"
முன்னுரை,தெளிவுரைமற்றும் பதவுரை.
இக்கதை நாயகர்க்கு கழிப்பரையே கோயில் மலமே சாமி.கெட்டியான மலம் கருப்பசாமி,வயிற்றாலைமற்றும்தண்ணியானமலம் காளியாத்தா,மற்றும்
மாரியாத்தா,திறந்த வெளிகழிப்பிடமே பெரிய கோயில் அடுத்த தெளிவுரைகள் தங்கள்மடல் கண்டு
இது இட்டுக்கட்டிய கதையல்ல.நடந்தவை. நடந்து கொண்டு இருப்பவை. ………..
காலை பொழுது விடிந்து சற்றுவெளிச்சம் வந்தாலும் தெருவிலுள்ள ரோட்டிலுள்ள விளக்குகள் அனைக்கப்படாமல் இருந்தன. மக்கள் நடமாட்டம் இல்லையென்றாலும், டீக்கடையில் அய்ந்தாரு மனிதர்கள் இருந்தனர்
ஒருசில பெண்கள் தத்தம் வீடுகளின் வாசல்களை சுத்தம் செய்வதில் ஈடுபட்டுயிருந்தனர்.
அவருக்கு காலையில்தான் நன்றாக துாக்கம் வரும் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரோ,அல்லது பின்னரோ, தாமதமாக துாங்கினாலும் காலை துாக்கம்தான் நிம்மதியான துாக்கமாக இருந்தது.
அந்த நிம்மதியான துாக்கத்தை கெடுப்பதறக்காக இயற்கையும் அவரின் தெருவிலுள்ள மக்கள் இடைஞ்சல் கொடுப்பது போல் தன் பங்குக்கு இடைஞ்சல் கொடுத்தது. அது அவரை சாமி கும்பிடுவதற்கு அதிகாலையில் எழுப்பி விடும்.ஓரளவு சமாளித்து பார்ப்பார் முடியாது. அருள் வந்துவிடும்
கட்டியிருக்கும் கையிலியால் கண்களை துடைத்துக் கொண்டு முகம் கழுவுவதற்குகூட தாக்கு பிடிக்க முடியாமல் அவசரமாக அவசரமாக எழுந்து சைக்கிளை. எடுத்துக் கொண்டு உருட்டிக்கொண்டு தெருவைக் கடந்து மெயின் ரோட்டுக்கு வந்த பின் சைக்கிளில் ஏறி ஒருசில தெருவை கடந்து விவசாயம் இல்லாமல் காய்ந்து பொட்டலாக கிடக்கும் இடத்தைத் தேடி ஓடி.,அந்த
பொட்டல் வெளியில் சாமியை கும்பிட்ட பிறகுதான் அவருக்கு பரபரப்பும். கைகால் சோர்வும் அருளும் குறைந்து சகஜ நிலமைக்கு வருவார்
இவர் சைக்கிளில் வேகமாக வயற்காட்டு பக்கம் வருகிறார் என்றால் சாமி கும்பிடுவதற்குத்தான் என்று தெரிந்து சட்புட்னுன்னு ஒதுங்கி கொள்வார்கள். சில நாட்களில் நன்றாக துாக்க கலக்கத்தில் தாமதமாக எழுந்திருக்கும் நேரத்தில் என்னதான் வேகமாக சென்றாலும் அருள் முற்றி உள்ளாடைகளிம்.
கைலிகளிலும் சாமி கும்பிட்டுவிடுவார்
உடம்புக்கு முடியதா நாட்களில் காளியாத்தா,மாரியாத்தா நிலைமை இதைவிட மோசமாகிவிடும். அவரின்மேல் அவருக்கே ஆத்திரம் வந்துவிடும்.தன் இயலாமையை எண்ணி தன்னைத்தானே மோசமாக திட்டிக்கொள்வார்
காளியாத்தா-மாரியாத்தா சாமி கும்பிட்ட நாட்களில் ஓடும்பம்பு செட்டைத்தேடி நாயாய் அலைந்து அதில் ஓடும் பம்ப் செட்டில் சாமிகும்பிட்ட துணிகளை அலசி குளித்துவிட்டுதான் வீட்டுப்பக்கம் வருவார்.
இப்படி பலமுறை நடந்துள்ளதால் பலமுறை எச்சரிக்கையாக இருந்து வந்தார். அவர் குடியிருக்கும் வழக்கிடைச்சொத்தில் அவருடைய தந்தைவழி பங்காளிகளுடனும்தெருநாட்டாமைகளிடமும் அடிதடியில் இறங்கி போலீஸ்
வழக்கு என்று அழைந்து சென்று விடாப்பிடியாக போராடிபணக்கஷ்டத்துடன் உறுதியாக நின்று வீட்டுக்கருகில்கோயில் கட்டி முடிக்கிற வரைக்கும் காளியாத்தா மாரியாத்தாவுக்கு பயந்து எச்சரிக்கையாகவே இருந்து வந்தார்.
அவர் குடியிருக்கும் தெருப்பகுதி மாநகராட்சியின் கடைசி வார்டாக இருந்தாலும் ,நகரத்தை ஒட்டிய கிராமாமாகத்தான் இருந்தது. அவருக்கு பதிணைந்து வயதிற்குமேல் இருக்கும்போது,அவரின் வீட்டைச்சுற்றி குட்டி ப னைமரங்கள் நிறைந்த பனங்குட்டிகளும் தென்னை மரங்கள் நிறைந்த தென்னந்தோப்புகளும் இருந்தன.
அனறைய காலங்களில் ஆண்களும் பெண்களும் சாமி கும்பிடுவதற்கு பகலில் பனங்குட்டியையும் இரவில் தென்னந்தோப்புக்கு நடுவே செல்லும் ரோட்டைத்தான் பயன்படுத்தி வந்தார்கள.அப்போதெல்லாம் எந்த சாமி வந்தாலும்  கும்பிடுவதற்கு எந்தவித சிரமும் ஏற்ப்பட்ட தில்லை. இரவில் சாமி கும்பிடும்போதுகூடசினிமா பார்த்துவிட்டு ஆட்கள் வீதி வழியாக வரும்போதுகூட எழுந்நின்று ஆட்கள் சென்றபின் சாமி கும்பிடுபதில் சிரமம்  ஏற்ப்பட்டதில்லை
இரவில் சாமி கும்பிட்ட இடத்தை பகலில் பார்த்தால் ஒரே சாமி குவியல்களாத்தான் இருக்கும். அந்த ரோட்டில் லாரி வந்தால் சனங்கள் கும்பிட்ட சாமிகள் எல்லாம் லாரி டயரில் ஒட்டி சிறிது துாரத்துக்கு
ஒரே சாமியாகத்தான் இருக்கும். செருப்பில்லாமல் நடக்கமுடியாத அளவுக்கு இருக்கும் .இதில் வாசனை வேறு துாக்கியடிக்கும்.
மக்கள் கூட்டம் வளர வளர, பனங்குட்டியும், தென்னந்தோப்பும் அழிக்கப்பட்டு பிளாட்டாக மாறி காந்திதெரு,முத்துதெருநேதாஜி தெரு என்று பல தெருவாக மாறிவிட்டன. இப்படி மாறின பிறகுதான் சாமி கும்பிடுவதற்காக கோயிலின்
அவசியம் தெரிந்தது.
அந்தத் தெருவின் ஆம்பிள நாட்டாமை மின்சார வாரியத்திலும் பொம்பள நாட்டாமையின் கனவர் பென்னரிலும்வேலை யில் இருந்ததினால் அவர்கள் மட்டுமே சொந்த மாக கோயில் கட்டியிருந்தார்கள். மற்றவர்களுக்கு சாமி
கும்பிட வழியில்லை.
அந்த தெருவைச்சுற்றி குடியிருப்பு கட்டிட வீடுகள் வந்ததினால் அவர் குடியிருக்கும் தெரு சேரியாக்கப்பட்டது.அந்த சேரி மக்களுக்காக இலவசமாக பொதுக்கோயில் (பொது கழிப்பறை) மாநகராட்சியால் கட்டப்பட்டது இந்தக் கோயில் சேரியிலுள்ள தெருமக்களுக்கு மட்டும்தான் என்பதால் கிரில்கதவு டன் சாவிபோடடு சாவிதெரு நாட்டாமைவசம் ஒப்படைக்கப்பட்டது.
தெரு நாட்டாமைக்கும் அவருக்கும் இடப்பிரச்சினையில் தெருநாட்டாமை அவருடைய வழக்கிடைச் சொத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்தோடு அவர் பயன்படுத்தவும் நாட்டமை தடை போட்டுஇருந்தார் நாட்டமை.. அதனால்
முன்பகையை காரணம்காட்டி அவருக்கும் அவரின் குடும்பத்தார்க்கும் பொது கோயிலை (கழிப்பறையை) பயன்படுத்த மறுக்கப்பட்டது.
அவருடைய சகோதரியின் மகள்கள் கழிப்பறையின் சாவியைக்கேட்டால் சாவியை மறைத்து வைத்து விட்டு காணவில்லை என்பார்கள்.தெருவிலுள்ள
மற்றவர்களிடம் உண்மையா கவாக என்று கேட்டால் ஆம்பிள நாட்டாமை,பொம்பள நாட்டாமையின் வீடுகளில் வாடகைக்கு குடியிருந்து வருவதால் தங்களுக்கு பிரச்சினை வரும் என்பதால் சொல்லமாட்டார்கள்
.இரு நாட்டாமைகளுக்கு சொந்தமாக கோயில் இருந்தாலும் டேங்கு நிரம்பி விடும் என்று பொதுக்கோயிக்குதான் சாமி கும்பிட வருவார்கள்.
இரண்டு மூன்று வருஷம்தான் அந்த பொதுக் கோயிலை பயன்படுத்தியிப்பார்கள். தண்ணீர் இல்லாததாலும் போதிய பராமரிப்பு இல்லாதாலும்.சாமிகளும் மலை போல குவிந்து நாற்றம் ஏற்பட்டதாலும் யாருக்கும் பயன் படாமல் போய்விட்டது..தற்போது அந்தக் கோயில்
இடிக்கப்பட்டு பாதாள சாக்கடைதிட்டத்தின் கழிவு நீரேற்று நிலையமாக ஆக்கப்பட்டது.
இப்போது அவர் அறைநுாற்றாண்டு வயதை நெருங்கிக் கொண்டு இருக்கிறார்.சமிபத்தில்தான் நாண்கு தொட்டிகள் கொண்ட கழிவறையை கட்டி யள்ளார். அந்தக் கோயிலை கட்டவிடாமல் அவரின் பங்காளிகளும் தெரு நாட்டாமையும் அவர்களின் வாரிசுகளும் கொடுத்த இம்சைகளுக்கு ஆள்பலமும்  பணபலமும் இல்லாமல் போராடினார்
பாதாள சாக்கடை இணைப்புக்கு பணம் கட்டி அனுமதி பெற்று இணைப்பு கொடுக்க முயன்ற போது இரு தெரு நாட்டாமைகளும் வாரிசுகளும் கூட்டமாக வந்து இணைப்பு கொடுப்பதை தடுத்துவிட்டனர் வேலையாட்களை மிரட்டிவிட்டனர். மநகராட்சியிடம் கேட்டபோது அது பொது பாதையென்று சான்று அளித்தனர்..ஆண் நாட்டாமையோ பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க கூடான்னு அவர்மேல் வழக்கு போட்டுள்ளார்.வழக்கும்ஒன்றோடு  மூன்றாக நிலுவையில்……….
பல்வேறு இன்னல் தொல்லைகளுக்கிடையில்சொந்தமாக கோயில் கட்டிய பிறகும் பரபரப்பும் அருளும்தீர்ந்தபாடில்லை. காலையில் எழுந்து கோயிலுக்கு
போனால் அவரின் தாயாரோ,சகோரதரியோ யாரவது கோயிலில் சாமி கும்பிட்டுக் கொண்டு இருப்பார்கள்
திறந்வெளி கோவிலும் வீடுகளாக மாறிவிட்டதால் இருபது நிமிட வாக்கில் சைக்கிளில் ஆற்றுக்கு சென்று இயற்கையின் அவஸ்தையை போக்கி
விட்டு ஆற்றினிலே குளித்துவிட்டு நிதகமாக பரபரப்புஇல்லாமல் வீடுவந்து சேருவார். தெரு நாட்டாமைகளும் நாட்டாமையின் வாரிசுகளும் இயற்கையும் தனித்தனியாக தொடர்ந்து அவஸ்தையை கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. இயற்கையோடும் இவன்களோடும் சண்டையிட்டுக் கொண்டுதான் வாழ்ந்து வருகிறார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

வலிப்போக்கன் சிறுகதைகள் Copyright © 2014 by வலிப்போக்கன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.

Share This Book