உடல் மெலிவும் சொர்வும் இருந்தாலும், பள்ளிக்கு சென்று நீணட நாட்கள் ஆனதால் பள்ளிக்கு செல்ல ஆவல் ஏற்ப்பட்ட காரணத்தால் கையில் ஒரு நோட்டை மட்டும் எடுத்துக் கொண்டு பள்ளிக்கு புறப்பட்டான்.
அவன் பள்ளி சர்ச்சை கடந்து வாசலில் நுழைந்தபோதே பிரேயர் முடிந்துவிட்டுயிருந்தது. லேட்டாக சென்ற மாணவர்கள் பீட்டீ வாத்தியாரின் விசில் சத்தத்தால் புத்தக சுமையுடன் அலறி அடித்து ஓடிக் கொண்டு இருந்தனர்.
வலிப்போக்கனோ, பீட்டி வாத்தியாரின் விசில் சத்தத்தை பொருட் படுத்தாமல்,மெதுவாக லைபரேரியை கடந்து மாரியப்ப அண்ணனின பெட்டிக் கடையை கடந்து கொண்டு இருக்கும்பொழுது ……….
பீட்டீ வாத்தியாரின் விசில் சத்தம் பயங்கரமாக அருகில் கேட்க பதற்றட்டத்துடன் திரும்பவதற்க்குள் பீட்டீ வாத்தியாரின் விசிலின் வயரின் அடி குண்டியில் சுரீர்.என்று விழுந்தது.
காய்ச்சலால் தோல் வத்திப்போன உடம்பில் அடி தீய்யா சுட்டது. சுதாகரிப்பதற்குள் அடுத்த அடி,“ஓடுறான்னு சொன்னா, அன்ன நடையா நடக்குறன்னு அடுத்த அடி……
ரெண்டு,மூணு அடி விழுந்ததில்.வலி பொறுக்க முடியாமல் பீட்டீ வாத்தியாரை பலம் கொண்டு ஓங்கி குத்தியும் சரமரியாக அடித்தும் துவைத்துவிட்டான்.
மாணவன் அடித்ததால் கோபம் கொண்ட பீட்டீ வாத்தியான் திரும்ப அடிக்க, வலிப்போக்கனும் அடிக்க, மாணவனும், வாத்தியானும் மல்லுகட்டி தரையில்புரண்டனர்.
வலியின் வேகத்தால் மாணவன் கீழே கைக்கு கிடைத்ததை எடுத்து வாத்தியானை பதம் பார்த்துவிட்டான். வாத்தியானும் மாணவனை விட்ட பாடில்லை,
பீட்டீ வாத்தியானும் மாணவனும் கட்டிப்புரண்டு உருளுவதைக் கண்ட பெட்டிக்கடை மாரியப்ப அண்ணன் கடையை விட்டு ஓடோடி வந்து சண்டயை விலக்கிவிட முயற்ச்சித்தார். இன்னொரு பீட்டீ வாத்தியாரும் வந்துவிடவே, இருவரும் சேர்ந்து சண்டயை விலக்கினர்.
வலிப்போக்கன் பேச முடியாமல்.கைகால்கள் நடுங்கிய வண்ணம் மேல்மூச்சு,கீழ்மூச்சு வாங்கியபடி நின்று கொண்டு இருந்தான்
பீட்டீ வாத்தியானோ,கோபம் அடங்காமல், மாணவனை திரும்பவும் அடிக்க பாய்ந்தான்.
மாரியப்ப அண்ணே, காய்ச்சல்ல ஒரு மாசமா,பள்ளிக்கூடத்துக்கே வரலைண்ணே, இன்னிக்குதானே சுகமாகி வந்தேன். ஓட முடியாம, நடந்து வந்ததை நீங்களும் பாத்துகிட்டுதானண்ணே இருந்தீங்கே, அடி வாங்கி வீங்கிப்போன உடல் பகுதியை காட்டினான்.
செம்மன் தரையாதலால் உடலில் உராய்வு காயங்களும் ஏற்ப்பட்டு இருந்தது.
———————–
ஹெட் மாஸ்டர் ரூம். பெட்டிக்கடை மாரியப்ப அண்ணன் மல்லு கட்டிய பீட்டீ வாத்தியானுடன் பள்ளியில் பணியாற்றிய அத்துனை பீட்டீ வாத்தியானும் உடனிருந்தனர். வலிப்போக்கனின் கிளாஸ் வாத்தியார், மற்றும் சயின்ஸ் வாத்தியார்களும் உடன் இருந்தனர்.
வலிப்போக்கன் முதலிலே,ஹெட் மாஸ்டரிடம் தன் தரப்பு நியாயத்தை சொல்லி விட்டான்
சார், எங்கவீட்டுல யாரும் வரமாட்டாங்க,சார், எங்க அப்பா, நான் சின்ன புள்ளயா இருக்கறப்பவே. செத்துப்போயிட்டாரு, எங்க அம்மாவுக்கு எதுவும் தெரியாது. எல்லாமே நான்தான். காய்ச்சலுக்கு வைத்தியம் பாக்க்கூட வசதி இல்லாததால்தான் ஒரு மாசமா படுக்கயில இருந்து பொழச்சு வந்திருக்கேன். எனக்கும் வாத்தியாருக்கும் முன்பகை எதுவுமில்லை, வாத்தியார அடிச்சத்து தப்புதான், வாத்தியாரு அடிச்ச அடி தாங்க முடியாமல் கோபத்தில் அடித்து விட்டேன். அவரும் இப்படி வெறிகொண்டு நோஞ்சனாகிவிட்ட என்னை இந்த வெளு வெளுத்திருக்க வேண்டாம். நீங்க பாத்து என்ன சொன்னாலும் ஏத்துக்கிறேன் சார்..
கிளாஸ் வாத்தியார், வலிப்போக்கனின் கையை இருக பிடித்து விட்டார். பியுன் வந்து கொடுத்த ஆயுள்மெண்டை வாங்கி வீங்கிப் போன இடங்களில் தேய்க்கச் சொன்னார்.
சிறிது நேரம் வலிப்போக்கனை ,வெளியில் இருக்கச் சொன்னார் ஹெட்மாஸ்டர். கதவு அடைக்கபட்டு, உள்ளே போர்டு மீட்டிங் நடந்து கொண்டு இருந்தது.
பீட்டீ வாத்தியாரு குலாம் எல்லாரும் மொத்தமாக வெளியேறினர். கடைசியாக கிளாஸ் வாத்தியார் சொர்ந்து போன முகத்துடன் காணப்பட்டார்.
ஹெட்மாஸ்டர்.மாணவனை அழைத்து கிளாஸ் வாத்தியார் சொல்றபடி நடந்துக்க என்றார். சரிங்க சார் என்றுவிட்டு கிளாஸ் வாத்தியாரை பார்த்தான். வீட்டுக்கு போயி ரெஸ்ட எடுத்துட்டு நாளைக்கு வாடா? என்றார்.
முடிவு சொல்லுங்க சார் என்றபோது தயங்கியபடி சொன்னார்
வீட்டுக்கு வந்தபோது அன்று மாலையில் திரும்பவும் காய்ச்சல வந்தவிட்டது. அது முதற்க் கொண்டு அந்த பள்ளி கூடத்து பக்கம் போவதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை, டீ.சி வாங்க போனதைத்தவிர……………..