"
ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி இருந்தார்.அவர் சின்னதும் பெரியதுமாக நாலு ஆடுகளை வளர்த்து வந்தார். அந்த நாலு ஆடுகளுக்கு வேளா வேளைக்கு நல்ல தீனியும் நல்ல தண்ணீரும் கொடுத்து வந்தார்.அவருடைய வாழ்க்கை சீரான நிலையில் சென்று கொண்டு இருந்த வேளையின்….. இடையில்
தனியார்மயம்,தாராளமயம், உலகமயம் என்ற வளர்ச்சி என்ற பெயரில்  விளை நிலங்களும் கருவக்காடுகளும்.மரங்களும் அழித்தொழிக்கப்பட்டு.பிளாட்டாக மாறின.. கொஞ்ச நஞ்ச நிலங்களு  மழையுமில்லாம , தண்ணியும் இல்லாம வறண்டு தரிசுசா கிடந்தன.
இதனால்.விவசாயமும் இல்லாம வேலையுமில்லாம தவியாய் தவித்து வந்த காரணத்தினால், வளர்த்து வந்த ஆடுகளுக்கு முன்னப்போல் தீணியும் தண்ணீரும்  அவரால் கொடுக்க முடியவில்லை.
இதைத் தெரியாத , வேளா வேளைக்கு திண்டு வந்த ஆடுகள்.அந்த விவசாயி யை திட்டித்த்தீர்த்தன.“தீணி போட வக்குஇல்லாதவன் எதுக்கு நம்மல்ல கட்டி ஆளுறான். வெங்கம்பய..வளக்க  துப்பு இல்லேன்னா நாக்கப் புடுங்கி சாக வேணாம்.என்று மாறி மாறி திட்டி வந்தன.
ஒருநாளு அந்த விவசாயி வீட்டுக்கு லேவாதேவிக்காரன் வந்தான். வாங்கின பணத்துக்கு வட்டி எதுவும் கட்டவில்லை என்று அவனும் பதிலுக்கு திட்டினான். வட்டியும் முதலுமாக கொடுக்கச் சொல்லி கெடு விதித்துவிட்டு
போனான்.
பல பிரச்சினைகளால் சிக்குண்டு தவித்த அந்த விவசாயி.தான் வளர்த்து வந்த ஆடுகளை மனமில்லாமல்.கறிக்கடை வியாபாரிக்கு விலை பேசி விற்று விட்டான்.
ஆடுகளை வாங்கிய கறிக்கடை வியாபாரி. அந்த நாலு ஆடுகளுக்கு கொழுப்பும் கறியும வளர்வதற்க்காக ,அனுதினமும் நல்ல தீனியும் .கோகோலா தண்ணியும் போதாத குறைக்கு டாஸ்மாக் தண்ணியும் கொடுத்து வந்தான்.
நல்லா தீனியும், கோலா தண்ணியும் பருகி வந்த ஆடுகள்.ஆகா…..ஆகா……. இவனல்லவோ மனுசன்.நம்மல கண்னும் கருத்துமாக பேணி பாதுகாத்து  வருகிறான். என்று புளகாங்கிதம் அடைந்து மெச்சி வந்தன.
அன்று ஞாயிற்றுக்கிழமை. கறிக்கடை வியாபாரி. நாலு ஆடுகளில் ஒன்றை பிடித்து, மூன்று ஆடுகளின் முன்னால். அதன் கழுத்தறுத்து இரத்தத்தை சட்டியில் பிடித்து . தோலை உரித்து தொங்கவிட்டான்..
புளகாங்கிதம் அடைந்து வியாபாரியை புகழ்ந்து பேசிய மற்ற மூன்று ஆடு கள்  இதை பார்த்து அதிர்ச்சியில் வெலவெலத்து போயின.
அடடா…..நம்லேயும் இப்படித்தானே கழுத்தறுத்து தொங்கவிடப்போறான் என்பதை உணர்ந்தன. உணர்ந்து என்ன பயன்…தப்பிக்க வழியில்லால் பரிதாபமாக தவித்துக்கொண்டு இருந்தன. மற்ற மூன்று ஆடுகள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

வலிப்போக்கன் சிறுகதைகள் Copyright © 2014 by வலிப்போக்கன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.

Share This Book