"

9

இந்தக் கட்டுரைத் தொடரில், நம் சாதாரண புலன்களுக்கு எட்டாத நுண் பொருட்களை ஆராயும் ராட்சச எந்திரங்கள், அதற்குப் பின்னுள்ள ஆராய்ச்சி முறைகள் மற்றும் உந்துதல்கள் பற்றி ஓரளவிற்கு அலசினோம். இன்று, உலக விஞ்ஞானிகள் சேர்ந்து ஆராயும் அளவிற்கு இது ஒரு சிக்கலான ஆராய்ச்சியாக மாறிவிட்டது. இத்தகைய ஆராய்ச்சிகளுக்கு உடனே சமுதாயப் பயன் இல்லையெனினும், இவை மனிதனின் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியம். இன்றைய பெரிய விஞ்ஞானத்தில் (Big Science) இது ஒரு முக்கிய பங்கு வகிக்கும் ஆராய்ச்சி. இதில் நல்ல விஷயம் என்னவென்றால், மிகவும் திறந்தவழியில் நடக்கிறது. மேலும் மூடுமந்திரம் மற்றும் வியாபார நோக்கம் இல்லாமல் இருப்பது மிகச்சிறந்த அணுகுமுறை. இதுபோன்ற பல துறைகளிலும் பெரிய விஞ்ஞானம் வளர்ந்தால், நம்முடைய எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று நம்பலாம். இத்தகைய பெரிய விஞ்ஞான முயற்சிகளுக்கு உலக அரசாங்கங்கள் பலவித தடைகளையும் விதித்தாலும், இது போன்ற பன்னாட்டுக் கூட்டு முயற்சிகள் சமுதாயத்திற்கு நல்ல முன்னேற்றங்களைத் தரும் என்று நம்ப வாய்ப்புள்ளது.

இக்கட்டுரைத் தொடர் எழுத பலவித ஊடகங்கள், இணையதளங்கள் மற்றும் புத்தகங்கள் உதவியுள்ளன. இங்கு குறிப்பிட்டுள்ள புத்தகங்கள், இளைஞர்களுக்கு பரிசாக அளித்தால், எத்ரிகாலத்தில் இதுபோன்ற சிக்கலான விஞ்ஞானப் பிரச்னைகளை தீர்க்க அவர்கள் உதவலாம்.

புத்தகங்கள்

The Particle Odyssey மிக அருமையான புத்தகம். இந்த கட்டுரைத் தொடருக்காக மிக அதிகமாக உபயோகித்தது. இந்தத் துறைக்கு வரத் துடிக்கும் இளைஞர்கள் படிக்க வேண்டிய புத்தகம். அவசியம் துடியான இளைஞர்களுக்கு பரிசளிக்கலாம்.

Genius: The Life and Science of Richard Feynman அணு பெளதிகம் பற்றிய மேல்வாரியான புத்தகம் – இது ஃபைன்மேனின் வாழ்க்கை வரலாறு. குவாண்டம் மின்னியக்கவியல் பற்றிய புரிதலுக்கு உதவலாம்

The Strangest Man அணு விஞ்ஞானி டிராக்கின் வாழ்க்கை வரலாறு. புதிய அணுத்துகள் தேடல் மற்றும் 1930 –களில் நடந்த பல சர்ச்சைகள் பற்றி அறிய உதவும்

The Universe in a Nutshell பிரபஞ்ச உருவாக்கம் மற்றும் அதன் இன்றைய நிலை பற்றிய புத்தகம். இதில் உள்ள சில கோட்பாடுகள் எனக்கு உடன்பாடில்லையானாலும், வின்வெளி பெளதிகம் பற்றிய எளிய புத்தகம்

Dreams of a final theory எல்லா வித இயற்கை சக்திகளையும் புரிந்து கொள்ளும் முயற்சி எவ்வளவு கடினமானது என்பதை மிக எளிமையாக விளக்கும் விஞ்ஞானி ஒருவர் எழுதிய அருமையான புத்தகம். பெளதிக மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்.

இணையதளங்கள்

http://www.lhc-closer.es/php/index.php?i=1&s=3&p=1&e=0 CERN – னின் முயற்சிகளை எளிமையாக விளக்கும் அருமையான இணையதளம்.

http://www.physicsforidiots.com/particlesandforces.html பல வித அணுத்துகள் சக்திகளை எளிமையாக விளக்கும் இணையதளம்.

http://www.wisegeek.com/what-is-an-atom-smasher.htm அணுத்துகள் வேகப்படுத்தும் எந்திரங்கள் பற்றிய ஒரு எளிய முன்னோட்டம்

http://science.howstuffworks.com/atom-smasher3.htm படங்களுடன் அணுத்துகள் வேகப்படுத்தும் எந்திரங்கள் பற்றிய விளக்கம்.

http://www.thegreatplanet.com/megastructures-atom-smasher-nat-geo-documentary/ LHC பற்றிய ஒரு விவரணப்படம்

http://public.web.cern.ch/public/en/lhc/lhc-en.html CERN – னின் எளிமையான LHC பற்றிய விளக்கம்

http://www.neatorama.com/2008/09/12/10-things-about-the-large-hadron-collider-you-wanted-to-know-but-were-afraid-to-ask/ LHC பற்றிய சுவாரசியமான விஷயங்கள்

http://omegataupodcast.net/2012/04/93-the-standard-model-of-particle-physics/ நியமான அணு அமைப்பு மாடல் பற்றிய விளக்கம்

http://www.particleadventure.org/index.html அழகாக இத்துறை பற்றிய குழந்தைகளுக்கான விளக்கங்கள்

http://www.uslhc.us/Images/Accelerator_Images ராட்சச அணுத்துகள் வேகப்படுத்தும் எந்திரங்களின் புகைப்படங்கள்

இன்னும் இதைப் போன்ற இணையதளங்கள் பல்லாயிரம் இருக்கின்றன. விக்கிபீடியாவும் ஒரு அருமையான தகவல் தளம்.

விடியோக்கள்

http://www.youtube.com/watch?v=6BxyqFK2KRI சைக்லோட்ரான் இயக்க முறையை விளக்கும் விடியோ

http://www.youtube.com/watch?v=R7OKPaKr5QM பழைய அணுத்துகள் மாடலை விளக்கும் விடியோ

http://www.youtube.com/watch?v=rgLdIly2Xtw&feature=player_embedded#! LHC பற்றிய நல்ல விடியோ

http://www.youtube.com/watch?v=1sldBwpvGFg LHC இயங்கு முறையை எளிமையாக விளக்கும் அனிமேஷன் விடியோ (இதை கட்டுரையில் பார்த்திருப்பீர்கள்)

http://www.youtube.com/watch?v=V0KjXsGRvoA நியமான அணு அமைப்பு மாடல் பற்றிய CERN – னின் விளக்கம். (இதை கட்டுரையில் பார்த்திருப்பீர்கள்)

http://www.youtube.com/watch?v=649iUqrOKuE ஹிக்ஸ் போஸான் பற்றிய CERN விடியோ

http://www.youtube.com/watch?v=Wk5mdMSvjvY CERN –னின் வரலாறு விடியோ

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

விஞ்ஞான முட்டி மோதல் Copyright © 2015 by ரவி நடராஜன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.