"
அவர் அழகானவரும் இல்லை, அழகில்லாதவருமில்லை, அவர்கள் பேசிக் கொண்டது என் காதில் விழுந்ததுமே எனக்குள்ஒருபரவசம் அவரை கண் இமைக்காமல் பார்த்தேன். அவர் அரைநூற்றாண்டை கடந்துவிட்டதாக சொன்னார்.ஆனால் பார்ப்பதற்கு முப்பது முப்பத்தைந்து  இளைஞராக தெரிந்தார். என் ஆசைகள் சிறகடித்தது.
பேசிக் கொண்டு இருந்த அவரிடம் அவர் நண்பர் கேட்டார்.
“எப்படிடா,  நான் கிழட்டாவா ஆயிட்டேன், நீ எனக்கு மகன் போல் இருக்கிறாய்
எல்லாம்,“ ரேஷன் அரிசியின் மகிமையிடா” என்று அவர் சொன்னபோது நண்பர் அதிர் வேட்டு போல சிரித்தார்.நானும்”சத்தமில்லாமல் சிரித்தேன்”.
ஒவ்வொரு கேள்விக்கும் சந்தேகத்திற்கும் சிரிக்காமல் பதில் சொன்னார். அவரின் நண்பரோ அதிர் வேட்டுபோட்டு சிரித்தார்.  அந்த அதிர் வேட்டுடன் நானும் மத்தாப்பு வேட்டுடன் சரித்தேன.. சுற்றியிருந்தவர்கள் அதிர்வேட்டு சத்தம்கேட்டு அவரை பார்த்தபோது அவர்களும் கம்பி மத்தாப்பாக சிரித்து வைத்தார்கள்.
அன்று ஏக்கமும் சோகமும் நிராசையுமான என் மனம் உற்சாகத்தால் நிரம்பியது.அவரைப்பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என  என் மனம் பரபரத்தது. துறு துறுத்தது.
“ நான் எப்படி?…… அறிமுகமில்லதா அவருடன் அறிமுகமாவது. என் பென்மை என்னை பின்னுக்கு இழுத்தது. படித்திருந்தாலும்  பெண்களை அடிமைபடுத்தி வைத்திருத்த அடிமை புத்தியும் தயக்கமும் பயமும்  என்னுள்ளும் மேலோங்கி நின்றது.
அவர் தனியாக இருந்தால் தைரியமாக அவரிடம் அறிமுகமாகி விடுவேன்.
நான் வந்த வேலை முடிந்தும் அவரைப்பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆசையினால் காத்து இருந்தேன். சிறு துப்பு கிடைத்தால் போதும் மனம் நிம்மதி அடைந்துவிடும் பிறகு  எல்லாம் நிதானமாக……………………
அவரை, அவருடைய வழுக்கை தலை நண்பர் விட்டபாடில்லை, அவர் எப்படி விடுவார். பால்ய நண்பர், அதுவும் தொடக்கப்பள்ளியிலிருந்து நடுநிலைப்பள்ளி வரை ஒன்றாக படித்தவர்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்துக் கொள்கிறார்கள்..
எனக்கே இப்படியென்றால்………………….அவர்களுக்கு…………………
என்னை அறியாமல் வழக்கை தலை மீது கோபம் வந்தது.
“அதற்கு இப்படியா?………….. இவ்வளவு நேரமா”?……………..
பெண் என்பவள் பொறுமைக்காரி என்று என்னைப் பார்த்துதான் சொல்லியிருப்பார்கள்….. பொறுமையாக  அவரின் திரு உருவத்தை படம் பிடித்து மனதிற் பதிவேற்றிக்கொண்டேன.
பேசிய களைப்புகள் தீர இருவரும் தேநீர் கடைக்கு சென்றார்கள். நானும் அவர்களை பின் தொடர்ந்து தேநீர் கடைக்கு சென்றேன். கடையில் அவர் என்னை பார்க்கும்படியாக நின்றேன். ஒரு கனம் அவர் என்னைப்பார்த்தார்.
மறுகனம் என் கண்கள் அவரின் கண்களுக்குள் ஊடுருவிச் சென்றது. மெய் மறந்து போனேன்.
சில  விநாடிகளா?…… நிமிடங்களா? தெரியவில்லை. நிதானித்தபோது அவரும் இல்லை. பேசிப்பேசயே வறுத்தேடுதத வழுக்கை தலை ந்ந்தியையும் காணவில்லை.
அய்யோ!!!…….. ஒரே பரிதவிப்பு…….. தவறவிட்ட படபடப்பு….  ஏக்கமும் கவலையும் துக்கமும் மீண்டும் என்னை பற்றிக் கொண்டது.  சுற்றிலும் தேடினேன். தேநீர் கடைக்காரரிடம் விசாரித்தேன்.  அவரைப்பற்றி ஒரு துப்பும் கிடைக்கவில்லை. சோர்ந்து போன மனதுடன்………………….
அடிக்கடி தினமும் அந்த இடத்திற்கும் தேநீர் கடைக்கும்  வந்து சில நேரங்கள் காத்துக் கிடப்பேன் அவரை பார்த்து விடமுடியாத  ……..என்ற நம்பிக்கையுடன்.
 நாட்கள்  மாதங்களாக வருடங்களாக கடந்து விட்டன. அவரை பற்றி …
எந்த தகவலுமின்றி  தனி மரமாக காலத்தை கடத்துகிறேன். பகலில் விட்டுவைத்திருக்கும் அவர்…………… இரவில் என் நிணைவோடு இருக்கிறார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

வலிப்போக்கன் சிறுகதைகள் Copyright © 2014 by வலிப்போக்கன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.

Share This Book