ட அளவு குறைந்துள்ள மாநிலங்கள் மத்தியப் பிரதேசம் (-158), புதுச்சேரி (-150), உத்திரப்பிரதேசம் (-108), மேற்கு வங்கம் (-61), மற்றும் குஜராத் (-65).  ஆனால் ஒட்டுமொத்த நிலவரம் என்பது கவலையளிக்கும் விதமாகவே உள்ளது.

1995-ல் முதன் முதலாக தேசிய குற்றங்கள் பதிவு அமைப்பு என்பது விவசாய தற்கொலைகளை பட்டியலிட்டது.  இந்த விபரங்களில் மேற்சொன்ன 5 பெரிய மாநிலங்கள் 56.04 சதவீதத்தை தன்னகத்தே கொண்டிருந்தது.  2010-ல் 66.49 சதவீதமாக உள்ளது. மகாராஷ்டிராவின் கதை என்பது எச்சரிக்கையூட்டுவதாக உள்ளது.  அந்த மாநிலத்தில் 1995 முதல் 2002 வரையிலான காலத்தில் 20,066 விவசாயிகள் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.  அடுத்த 8 ஆண்டுகளில் இதே மாநிலத்தில் இந்த எண்ணிக்கை30,415 என உயர்ந்துள்ளது.  பின்னால் உள்ள காலத்தை பார்க்கிற போது வருடத்திற்கு 1155 வீதம் இந்த மாநிலத்தில் மட்டும் தற்கொலை எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.  குறிப்பாகச் சொல்லப்போனால் இந்த காலத்தில்தான் பிரதம மந்திரி நிவாரண உதவிகள், முதலமைச்சர் நிவாரண உதவிகள் மற்றும் 2008-ம் ஆண்டு கடன் தள்ளுபடிகள் என்ற நடவடிக்கைகளுக்கு தொகைகள் அதிகம் ஒதுக்கப்பட்டது.

இந்த 14 ஆண்டுகாலத்தில் இடைவெளியே இல்லாது தொடர்ந்து விவசாயிகள் வாழ வழியில்லாமல் போன இதே மகாராஷ்டிரா மாநிலம் தனிநபர் வருவாய் கணக்கீட்டில் முதல் இடத்தை பிடிக்கும் அளவிற்கு உயர்ந்ததாகவும் சொல்லப்பட்டது.  ஒட்டுமொத்தமாக ரூ 74,027 என பார்க்கும் போது மிகச் சிறிய மாநிலங்களான ஹரியானா மற்றும் கோவாவிற்கு பின்னர் இடம் வகிக்கிறது இந்த மாநிலம். மத்திய விவசாய அமைச்சர் இந்த மாநிலத்திலிருந்துதான் தேர்வு செய்யப்பட்டுள்ளதோடு,  சொல்லப்பட்ட 10 ஆண்டுகளில் 6 முறை இந்த பதவி இந்த மாநிலத்தவருக்கு கிடைத்துள்ளது.

 __________________________________________________

 நன்றி திரு பி.சாய்நாத், தி இந்து நாளிதழ்

 தமிழில் சித்ரகுப்தன்

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

தொழிலாளர் இல்லாத வளர்ச்சியா? Copyright © 2016 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.