"

ஈரோட்டு பாசறையில் தோன்றிய அண்ணாவும் அண்ணாவின் தம்பிகளும் மேடைப்பேச்சினிடையே கதை சொல்வார்கள். அப்படிக் கதையை சொல்லி கூட்டத்திலிருந்து நெளிபவர்களை உற்சாக பானம் அருந்தியவர்களைப்போல
வாய் பிளக்க வைப்பார்கள்.கூடவே விழுந்து விழுந்து சிரிக்க வைப்பார்கள்.

இந்த வழியில் அண்ணாவின் இதயக்கனியும் அந்த இதயக்கனியின் வழிவந்த புரட்சி செல்வியும் மேடைபேச்சின்ஊடாக கதை சொன்னார்கள். கதையின்
தலைப்பு என்ன தெரியுமா? “வாயைக் கொடுத்து வாங்கிக் கொ்ண்டவர்கள்.. இதற்கு இன்னொருபெயரும் உண்டு. நுனலுாந்தன்(தவளை) தன் வாயால் கெடும் என்பதுதான். இந்தக் கதையானது யார் யாருக்கு பொருந்தும் என ஆராய்ச்சியில் இறங்க போவதில்லை.

ஆனால்.சிற்றரசை ஆளும் பேரரசியர்க்கு கன்னடமும் ஆங்கிலமும் பிறவி மொழியாக இருந்தாலும் கூட்டத்திலுள்ள பாசத்தொண்டர்களுக்கும் இலவசத்தை வாங்கவந்த வந்தவர்களுக்கும் தமிழரின் நலன் கருதி தமிழி
லேயே கதை விடுத்தார்கள்.

கதையைக் கேட்காதவர்கள் அன்னதாயின் புகழ் பரப்பும் தினசாரிகளை பார்த்து படித்து தெரிந்து கொள்க.

பரிசு,கார்,டாஸ்மக்,திருட்டு, போன்ற உவமைகளைச்சொல்லி கதையைச் சொல்லி முடித்தார்கள். அமைச்சர்களும் அதிகாரிகளும் அடிமைகளும் பேரரசியரின்அறிவுத்திறமையையும் கதை சொல்லிய பாங்கையும்
கண்டு ஆரவாரமாக,எட்டுதிக்கும் கேட்கும்படியாக(கூச்சல்) கரகோஷம் போட்டார்கள்.

சிற்றரசை ஆளும் பேரரசியும் தன் முன் அனுபவத்தையே உவமைக்கதையாக குட்டிக்கதையாக பொருத்தமாகவே
சொன்னார்.

இலவசம் வாங்க வந்தவர்கள் முகத்திலோ பகட்டுக்கூட சந்தோசததைக காணவில்லை.எப்படா.பங்ஷன் முடியும் ஆட்டையும் மாட்டையும் ஓட்டிகிட்டு போறப் போறோம் என்பதிலே கவனம் இருந்ததால் கூட்டத்
தோடு கூட்டமாக அரகொரா கோஷம் மாதிரி கரகோஷம எழுப்பினார்கள்.அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பொங்கி வந்த சிரிப்பாக தெரியவில்லை. பாவம் பேரரசியின் பாதுகாவலர் எப்பத்தான் சிரிப்பார் என்று தெரியவில்லை

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

வலிப்போக்கன் சிறுகதைகள் Copyright © 2014 by வலிப்போக்கன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.

Share This Book