"
ஒரு ஊரில் ஒரு பொறுக்கி இருந்தான். எந்தப் பெண்களானலும் தன்வலையில் வீழ்த்தி விடுவான். அவனைத் தட்டிக்கேடக ஊரில் உள்ள ஒரு ஆம்பிளைக்கும் தகிரியம் இல்லை.

அதனால் அந்த பொறுக்கியும் தன்னுடைய பொறுக்கி தனங்களை தொடர்ந்து இடையூறு இல்லாமல் பாலோ செய்து வந்தான்.

ஒருநாளில் அவ்வூர்க்கு ஒரு சாமியார் வந்தார். ஊரிலுள்ள ஆம்பிளைகளெல்லாம் அந்த பொறுக்கியை பற்றி சாமியாரிடம் முறையிட்டனர். அந்த பொறுக்கிக்கு ஏதாவது தண்டனை வழங்கி, மனைவி மார்கள் தங்களைவிட்டு பிரியாதவாறு ஏதாவது செய்யுமாறும் வேண்டினர்.

அந்தச் சாமியார் அந்தப் பொறுக்கியை சந்தித்தார்.அவனோ,அந்தச் சாமியாரை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருந்தான்.சாமியாரே அவனிடம் பேசினார்.

“காமும் காதலும் வருகிறதா” ?.. என்றார்.

“ஆமாம்” என்றான்.

அதற்கு வடிகால் உண்டு,..என்றார்.

பொறுக்கிசொன்னான்..அந்த வடிகாலைத்தான் எனக்கு தெரிந்த வழிகளில் தீர்த்து கொண்டு இருக்கிறேன்.

“ அந்தக் கமாத்தையும், காதலையும் உன் மனைவிடம்தான் காண்பிக்க வேண்டும்”, ஊரில் உள்ள பெண்களிடம் அல்ல,” என்றார் சாமியார்.

பொறுக்கி சிரித்தான்.

“நீ சரிப்பதற்க்கான காரணம் என்ன? ”என்றார் சாமியார்

“ நானோ,வெளிப்படையாக பொறுக்கியா இருக்கிறேன்.என்னால் பெண்களுக்குத்தான் ஆதாயமே தவிர, நட்டம் எதுவுமில்லை. ஆனால் நீயோ, சாமியார் வேடத்தில் பொறுக்கியாய் அலைகிறாய். முதலில் உன் காமத்தையும் காதலையும் உன் மணைவிடமா செலுத்துகிறாய்…..

“நான் முற்றும் துறந்தவன்.எனக்கு மணைவி குடும்பம் என்று இருக்கக்கூடாது”

அதனால்தான் வடிகால் இல்லாமல் சாமியார் வேடத்தில் தீர்த்துக் கொள்கிறாயா…..என்றான் பொறுக்கி…………

“யாரோ என்னைப்பற்றி இல்லாததும் பொல்லாததுமாக உன்னிடம் பரப்பி விட்டு இருக்கிறார்கள்” என்றார்..சாமியார்.

முற்றும் துறந்த சாமியார்களின் லீலைகள்தான் அம்மணத்தில் ஆட்டம் போடுகிறதே……… சாமியார் என்ற பாதுகாப்பில் வருவாயோடு ஏமாற்றி தீர்த்துக் கொள்கிறீர்கள். நான் பாதுகாப்பு இல்லமால் செலவு செய்து நேர்மையாக தீர்த்துக்கொள்கிறேன். நமக்கு இடையிலான வேறுபாடு இதுதான்.என்றான் பொறுக்கி..

ஒருகணம் சாமியார் மவுணமாக இருந்தார். பிறகு சாமியார். சொன்னார்.

ஒனக்கு நான் சிஷ்யனாக இருக்கிறேன். என் ஆசிரமத்தில் சேர்ந்துவிடு, நான் உன்னை திருத்திவிட்டதாக இந்த ஊரில்லுள்ள ஆண்கள் நம்பட்டும். எனக்கு பவர் இருப்பதாக பலருக்கு தெரியட்டும், நீயும் வழக்கப்போல் சாமியார் வேடத்தில் வடிகாலை தீர்த்துக்கொள்ளலாம். நாமிறுவரும் ஆசிரத்தில் காமத்தையும் காதலையும் வெல்லலாம்.

பொறுக்கி எதுவும் பேசாமல் தயங்கினான்.

சாமியார் சொன்னார். உனக்கு பாதுகாப்பானது சாமியார் வேஷமும் ஆசிரமும்தான். உன் லீலைகள் அம்பலத்துக்கு வந்தாலும் ஒனக்கு எந்த தீங்கும் வரப்போவதில்லை, நம் சிஸ்யர்களும் பக்தர்களும்தான் இந்நாட்டை பரிபாலணம் செய்கிறார்கள்.

ஊரில் சாமியாரின் அற்புதங்கள் பற்றி பெருமையாக பேசப்பட்டது. பொம்பள பொறுக்கியை சாமியார் ஆட்கொண்டுவிட்டார். சாமியாரின் பெருமைகள் எந்தச் செலவுமில்லாமல் பரவியது. ஆசிரமும் நாளுக்கு நாள் விரிவடைந்து. பக்தர்களின் கூட்டமும் பெருகியது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

வலிப்போக்கன் சிறுகதைகள் Copyright © 2014 by வலிப்போக்கன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.

Share This Book