"
3
 
ஒரு ஊரில் கோழி ஒன்று இருந்தது.ஒரு நாள் அந்தக் கோழியானது முதன்முதலாக ஒரு முட்டை ஒன்றை இட்டது. சிறிது நேரத்தில் கோழியிலிருந்து வெளி வந்த முட்டையானது. கோழியைப்பார்த்து“ நானில்லாமல் நீயில்லை” என்றது.கோழிக்கு பொசுக்கென்று கோபம் வந்தது “என்னாது நீயில்லாமல் நான் இல்லையா?.” அட,“ பாதகத்த முட்டையே, கொஞ்ச நேரத்துல நான்தானே உன்னையே இட்டேன.,” அதனால, “நானில்லாம நீயில்ல அத மொதல்ல புரிஞ்சுக்கோ” –என்றது.

கோழி சொன்னதைக் கேட்டதும் முட்டைக்கும் கோபம் வந்தது, நான் சொன்னதை எனக்கே சொல்றியா? “நான் இல்லாம நீ வந்திருக்கவே மாட்டேயே”. சும்மா, குப்பைய கிளறாதே” என்றது முட்டை.

“ நான் குப்பைய கிளறலேன்னா.”.? நீ முட்டையாக வந்திருக்கவே மாட்ட- கோழி.

இப்படியாக, கோழியும் முட்டையும் மாற மாறி தர்க்கமசெய்து இருந்தனஇருட்டு நேரம் நெருங்கியவுடன், சேவல் ஒன்று
அடைவதற்க்காக வந்தது கோழியும் முட்டையும் வாக்குவாதம் செய்து கொண்டு இருப்பதைப் பார்த்து என்னவென்று விசாரித்தது.

“கோழியிலிருந்துதானே முட்டை வரும், அத..கூமுட்டைக்கு சொல்லு”என்றது கோழி

அதெப்படி, “முட்டையிலிருந்துதானே கோழி வருமுன்னு,கூறுகெட்ட கோழிகிட்ட சொல்லு”, என்றது முட்டை

கோழியும் முட்டையும் சொன்னதைக்கேட்ட சேவல்,“ கெக்கக்க்கே.. கெக்கக்க்கே…. சிரித்த்து. கோழியும்.முட்டையும் சேவல் சிரிப்பதை பார்த்து,“நீ என்னத்துக்கு இப்படி வாயப் பொளந்து இந்த சத்தம் போடுறே.. எனறது.

அதுக்கு ,சேவல் சொல்லுச்சு, அடகூமுட்டை, அடகூறுகெட்ட கோழியெ நீங்க ரெண்டு பேருமே சொல்றது தப்பு….. நானில்லாமல் கூமுட்டையும் வந்திருக்காது. அந்தக்கூமுட்டைய கூறுகெட்ட கோழியும் போட்டுயிருக்க முடியாது . அதனால… “நானில்லாமல் நீங்கயில்லை“ இல்லேன்னு ஒரே போடா போட்டு மீண்டும்..கெக்கக்..கக்கே……….கெக்கக்..கக்கே என்று கத்தியது

அட,நாசமா போறவனே என்று கோழி கத்தி திட்டியது

முட்டையோ, இத ஒருக்காலும் ஒத்துக்க மாட்டேன்னு அங்குமிங்கும் உருண்டது.

சேவல்,கோழி,முட்டை மூவரின் சத்த்த்தைக்கேட்ட நாயோன்று அங்கே என்ன சத்தம் என்றவாறு பதிலுக்கு ஊளையிட்டது

இப்படித்தானப்பா….. கூமுட்டைகளும் கூறுகெட்டதுகளும் நாசமா போறததுகளும் நக்கி பிழைப்பதுகளும், காச்சுமூச்சுன்னு கத்திகிட்டும் ஊளையிட்டு இருக்குதுங்க……………….

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

வலிப்போக்கன் சிறுகதைகள் Copyright © 2014 by வலிப்போக்கன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.

Share This Book