17

அங்கே என்ன பார்வை?அதட்டினான் ராபர்ட்.

லூசி அவன் கேட்கும் கேள்விக்கு பதிலே சொல்லாமல் கார் கண்ணாடியின் வெளியே கையைப் பதித்து முத்தமிட்டு டாடா சொன்ன குழந்தையைப் பார்த்தபடி இருந்தாள்.

குழந்தை நம்ம பிரபு மாதிரி அழகாயிருக்குல்ல என்றாள்.

அதோ அந்த பஸ்சைப் பார்த்தாயா! எத்தனை பாசஞ்சர்ஸ் போறாங்க! அதுமாதிரிதான் லைஃபும். யாரும் கடைசிவரைக்கும் வர மாட்டாங்க! புரிஞ்சுக்கோ! என்று அலுத்துக்கொண்டான் ராபர்ட்.

அங்க விக்குற பொக்கே எனக்கு வேணும்.வாங்கிட்டு வர்றீங்களா!

இப்ப எதுக்கு அது?

என்னை முதல்ல ஆர்ஃபனேஜ்ல பார்க்க வந்தப்ப பொக்கே வாங்கிட்டு வந்தீங்க. அப்ப நான் கேட்டதுக்கு இதுல இருக்கற பூக்கள் ஒண்ணொண்ணும் வேறுமாதிரி இருந்தாலும் ஒண்ணா கட்டி வைச்சிருக்கறதுமாதிரி குடும்பம்னு சொன்னீங்கல்ல. இப்ப நினைவுக்கு வந்துச்சு….

நமக்கு இருக்கற உணர்வு ஏன் நம்மைப் பெற்றவர்கள்கிட்ட இல்லை ராபர்ட்.?…………………………

என்னை ஒரு குப்பைத்தொட்டி கொடுத்திச்சு…………………………..

உன்னை ஒருத்தி நேராக ஹோம்ல போட்டுட்டு போய்ட்டா…….

நீ ஃபாரீன்ல படிச்சே………அங்கே படிக்கிறப்ப என்னைப் பார்த்தாய்…பிடிச்சிருந்துச்சு ……..மோதிரம் மாத்தினோம்……..லைஃப்ல செட்டிலானோம்.

இயந்திர கதியில மலேசியாவுல வேலை கிடைச்சு பையன் பிறந்து பிரபுன்னு பேரு வைச்சோம்..பொக்கேவைப் பிடி…மீதியை மறந்துடு………..

நாம சென்னைல செட்டிலாயாச்சு……..காரணம் உனக்கு தமிழ் ரொம்பப் பிடிக்கும்……நீயோ..நானா செத்தா ஒண்ணும் பிரச்னை இல்லாத அளவு செஞ்சுட்டேன்.போதுமா………………கோபமாகப் பேச எழுந்த ராபர்ட்டின் நாக்கு லூசியின் முகத்தைப் பார்த்தவுடன் சாந்தமாக வார்த்தைகளை உதிர்த்தன.

என்றோ அவன் உன் ஹேரும்,கண்ணும் இந்தியனுக்குரியமாதிரி இல்லைன்னு சொன்னதை மனசுல நினைச்சு வருத்தப்படாதே…

சட்டெனக் கண்ணில் துளிர்த்த நீரை அடக்க இயலாமல் உதிர்த்தாள் லூசி.

ஏன் இதெல்லாம் நம்ம அப்பா,அம்மாவுக்குத் தெரியலை….?

தெரியலைம்மா….ஹூம் கொட்டினான் ராபர்ட்.

பாரு! நடந்தே கன்னிமராவரை வந்துட்டோம்.உள்ளே போகலாமா!

அந்த ஊஞ்சல் இருக்கற இடத்துக்குப் பக்கத்துல போய்டலாம். அங்கே ஜில்லுன்னு காற்று வரும் பாருங்க….சொர்க்கமே இதுதானோன்னு தோணும்……..

கிரீச்!கிரீச் எனச் சத்தம் கேட்க ஊஞ்சலின் பக்கம் கண் திருப்பினாள் லூசி.

சுடிதார் பெண் தனது குழந்தையை ஊஞ்சலில் ஆட்டி விட்டுக் கொண்டிருப்பதைக் கண்டாள்.

எனக்கும் அம்மா இருந்திருந்தால் இப்படித்தான் ………….இல்லையா ராபர்ட்.

பிரபு எனக்குக் குப்பைத் தொட்டிதான் சொந்தம்னு நினைச்சுக் கேட்டான் பாருங்க…..அதுதான் மனதெல்லாம் வலிக்குது…..

எனக்குன்னு ஒரு அம்மா படத்தை அவன்கிட்ட காட்டியிருந்தேன்னா அவன் பேசியிருக்கமாட்டான் இல்லையா?

அவன் ஃப்ரெண்ட் சர்க்கிள் அந்தமாதிரி…..

விதண்டாவாதம்தான் எல்லாம்…………… பெரியவனாய்ட்டான்ல….சொந்த விஷயங்கள்ல தலையிட முடியாதல்லவா!

நமக்கும் இதுதான் வசதி…..சொத்து எதையும் அவனை நம்பி கொடுக்கலை………கொடுத்தது பாசம்தான் இல்லையா!

ஏன் அந்த உணர்ச்சி நம்ம பெற்றோருக்கு இல்லை……?

இப்படியெல்லாம் நடக்கும்னு அவங்களுக்குத் தெரியுமா?

சிலபேருக்கு வாழ்க்கையே விளையாட்டாப்போச்சு………..

தாலாட்டறதுக்கு அம்மாவும்,கையைப் பிடிச்சு நடக்கறதுக்கு அப்பாவும் இருக்கற குடும்பத்துல பிறக்க வைன்னு கடவுள்கிட்ட விடாம பிரார்த்தனை செஞ்சுக்கோ…….அடுத்த பிறவியிலாவது கிடைக்கும்.இருக்கறவங்களுக்கு அதோட அருமை தெரியாம எத்தனை முதியோர் இல்லம் தொடங்கியிருக்காங்கன்னு……………. பேப்பர்ல பார்!

உனக்கு வேணும்னா சொல்லு….ஒரு அம்மா,அப்பா இவங்களை வீட்டுக்குத் தர்றாங்களான்னு கேட்டுப் பார்க்கறேன். அதான் இப்ப என்னால முடியும்.

உனக்கும் வயசு 45 ஆகுதுல்ல………… தைரியமா உன்னால ஏன் வாழ முடியலை? என ராபர்ட் பேசிக்கொண்டே நிமிர்ந்தான்.

எதிரே கூலிங்கிளாசைச் சுழற்றியபடி அச்சு அசலாக லூசியைப் போன்றே ஒரு பெண் டீஷர்டுடன் லூசியைப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

லூசி……லூசி…எதிரே பார்….உன்னைப்போலவே யாரோ…….சுரண்டிய ராபர்ட்டின் கையை விலக்கிவிட்டு நிமிர்ந்தாள் லூசி.

நீங்க யார்?

என்பெயர் ரோசி. என் அம்மா நர்ஸ். உங்களைப் பார்த்தபோது அம்மா உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க………..

யார் உங்க அம்மா? விருட்டென எழுந்தாள் லூசி.

அதோ! கார்ல கையை நீட்டுறாங்க பாருங்க…………..

எப்படித் தெரியும் என்னை?

அதுதான் முகம்காட்டுதே………….

சிலையானாள் லூசி.

ஒரு நிமிடம் காற்றுகூடத் தன் அசைவை நிறுத்தியதோ என நினைத்தான் ராபர்ட்.

என்ன செய்வதென்றே புரியாமல் நாக்கு குளற அப்பாவும் இருக்காரா? ……. இந்த அப்பா வேறே என்றாள் ரோசி. கலர்கலராய் சோப்புக்குமிழிகள் பறந்ததை யாரோ பாய்ந்து உடைத்ததுபோல உணர்ந்தாள் லூசி.

நம்ம போகலாம் ராபர்ட் என வேகமாக நடந்தவளைப் பிடித்து இழுத்தாள் ரோசி.

விடுங்க கையை! இத்தனை வருஷமா எங்கேயிருந்தீங்க?

என்பையன் ஒருத்தன் இருக்கான். எங்களுக்குப் பிறந்தவன்தான்.

கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு குழந்தைக்குத் தகப்பன்.

கேட்டால் இது பரம்பரையா வருதும்மா! எனக்கு தாத்தா,பாட்டின்னு யாராவது தெரியுதான்னு கேட்டான். இதோ! அவனை விட்டு விலகிட்டோம். தொடர்ந்து பேசாமல் மௌனமானாள் லூசி.

முறைதவறி நாங்க பிறந்துட்டாலும் முறையோடத்தான் வாழறோம்.உலகெங்கிலும் பெண்கள் இந்த விஷயத்துல வேறுபட்ட கருத்து இருக்கிறதுனாலதான் ஆண் இன்னமும் பெண்ணை அசிங்கமாவே பார்க்கிறான்.இது ஜஸ்ட் வாழ்ந்து முடிச்சுட்டுபோற விஷயம் இல்லை.

இரத்த பந்தம் இல்லையா! நீ வா லூசி நாம் போகலாம்! என லூசியின் கையைப் பிடித்து வேகமாக நடந்தான் ராபர்ட்.

காம்பவுண்ட் வாசலில் அடித்த நாற்றத்தையும்மீறி குப்பைத்தொட்டியில்

ஒரு பெண் நாய்க்குட்டியுடன் குப்பையைக் கிளறியபடி இருந்ததைப் பார்த்தபடி இருந்தாள் லூசி. யாரும் எடுக்கலைன்னா என் கதியும் இதுதான் இல்லையா…………….!

குப்பையிலிருந்து பறந்த காகிதம் நேராக எதிரில் இருந்த கோவில் கோபுரத்தில் பறந்து ஒட்டிக்கொண்டது.

License

Share This Book