6
வெளிநாடு போகப் போறியா! எதுக்கு? எனக் கேட்டவனை அண்ணாந்து பார்த்தாள் நிர்மலா. அவளது பளபளப்பான உருண்டையான முகம் காலை வேளையில் அவனை ஏதோ உலகத்திற்கு அழைத்துச் செல்வது போல் தோன்றி தோளை இறுகப் பிடித்தான். அவளோ, அவனது பிடியை மறுத்து விலகிச் சிரித்தாள்.
குமார் எங்கே? அவனைப் படின்னு சொல்லி அரைமணிநேரம் ஆகுது! ஆளே காணோம்……… எங்கே இவ ஒருத்தன் டாக்டருக்குப் படின்னு சொல்லி படிக்க வச்சேன். ஆனா ….இவனோ ரிசர்ச் பண்றேன்னுட்டு …….டாக்டருக்கே படிக்க மாட்டேன்னுட்டான். சின்ன வயசுலர்ந்தே அவனுக்கு எதையாவது ஆராய்ச்சி பண்ணனும்னு ஒரே ஆசை. அதுக்கு வசதியா அவங்க மேடம் அமைஞ்சுட்டாங்க….
குமாருக்கு மலேசியால லைப்ரரில ஒரு வேலை இருக்கு. அதை முடிச்சுட்டு மலேசியா முருகன் கோவிலப் பாத்துட்டு வரலாம்னு ஒரு ஐடியா.
நீங்களும் வர்றீங்களா?
நோ.. ஐயம் பிஸி இன் மை பிசினஸ். இதெல்லாம் நீதான் பாத்துக்கணும்.கணவன் சம்பாதிக்கணும். மனைவி வீட்டைப் பாத்துக்கணும். குழந்தையைப் பாத்து வளக்கணும். அது தான் நல்லது. பிஸினஸ விட்டுட்டு உங்கூட வந்துட்டு..அதை வாங்கினியா! இதை வாங்கினா என்ன அப்படின்னு கேப்ப…
எந்த உலகத்துல இருக்கீங்க?
அங்க கிடைக்கற எல்லா ஐட்டம்சும் இங்கே கிடைக்குது. இதைப்போய் யாராவது சுமப்பாங்களா? தேவைக்கு அதிகமா வீட்டுல எதையும் அடைக்கக் கூடாது. அது ஒரு பெரிய வியாதியாயிடும். பாக்கறதையெல்லாம் வாங்கற சராசரிப் பொண்ணு நான் இல்லன்னு தெரிஞ்சும் என்னை இப்படி கேட்டீங்க?
எல்லாம் சும்மா ஒரு பேச்சுக்குத் தான் சொன்னேன். ஒண்ணும் தப்பில்லையே! என ஷூ லேசைக் கட்டியபடி, இந்த சாக்ஸ் ரெண்டும் பழசாயிடுச்சு! இன்னைக்கு நீ பர்சேசுக்கு எப்படியும் வெளியே போகும்போது எனக்கு வாங்கிட்டு வந்திடு!
ஆனா பணம் கொடுத்திடணும்! வீட்டு செலவு தனி! என்பணம் தனி! பிஸினஸ்மேன் கிட்ட கொடுத்தா எல்லாத்தையும் போட்டு ரோல் பண்ணுவீங்கன்னு தெரியாதா என்ன?
சிரித்துக் கொண்டே எவ்வளவும்மா! இந்தா கார்ட்ல எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்கோ! ஆனா கணக்குல எழுதிடு! அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சம்மா! பாத்து நடந்துக்கோ! உனக்கு ஆஃபிஸ் என்னாச்சு! நாலு நாலாச்சு! நீ சிஸ்டத்துல வேலை பாத்து….. வீட்டுல உட்கார்ந்தாலும் எதாவது செஞ்சுக்கிட்டே இருப்ப! வேணும்னா இன்னைக்கு மானேஜரைப் பாத்துக்கச் சொல்லிட்டு உங்கூட வரட்டுமா? முகத்தில் தெரிந்த வாட்டத்தை உணர்ந்து கேட்டான். ஒரு வாரம் லீவு எடுத்திருக்கேன். ஆடிட்டிங் நேரம் லீவு போடக்கூடாது தான்….. சின்ன மனசு உரசல்…சரியாயிடுச்சு….இருந்தும் எங்கே யாருக்காக இத்தனை வேலை பாக்கறமோ அவங்களுக்குப் போய்ச் சேரலை..அப்படிங்கற வருத்தத்துல தான் இப்பிடி.. ப்ச்…வெளியே போய்ட்டு வந்தா சரியாப் போய்டும்…..இல்ல ஒரு நாளும் இப்படி நீ இல்ல…
ஜஸ்ட் எல்லாமே ஒரே மாதிரி இயங்கறதில்ல இல்லையா? அப்படின்னு மேலிடத்துலருந்து ஒரு ஆறுதல். அதுல தான் லீவு எடுத்திருக்கேன்.
என்னைக்கு ஃப்ளைட்?
நாளைக்குக் காலைல போறேன். அரேஜ்மெண்ட் ஆஃபிஸ்ல ரெண்டு பேருக்கும் பண்ணிக் கொடுத்துட்டாங்க! முத முதல்ல போறேன்! அது தான் உங்க கூட போகணும்னு தோணுது!
அது தான் நம்ம பையன் வர்றான்ல!
இங்க பாருங்க! தாய் தகப்பன் உறவு பொண்ணுக்கு கடைசி வரை கிடையாது. மகன் மகள் உறவும் அப்படித்தான்!
கடைசி வரைக்கும் கூட வர்றது இந்த திருமண உறவு மட்டுந்தான். இதுல ஏன் நிறைய டைவோர்ஸ் வருதுன்னு தான் எனக்குத் தெரியல….
காரணம் நான் சொல்லட்டா….அன்னைக்கு பிரகதீசுவரர் கோவில்ல பாத்தோம் இல்லையா? கணவன் மனைவி தன்னுடைய பிரச்னையை தனிமைல உட்கார்ந்து பேசித் தீத்துக்கறதை!
ப்ச்….உஷ் அதெல்லாம் சில பேருக்குப் புரியறதில்ல….உட்கார்ந்தாலே சண்டைதான்..எதுத்த வீட்டப் பாருங்களேன். ரெண்டும் வேலைக்குப் போகுது…..ஒரே சண்டை பக்கத்துல இருக்கற கிரீன் கலர் கேட் போட்ட வீட்ல அந்த லேடி படிப்புன்னு சொல்லி ஒரு வருடந்தான் வீட்ல இருந்தாங்க….. ஆனா அது வேற ஏதோன்னு தெரிஞ்சுது…வந்து ஒன்றரை வருஷம் தான் ஆகுது… எங்கேயோ போய்ட்டு போய்ட்டு வந்தாங்க….
வேலைல அவங்க இல்லன்னதும் பக்கத்துல இருக்கற வீட்டுல கூட அவங்கள கிண்டலா சிரிக்குதுங்க. கடைசில பாத்தா அவங்க லைப்ர்ரிக்கு போய்ட்டு வர்றத ஒரு நாள் பாத்தேன். பெரிய படிப்பு எவ்வளவோ படிச்சுருக்காங்க.. இங்க வந்து ரெண்டு பேரும் இருக்காங்க! குழந்தைகளை ஊருல படிக்க வச்சுருக்காங்கன்னு சொன்னாங்க! இத்தனை வருடம் ஆகியும் அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா தான் சாப்பிடறாங்க! பேசிக்கறாங்க! வாரம் ஒரு முறை தவறாமல் வெளியே போறாங்க! இருந்தா ரெண்டு பேர் மாதிரி வாழணும்னு குமாருக்கு நானே அட்வைஸ் செஞ்சிருக்கேன்.
அவன் என்ன சின்ன பையன் அவங்கிட்ட போய் இதெல்லாம்?
நீங்க வேற அவ இரகசியமா எங்கிட்ட என்ன கேட்டான் தெரியுமா? என்று இரகசியமாகச் சிரித்தாள்.
அவனோ, உஷ்…எனக் கை காட்டியபடி நின்ற ஃபோட்டோவை மௌனமாகப் பார்த்தான். அது தான் இறந்துடுச்சே! அப்பறம் என்ன அதைப் பத்தி சிந்தனை! பெத்தவ நானே தலை முழுகிட்டேன்.
இவனுக்கு கல்யாணம் எப்பன்னு கேக்கறான்?
நீ என்ன சொன்ன?
உன் அக்கா மாதிரி ஓடிப் போய்டாதடா! லவ்வுன்னா சும்மாடா!
நானே உனக்குப் பாத்து கல்யாணம் செஞ்சு வக்கறண்டா! அப்பிடின்னு சொன்னேன். பொண்ணு பாத்துட்டியான்னு கேக்கறான்!
எல்லாம் சினிமா பண்ற வேலை.
அவனுக்கும் வயசாகுது! ஆடி வந்தா 24 முடியுது. இப்பவே பாக்கணும்ல.
சரி! நான் கிளம்பறேன். நைட் பேசலாம்.
ஓகே!
பர்சேசுக்கு எங்கம்மா போலாம்?
நல்லி போலாம்மா! அங்க தாம்மா உனக்கு சேரீஸ் எல்லாம் எடுப்பா இருக்கும். அம்மா ஒண்ணு சொன்னா கோச்சுக்க மாட்டியே!
என்னப்பா! நீ ஏம்மா வெளியில வரும்போது மட்டும் புடவை கட்டுற! வீட்லய கட்டேம்மா! உன்னை நைட்டில பாக்க எனக்கு பிடிக்கல.நைட் மட்டுந்தாம்மா நைட்டி.
உடை எங்கள் இஷ்டம். அதை நீங்க எப்படிப்பா சொல்ல முடியும்?
காலம் உங்கள மாதிரி ரொம்ப அட்வான்ஸ் இல்லம்மா! எல்லாருமே உலகத்துல இன்னமும் மாறலை.
சரி மாறிக்கிறேன். போதுமா பெரிய மனுஷா!
ஹூம்! நான் சொன்னாத் தான் கேக்குற அப்பா சொன்னா ஏம்மா கேக்க மாட்டேங்கறீங்க!
டேய்! அவரு உங்கம்மா இருக்கறப்ப……டேய்..டேய் ஏண்டா ஓடுற..
எனக்கு காது ரெண்டும் புளிச்சுப் போச்சு…..
பொம்பளைங்க கம்ப்யூட்டர் மாதிரின்னு சொன்னது சரியாப் போச்சு…
எப்பிடி…. தோ வர்றேன் பாரு….என அவனை அடிப்பது போல விளையாட்டுக்கு எழுந்தாள்.
வாசலில் ஏதோ நிழலாடுவது போலத் தெரிய சின்னஞ் சிறு சிறுமியைப் பார்த்தவுடன்,அவளுக்கு ஏதோ பழைய நினைவுகள் வந்தன.
ராகவியோட அம்மா நீங்க தானா! வாசலின் நிலைப்படிக்குக் கோலமிட்டு நிமிர்ந்த ஷண்பகத்திற்கு வெள்ளைத் தொப்பி மாட்டிய குறுந்தாடி இளைஞன் வித்யாசமாகத் தெரிந்தான். பெருமாள் கோவில் அக்ரகாரக் குடியிருப்பில் தெருவில் எத்தனையோ வேலை வெட்டி இல்லாததுகள் உக்காந்திருக்குமே! அதைத் தாண்டி எப்பிடி இங்க…என யோசித்தாள்.
நீங்க யாருன்னு…
உள்ள போய் பேசலாமா! என்றவளை இடைமறித்தாள்.
நான் அதோ பார்க்குக்கு வர்றேன். அங்க பேசலாம்.அங்க போய் இருங்க.
எனக் கூறியவளை வெறித்தான் அவன்.
பெயரைக்கூடக் கேக்கலியே! எனக்கு ஒன்றரை கழுத வயசாகுது! அந்தப்பையன் எம்பையன் மாதிரி! ஆனா, இந்த உலகத்து கண் காமாலைக் கண்ணாச்சே! எனத் திரும்பியவள் சன்னலின் ஓரம் ராகவி அந்த இளைஞனைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்
மனதிற்குள் ஆயிரம் வாட்ஸ் அடித்ததைப் போன்ற உணர்வு மண்டையில் தாக்கியது போன்ற அதிர்ச்சியுடன் ராகவி இங்க வா! எனக் கூப்பிட்டாள்.
அரைக்கால் பேண்டுடன் லூசாகப் போட்ட பனியனை இழுத்துக் கொண்டே காதில் போட்டிருந்த வளையம் ஆட இளமைத் துள்ளலுடன் ஓடி வந்தாள்.
அவன் யாரு ராகவி? எங்கூடப் பேசணுன்னு சொல்றான்!
அவன் பேரு அப்துல். நாங்க ரெண்டு பேரும் நிக்காஹ் செஞ்சுக்கறதா முடிவு செஞ்சுருக்கோம்.
நிக்காஹ்ஹா ………அதிர்ந்தாள் ஷண்பகம்.
அப்படின்னா முடிவு செஞ்சுட்டீங்க! உனக்கு இன்னும் அந்த வயசு வரல.
அதான் உங்களக் கேட்டு செய்யலாம்னு வந்துருக்கார்!
ஒன்றும் பேசவில்லை ஷண்பகம். இதயத்தில் ஒருமுறை தொண்டைக்குள் சிக்கிக் கொண்ட பாசத் துகளை கஷ்டப்பட்டு விழுங்கிக் கொண்டு அப்பா உனக்குப் பிடிக்கும்னு லட்டும், ஜிஆர்டியில் ஜிமிக்கியும் வாங்கப் போயிருக்கார்மா! என்றாள் மெதுவாக.
இல்லம்மா! அவனை எனக்குப் பிடிச்சுருக்கு!
எனக்குப் பிடிக்கலம்மா! அவனைப் பத்தி நல்லா விசாரிச்சுட்டேன். ஒரு வாரமா உன்னை நான் பாத்துக்குட்டே தான் இருக்கேன்.
என்ன நீங்க இன்னும் போகலையா!
இல்ல! கார்சாவி என்னிடம் மாட்டிக்குச்சு! கொடுத்துட்டுப் போலாம்னு வந்தேன். அதுக்குள்ள இவ இப்படி………ஏற்கனவே பொண்ணப் பெத்தவன் எப்படி இருக்கணும்னு எனக்குத் தெரியும். அவன் சரியில்லம்மா! வேண்டாம்! விட்டுடு! உன்னை வித்துடுவா! ஸ்மகிள் பண்ற கூட்டத்துல கூலி வேல செய்யறாம்மா! வண்டியப் பாத்து மயங்கினியா? இல்ல அவன் அடிச்சிட்டிருக்கற பர்ஃப்யூமுக்கு மயங்கினியா?
என்னப்பா! காதல்னா என்னன்னே தெரியாத உங்ககிட்டப் போய் இதெல்லாம்!
குட்டிம்மா! உனக்கு கவுன் மாட்டி விட்டதுலருந்து பேண்ட் போடச் சொல்லிக் கொடுத்தவன் நானு! எனக்குத் தெரியும் எம் பொண்ணு எப்படின்னு?
அவங்கூட போறதுன்னா கிளம்பு! உள்ளே போறதுன்னா இரு.
கொஞ்சம்கூட யோசிக்காமல் ஸீ யூம்மா! பை..பை எனச் சென்றவளை ஷண்பகம் கண்ணில் நீர் கோர்க்கப் பார்த்தபடி தலைகுனிந்தாள்.
சடாரென நிகழ் உலகிற்குத் திரும்பியவள் இது என்ன! அதிசயித்தாள்.
கையில் பெரிய ஷாப்பிங் பை நிறைய நிறைய பொம்மைகள்.
யாரும்மா நீ?
நான் உங்க பக்கத்து வீட்டுப் பாட்டியோட தினேஷ் கூடப் படிக்கற பொண்ணு! எம் பேரு அஜிதா!
இன்னிக்கு எங்க ஸ்கூல் திடீர்னு லீவு! அப்பா ஆஃபிஸிருந்து வர லேட்டாகும். அதான் தினேஷ் என் வீட்டுக்கு வான்னு கூப்புட்டான்.
உள்ளே வான்னே கூப்புட மாட்டேளா!
இதென்ன இந்தப் பெண் நம்ம அக்ரகாரத்து பாஷை பேசறது என அதிசயித்தாள்.
வாம்மா குழந்தை! உனக்கில்லாத ரூமா?
பிஸ்கட் சாப்பிடறயா! கிட்டத் தட்ட ராகவியின் சாயலாகத் தெரிவதைப் போல் அவள் கண்ணுக்குத் தோன்றியது.
கண்ணை ஒரு கணம் தேய்த்து விட்டுக் கொண்டாள். கொடுத்த பிஸ்கட்டைப் பிளந்து நாக்கால் ஒரு சுழட்டி ஒரு விரலால் சாப்பிடுவது ராகவியின் குணம். இந்தக் குழந்தைக்கு எப்படி? வியந்தாள் ஷண்பகம்.
சந்தேகப்பட்டு ராகவியின் ஃபோட்டோ ஒன்றைப் பரணிலிருந்து வேகமாக எடுத்தாள். அஜிதாவிடம் வேகமாக அதைக் காட்டினாள்.
சீ! இந்தப் பொம்பளையா! இவ எங்கே இங்கே பாட்டி?
கண்ணில் நீர் வழிய ஷண்பகம் இது யாரும்மா? என்றாள்.
அவ என்னைப் பெத்துட்டுக் குப்பைத் தொட்டில போட்டுட்டு எங்கேயோ போய்ட்டாளாம்.
நான் அனாதை ஆஸ்ரமத்துல அப்பாட்ட வளந்தேன். அங்க இருக்கற எல்லாருக்கும் ஒரே அப்பா தான். அவரு ஒரு வேலையா ஆஸ்பத்திரிக்கு போயிருக்கார்.
வந்து கூட்டிட்டு போறேன்னு சொல்லியிருக்கார். ஆனா தினேஷைக் காணோம்.
வாசலில் நீளமான வெள்ளை அங்கியுடன் கையில் கனத்த புத்தகத்துடன் வந்தவரை ஏறிட்டுப் பார்த்தாள் ஷண்பகம்.
உங்களுக்கு இப்போ எல்லாம் புரிஞ்சிடுச்சாம்மா!
கண்ணில் நீர் வழிய எம் பொண்ணு எங்கே? இவ ஏன் அப்படிப் பேசுறா?
இவ கூட இருந்த ஆயாம்மா இவளுக்கு இப்படி சொல்லியிருக்காங்க….
எம் பொண்ணப்பத்தி எப்படித் தப்பாப் பேசுறா?
எயிட்ஸ் பாதிச்சவளோட பொண்ணுன்னு தெரிஞ்சா யாருமே இவளைச் சேத்துக்க மாட்டாங்களே! அதான்……
வெளியில் பொம்மையுடன் வெளியே நின்றிருந்த அஜிதாவைப் பார்த்தபடி பேசினார்.
அன்னைக்கு கிளம்பிப் போனப்ப தடுத்திருக்கணும்? நீங்க விட்டுட்டீங்க?
இப்ப உங்க பொண்ணு சாகக்கிடக்குறா! உங்களப் பாக்கணும்னு! வர்றீங்களா? இப்பவும் உங்க கணவர்கிட்ட கேட்டுத்தான் செய்வீங்களா?
பெரிய பிஸினஸ் மேக்னட்டாச்சே! உங்க கௌரவம் காத்துல பறந்துடுமே!
வீட்டைப் பூட்டிக் கொண்டு காரில் குமார் உள்பட அனைவரையும் உள்ளிழுத்துக் கொண்டு எந்த ஹாஸ்பிடல்? என்றாள் நர்மதா .
வேகமாகப் போங்க! இன்னமும் அரை மணி நேரம் தான் இருப்பாள்.
பெத்தவள் நான் இங்கிருக்க மகளைக் கடவுள் கூட்டிச் செல்லப் போகிறானா?
கண்ணில் நீர் நிறைந்திருக்க, அம்மாவைப் பார்த்த குமார், அம்மா விலகிக்க. நான் ஓட்டுறேன். அம்மா அப்பா எதுத்தாப்பல வர்றாரும்மா!
அப்பா மௌனமாக ஃபாதரைப் பார்க்க, நான் தான் உங்களுக்கும் சொல்லி அனுப்பிச்சேன். உங்க பொண்ணு பாக்க ஆசைப்பட்டா!
வண்டிக்குள் மௌனமாக ஏறி அமர்ந்தார்.
குமார் மடியில் அஜிதாவை உட்கார வைத்திருந்தான். அவள் முன்னிருந்த பட்டனைத் தட்டியவுடன் ராகவி பாடி பதிந்திருந்த குறையொன்றுமில்லை பாட்டு பாடத் தொடங்கியது.
பாட்டு முடிவதற்கும், ஹாஸ்பிடல் வருவதற்கும் சரியாக இருந்தது. இறங்கியவுடன் நர்ஸ் ஷண்பகத்திற்கு வழி காட்ட ஃபாதர் அஜிதா இங்கே வா! என்றார்.
அந்த இரண்டாவது ரூம் போய்ப் பாருங்கள்.
உள்ளே செல்ல 3 ஜோடி கால்கள் வேகமாக இயங்க ஆரம்பித்தன.
கட்டிலில் உடலோடு போர்த்திய வெள்ளைப் போர்வைக்குள் தெரிந்த ராகவி அறுபது வயதாகத் தெரிந்தாள்.
அப்பா! அம்மா! என்னை மன்னிச்சுடுங்க! என கையைக் கூப்பியபடி கண் அஜிதாவின் ஃபோட்டோவைப் பார்க்க வாய் கோணித் தலை சாய்ந்தவளின் அருகில் நர்ஸ் சென்றாள். அதற்குள் உயிர் யாரைத் தேடிச் சென்றதோ! வெளியில் ரோஜாப்பூக்களைப் பறித்து பொம்மையின் தலையில் வைத்துக் கொண்டிருந்த அஜிதாவின் அருகில் சென்ற ஷண்பகம், உன் அம்மா தூங்கறாங்க! அம்மா நல்ல அம்மா தான் உனக்கு யாரோ தப்பா சொல்லியிருக்காங்க! நீ அவங்கள பிடிச்சுக்கறியா? தூங்கறாங்கல்ல! பாட்டி அவங்களுக்கு டிரஸ் உடுத்திக் கூட்டிட்டுப் போகணும்.
எங்க பாட்டி! கண்ணில் வழிந்த நீரை வெளிக்காட்டாதபடி சாமி கிட்டம்மா! என்றாள்.
ரொம்ப நாளா உங்கம்மா சாமி கதைன்னா எனக்கு ரொம்பப் புடிக்கும்னு சொல்வா! சாமிகிட்டக்க அவ எல்லாரும் இருந்துட்டா என்னன்னு கேப்பா! அதாம்மா அவ ஆசைப்படி சாமிகிட்ட கூட்டிட்டுப் போறேன் என்றாள்.