"
2
எனக்கு காது கேட்பதில் பிரச்சினை.  ஆங்கில மருத்துவ சிகிச்சையில்
ஸ்கேன்,டெஸ்ட்,லொட்டு.லொடுக்கு எல்லாம் முடித்தப்பின் வலது காது அவுட் என்றும் இடது காதும்சீக்கிரமே அவுட்டாகிவிடும் என்று பயமுறுத்தி சில ஆயிரங்களை செலவழித்துவிட்டு ஒன்னும் செய்ய முடியாதுன்னு கைகழுவி விட்டனர்.

    நானும் விக்கிரமாதித்தனாக சளைக்காமல் ஒவ்வொரு முயற்சியாக மேற்ககொண்டு வந்தேன்.காதில் காதொலி வைத்துக்கொண்டால் கேட்கும் என்ற சந்தேகத்தின் பேரில் டெஸட் செய்து காதொலி விற்கும் கடைக்குச் சென்றேன்.

காதொலி துல்லியமாக கேட்கும் ஆனால் பத்திரமாக தண்ணி

கிண்ணி படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றார்.(கிண்ணி என்பது டாஸ்மாக்கை குறிப்பது.டாஸ்மாக் குடிமகனாக எண்ணை நிணைத்து சொல்லிவிட்டார்.
நான் அசல் இந்திய பாட்டாளி வர்க்கத்தின் குடிமகன் என்பது அவருக்கு தெரிய வாய்ப்பில்லை) அதோடு காதொலி விலை பதிணைந்து ஆய்யிரத்துக்கும் மேல் ஆகும் என்று என்றார்கள் கடன்பட்டு காதொலி வாங்கினாலும் அதை கவனமாக பாதுகாப்பது முடியாத காரணம்.
ஏற்கனவே வயிற்றுவலி. சுற்றி இருக்கிற மக்களின அன்புத்(சண்டைச்ச்சரவு) தொல்லை. அந்த அன்பினால் காதொலியை பதம் பார்த்துவிட்டால் என்னாவது. இது சரிப்பட்டு வராதுன்னு நானே முடிவு கட்டிவிட்டேன்
   காது செவிடானவர்களின் அனுபவத்தைக் கேட்டால் அதி பயங்கரமாக இருந்தது. எங்காவது எதாவது வெடித்து நாசவேலை நடந்தால் அது நக்சலைட் வேலையாக.சதியாக இருக்குமோ என்று போலீஸ் கக்கியதை வாந்தியெடுக்கும் ஊடகங்கங்கள்.பத்திரிக்கைகள் மாதிரி இருந்த்து. செவிடானவர்களின்  சொன்ன அனுபவம் அய்யோ! போதும்ய்யா!!! என்று திலிருந்து அவர்கள் அனுபவத்தை கேட்பதை விட்டுவிட்டேன்.
   தோழர் ஒருவர் சொன்ன அக்குபிரஷர் முறையை விட்டு விட்டு செய்து  வந்தேன் (மறதியால்).ஒருநாள் பேப்பரில் பொண்டாட்டி செத்த துக்கம் தாளாமல் செத்து போன கோவை சாமிகிரி சித்தரின் வாரிசுகள் நடத்தும் காதொலி சிகிச்சை மையம் கிளை பற்றிய செய்தியை படித்தேன். வேலை இல்லாத நாட்களில் ஒரு நாள் சிகிச்சை மைய்யத்துக்கு சென்றேன்.

வரவேற்பு பலமாக இருந்த்து. மனதிற்குள் சிரித்துக்கொண்டேன். என்முறை வந்த்து……“அய்யா என்…பெயர்………………எனக்கு வயது 52 ஆகுது…எனக்கு ஒலிஅளவை நார்மலாக கூட்டி வைத்து பேசினால்தான் மனிதர்கள் பேசுவது கேட்கும்.ரகசியமாகவோ, பல நாள் கஞ்சிக்கு குடிக்காதவர்கள் போல் பேசினாலோ, திருடர்கள் மாதிரி பேசினாலோ கேட்காது,

அதே சமயத்தில் மேடையில கூச்சலிடும் கட்சிகாரர்கள் மாதிரி கத்தி பேசினால் விளங்காது..காதுக்காக .ஆங்கில மருத்துவ முறையில் எல்லா சோதனையும் செய்தாகிவிட்டது. நீங்கள் சோதனை செய்ய வேண்டுமென்றால் சோதனை செய்து கொள்ளலாம் என்று முதலிலே எல்லாவற்றையும் ஒப்பிவித்துவிட்டேன்.

    காதொலி சித்தர் வாரிசும் என்னை பரிசோதித்தார். பல கேள்விகளை கேட்டார்.பல வற்றுக்கு உண்மையான காரணங்களையும்.சில வற்றுக்கு பொய்யான தகவலையும் கூறினேன். எதனால் காது கேட்கவில்லை என்ற கேள்விக்கு  சுதந்தரம் வாங்கி தந்த அகிம்சா மூர்த்தி பிறந்த நாட்டிலே “போலீஸ்காரனுங்க பொய் கேசுல புடுச்சுட்டு போயி. செவுள பேத்த கதைய சொல்லல… சொன்னால்…ஏன்? அடிச்சாங்கன்னு கேள்வி வரும். அதுக்கு பதில் சொன்னால்.அதிலிருந்து இன்னொரு கேள்வி வரும்….. இப்படியே………..இப்ப…. அதுவா…. முக்கியம்… காது கேட்க வைக்கிறதுல முக்கியம்………ஒருவழியாக சாமிகிரி சித்தரின் வாரிசும் தீர்மானமாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.
“உங்களக்கு காது கேட்க வைத்துவிடலாம்”…….
“சந்தோசம்”….. அதுக்கு எவ்வளவு செலவாகும்…….
“ஒரு பதிணைந்தாயிரம் செலவாகும்.”..
என்னையறியாமல் பொளந்த வாயை கையால் மூடிக்கொண்டேன்.
சித்தரின் வாரிசே பேசினார்..
“பணத்தை மொத்தமாக கட்டிவிடவேண்டும். பணத்தை கட்டிவிட்டு
கோவையிலுள்ள தலைமை மருத்துவமனையில் ஒரு வாரம் தங்க
வேண்டும். உங்களுக்கு காதில் மருந்து விட்டவுடனே. காது கேட்க
ஆரம்பித்துவிடும் என்றார்.
“பணத்தைப்பற்றி ஒன்றும் கவலையில்லை, பணத்தை பொரட்டி விடலாம்”
ஆனா…… ஒரு சின்ன சந்தேகம்………கேட்கட்டுமா?……….
கேளுங்க…என்பதற்கு அறிகுறியாக  தலையை ஆட்டினார்.
“ஒருவேள………… கேட்கலைன்னா”
.“கேட்கும்”………….
நல்லது கேட்கும்..“ ஒருவேள ………கேட்கலைன்னா,”…….இழுத்தேன்”
கேட்கும்”………
இடையில் சிறிது நேரம் பேச்சு நின்றது
”நான் எதுக்கு கேட்கிறேன்னா…….. ஆங்ங்கிலமருத்துவரு. கேட்காத காதை
கேட்க வச்சுரும்லாம்ன்னு சொல்லி செலவ இழுத்துவிட்டுட்டு கைய விரிச்சுட்டாரு..அந்தக்கடனே இன்னும் அடைபடல…,அதனலதான்……
ஒரு வேள  கேட்க…….லைன்னா”……..
“கேட்கும்”……-ஒரே பல்லவியையே சொன்னாரு….
அடுத்தாக.கேளாத ஒருவர் அவர் முறைக்காக என்னை உரித்துவிடுவது
போல் பார்த்தபடி கண்ணாடி போட்ட வாசல் அருகில்  தயராக நின்று கொண்டு இருந்தார்.
நிலமையை. உணர்ந்த நான் பணத்தை ரெடி பண்ணிவிட்டு வறுகிறேன்
என்று ஒப்புக்கு சொல்லிவிட்டு விடை பெற்றேன்
ஒரு…… வேள………..கேட்கலைன்னா…………………..
 திரும்பவும் ஏமாறுவதுதான்  என்று எனக்கு புரிஞ்சு போச்சு.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

வலிப்போக்கன் சிறுகதைகள் Copyright © 2014 by வலிப்போக்கன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.

Share This Book