"
மகான் என்ற சொல்லிக் கொள்கிற ஒருவர் தன் பணிஆடகளான சிடர்களுடன் வேற்று நாட்டிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்திருந்தார் வந்த மகான் முதல் காரியமாக தமிழ்நாட்டு மக்களுக்கு உபதேசம்  செய்தார்.தமிழ் நாட்டு மக்களும். ஆட்சியாளரின் வரிவசூல்.கொள்ளை போன்றகெடுபிடிகளால். விலைவாசி ஏற்றத்தாலும்,வேலை
வாய்ப்பு குறைவாககிடைப்பதாலும் வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக்கொண்டு வாழ்ந்துவந்தார்கள்.

இந்தக் கஷ்டங்களால் அவதிப்பட்டுவந்தவர்களுக்கு மகான்வந்தது சற்று மகிழ்ச்சியாக  இருந்தது. கஷ்டங்களை தாங்கிக் கொள்வதற்குஏதாவது வழியும். பரிகாரமும் சொல்வாருன்னு மகானின் உபதேசத்தை கேட்க குழுமிவிட்டனர். பெருங்கூட்டத்தைக்கண்டு ஆட்சி யாளர்களின்படை அதிகாரிகளும் வீரர்களும் கூட்டமாக  சேர்ந்துவிட்டனர்.

கூடியிருந்த கூட்த்தைக்கண்ட மகான் பிரமித்துப்போனார்  ஆ…..நம்உப தேசத்தை கேட்க இவ்வளவு கூட்டமா………என்று.
……மாகனுக்குஅருகில் வந்த ஆட்சியாளரின் படை அதிகாரி , அவரிடம் குசுகுசுத்தார் மகான் உப தேசத்தை தொடங்கினார். அரியின் புதல்வர்களே! பெருங்குடி மக்களே!

நீங்கள் இந்த லோகத்தில் வாழ்கின்ற வாழ்க்கையில் காணப் படும் துன்பங்களும் துயரங்களும் முற்ப்பிறப்பில் உங்கள் முன்னோர்கள்செய்த தீவிணையின் பயனைத்தான் நீங்கள்  அனுபவிக்கிறீர்கள். எவ்வளவுஎவ்வளவுக்கு எவ்வளவு கஷ்டங்களையும் துயரங்களையும் தாங்கிக் கொண்டு , தேவைகளை சுறுக்கிகக்கொண்டு சாந்த சொருபியாக – எதையும் தாங்கும் இதயமாக இருக்குறிர்களோ, அவ்வளவுக்கு நீங்கள் சாகாவரம்பெற்றவர்களாக சொர்க்கத்தில் வாழ்வீர்கள என்றார்.

அப்போது. கூட்டத்திலிருந்து ஒரு விடலைப்பெண் எழுந்து  மகானைவணங்கி,   “ எங்க நாட்டிலுள்ள ஆட்சியாளர்களும்,
பணக்காரர்களின்பெண்கள் எப்போதும் அழகாக இருக்கிறார்களே,அவர்கள் குழந்தைகள் அமுல் பேபியாக இருக்குதெ. அதன் காரணமென்ன சாமி……..தெரிந்தால் நாங்களும் ……இழுத்தாள்.

மகான்.புன்னகைத்து நல்ல சந்தேகம் என்றுவிட்டு மக்களைப்  பார்த்துபேசினார்.    ஆட்சியிலுள்ளவர்கள்.பணக்கார வீட்டுப்
பெண்களும்குழந்தைகளும் அழுகாக இருப்பதற்கு,அவர்களின் முன்னோர்களின்நற்பண்புள்ள கிர்த்திகளால் அவர்கள் இந்த லோகத்தில் அழகுள்ளவர்களாக,கவலையற்றவர்களாக வாழ்கிறார்கள். இந்த அழகும்சந்தோஷம் நிலைப்பதற்கு அவர்கள். நாட்டிலுள்ள எல்லா கோயில்குளத்திற்கும் சென்று வழிபடுகிறார்கள். கோயில் குளத்தை படைவீரர்களை நிறுத்தி பாதுகாக்கிறார்கள்.மக்களை காப்பாற்றி வழி நடத்திச்செல்வதற்கு ஆடசியாளர்கள் அல்லும் பகலும் சிந்திக்கிறார்கள் என்றார்.

சீடர்ஒருவர், பெப்ஸி அக்வுவா வாட்டர் கேனை நீட்டியவுடன்  மகான் அதை வாங்கிமூனு,நாலு மடக்கு தண்ணீரை பருகினார்.

கூட்டம் அமைதிப்பூங்கவா இருந்தது. மஞ்சள்,காவி, பச்சை, கருப்பு நிற ஆடைகள் அணிந்த பெண்களும்,ஆண்களுமாக சிலர் வரிசையாக எழந்து நின்றனர்.பெண்கள் பேச ஆரம்பித்தனர்.

நீங்க சொல்கிறபடிதான் சாமி நாங்க இருந்து வருகிறோம் சாமி, ஆட்சியில இருக்கும். புர்ர்ர்ட்சி தலைவி அம்மாவின் சதானை
யாக பால்வில.பஸ்டிககெட் வில, கரண்ட் பில்லெல்லாம் ஏத்து னாங்க,அதுக்கெல்லாம் பொறுமையாகத்தான் இருக்கோம் சாமி அதுக்கு பரிகாரமா, விலையில்லா அரிசீ.மேய்க்க ஆடுமாடு, மேய்ச்ச களைப்பு தீற பேன்,  அரைக்க மிக்ஸி. ரைண்டர் கொடுத்தாங்க சாமி.என்றபோது…… கூட்டத்தின் கடைசியில் சலசலப்பு ஏற்ப்பட்டது.

மகானின் சீடர்களும் படைவீரர்களும் விரைவாக சென்று திரும்பினர் ஆடசியில் இருக்கும் புர்ர்ர்ட்சி தலைவி அம்மாவுக்கு தானாம் ஓட்டு போட்டார்களாம். அவுகளுக்கு இன்னும் ஆடுமாடு,பேன் மிக்ஸி
எதுவும் தரலியாம் என்றார் சீடர் ஓருவர்.

இடையில் நிறுத்திய பெண்களை இடைமறித்து ஆண்கள் பேசினர்.

ரெண்டு நாளைக்கு முன்னாடி பெட்ரொல் விலையையும் ஏத்தின போது  எங்களிடமும் வண்டிகள் இருந்தபோதும் எந்தவித போராட்டத்திலும் கலந்துக்காம.எங்க முன்னொர்கள் செய்த கரும தீவின பலன்களே, இதற்கெல்லாம் காரணமுன்னு ஒதங்கிய வருகிறோம் சாமி, போதா குறைக்கு கஷ்ட நஷடங்களுக்கு விடிவு பிறப்பதற்க்காக, ஆண்டுதோறும்பெண்கள் விரதமிருந்து. அக்னிசட்டி, மாவிளக்கு, மண்சோறு, பூக்குளி, நி். பூஜை. அங்கப்பூசைகளும் ,ஆண்கள்காவடி, வேல்குத்துவது,இருமுடி என்ற அணைத்துவித வேண்டுதல்களையும்  மரபு மாறாமல் செய்துவருகிறோம்சாமி.இந்தப்பிறவில் அனுபவிக்காத கொடுமையெல்லாம்ஆனுபவிச்சுட்டோம் சாமி….. இதோடு விரதம்  இல்லாத நாட்களில், விரதம் இருந்த நாட்களுக்கம் சேர்த்து ஆட்சி யாளர்களின் டாஸ்மாகபானத்தை பருகி நாட்டுக்கு அதிகமான வருமானத்தையும் கொடுத்துஓட்டாண்டிகளாகி வருகிறோம் சாமி….. சொர்க்கத்தில் சாகாவரம்பெற்று பெரு வாழ்வு வாழ உதவி பரியனும் சாமி…. என்று ஆள்ஆளுக்கு ஒருவழியாக பெசி முடித்தனர்.

மகான்.தன் இடுப்பில் இருந்த கடிகாரத்தை ஒருமுறைக்கு இருமுறை யாக பார்த்துக்கொண்டு சீடரிடம் குசுகுசுசத்தார்

உங்கள் விரதங்களும், வேண்டுதல்களம், ஆடசியாளர்க்கு செய்கின்ற வருவாய் பெருக்கத்தையும். பகவான் நன்கு அறிவார். நானும் சொர்க்கத்தில் இடம் கிடைப்பதற்க்காக பகவானிடம் சிபாரிசு செய்கிறேன்என்றார்

படை அதிகாரி மணியைப்பார்த்தவாறே மகானிடம் வந்து நின்றார். மக்கள் கூட்டமும் கொஞ்சமாக கலைவதற்கு முன்னமே மகானும் சீடர்களும் சிட்டாய் பறந்துவிட்டார்கள்..

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

வலிப்போக்கன் சிறுகதைகள் Copyright © 2014 by வலிப்போக்கன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.

Share This Book