"

 

375 பதிவுகளுக்கு ஒரு லட்சம் பார்வையாளர்கள் வந்து எட்டி பார்த்து போனதற்கு என்னை பாராட்டி ஒரு நண்பர்.டீ கடைக்கு கூட்டிட்டு போயி டீ வாங்கிக் கொடுத்தார்.

அவரிடம் நான் டீ குடிப்பதில்லை என்றும், கடைகளில் பஜ்ஜி,நொச்சி எதுவும் சாப்பிடுவதில்லை என்றும் என் நிலமையை விளக்கினேன்.

அதிலிருந்து ஒரு கிளாஸ் .

எனக்கு டீ குடிக்க காசு கிடைக்காத காலத்திலிருந்து இப்ப வரைக்கும் டீ குடிப்பதையே விட்டுவிட்டேன்.. சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்ற ஒரு காரணம் இருந்தாலும். வேறு ஒரு காரணமும் இருக்கிறது அதனால இனியும் இப்பழக்கம் தொடரும்.

இன்னொரு காரணம் இதுதான். அதாவது டீக் கடையில் ஒரு மில்லி பாலில் அரை கிளாஸ் தண்ணீர் கலந்து அதில் காக்கிளாசக்கும் குறைவாக டீக கசாய கலரை கலந்து , ஆணாயிருந்தால் இந்தா டா டீ என்றும், பெண்ணா இருந்தால் இந்தா டீ என்று தருவதுதான்.

வெண்மை புரட்சி என்று பீத்திக் கொண்ட காலத்திலே, ஒரு மில்லி பாலுல அரை கிளாஸ் தண்ணிய கலந்துதான் கொடுத்தானுக..

இப்ப, பைக்கு,ஸ்கூட்டி,காருஃசெல்லு,நெட்னு நாகரிகம் வளர்ந்த இந்தக் காலத்திலே கறக்கிற, கலக்குற பாலெல்லாம் எங்கடா போகுதுண்ணு பார்த்தா

வெள்ளிக்கிழமையன்று அருணாசாலஸ்வரருக்கு 1008 லிட்டர்ல பால்பிசேகம் நடைபெறுகிறதாம். இப்படி ஒவ்வொரு கோயிலில்ல மூலையில இருக்கிற மூலவருக்கு பாலா அபிசேகமுன்னு பாலை எல்லாம் கீழே ஊத்துறானுங்க

அன்றைய காலத்திலிருந்து இன்றயவரைக்கும் பால கீழே ஊத்துற பொழப்பா இருக்கு,போதாக்குறைக்கு இவனுகளோட சினிமாக்கார்ர்களின் ரசிக கூட்டமும் சேர்ந்துகிட்டு, அவனுங்களும் பால கீழே ஊத்துராணுங்க….

எப்போ, என்னைக்கு அரை கிளாஸ் பாலில்.கால்கிளாசுக்கு குறைவாக தண்ணிய கலந்து அரை ஸ்பூன் டீத்தூளை போட்டு இந்தாங்க டீ என்று தரும் காலம் வருகிறதோ, அதுவரைக்கும் நான் டீ யே குடிப்பதில்லை

பின் குறிப்பு. கடையிலதான் அப்பிடித் தருவாங்க, வீட்டுல போடுற டீ,காபிய குடிங்கன்னு சொல்றவங்களுக்கு,, உலகத்தோட நானும் சேர்ந்து சுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும் என்னால் தாய்குலத்துக்கு டீ போடும் வேலை ஏற்படும் என்பதாலும் வீட்டுல போடுற டீ,காபியும் குடிப்பதில்லை,

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

வலிப்போக்கன் சிறுகதைகள் Copyright © 2014 by வலிப்போக்கன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.

Share This Book