அப்பா தினத்தை ஒவ்வொரும் ஒவ்வொரு விதமாக சொல்லிஇருக்காங்க, நானும் முகம் தெரியாத என் அய்ந்தோ,ஆறோ வயதில் பேய் அடித்து இறந்து விட்டதாக,எங்கப்பாவின் பண்ணையாரு சொல்லி. எங்க அம்மா சொன்னாங்க, எங்கப்பா பேய் அடிச்சு சாகல பண்ணையாரு வயலுக்கு தண்ணி பாச்ச போயி கண்மாயிலுள்ள மடயை திறக்க தண்ணிக்குள்ள
முழ்கி மூச்சு திணறிசெத்துப்போனாருன்னு நான் உண்மையை சொல்ற வரைக்கும்,பேய் அடிச்சுதான் தன் கணவரு செத்துட்டாருன்னு நம்பிகிட்டு இருந்தாங்க
அப்படி செத்துப்போன எங்கப்பா,எனக்கு எந்த சொத்தும் வச்சுட்டுப்போகல,அவர் குடியிருந்த கூரை வீட்டைத தவிர. அந்த வீட்டுக்கே,என் இருபதாவது வயசிலிருந்து அம்பத்திஇரண்டு வயசுவரைக்கும் அதாவது முப்பது வருடமாக நீதிமன்றதுக்கும்,வக்கீலு ஆபிசுக்குமாக அலைந்து கொண்டு இருக்கிறேன். சாவு வருகிற வரை க்கும் அலைவேன்னு நிணைக்கிறேன்.ஏன்னா? வழக்கு போட்ட வரும்செத்து போயிட்டாரு, வழக்கு போட்டவரின் மூத்த மகனும் டாஸ்மாக் போதையில போயிட்டாரு, அடுத்து அவுகளுக்குஆதரவா. வழக்கு நடத்திய வக்கீலும் போய் சேர்ந்திட்டாரு, அதனாலதான் சொன்னேன்.
வழக்கு போட்டவரு யாருன்னு?கேட்கலியே, யாரு வயலுக்காக எங்கப்பா பேய்அடிச்சு இறந்ததா சொன்னாரோ அந்த பண்ணையாருதான்.எங்கப்பா குடியிருந்த வீடு அந்தப் பண்ணையாருக்குசொந்தமென்றும் எங்கப்பாவும் அம்மாவும் வாடகைக்குகுடியிருந்ததாகவும், வழக்கு தாக்கல் செய்வதற்கு முன்ஒருவருடமாக வாடகை கொடுக்கவில்லையென்றுவிட்டை காலி பண்ணி வசம் ஓப்படைக்க வேனுமாய்வழக்கு போட்டு இருந்தாரு
பண்ணையாரு. அப்போஎனக்கு வயசு இருபதுங்க,…………………
வயித்து பாட்டுக்கும்,தெருவில இருக்கிற பேராசை. பொறாமை பிடித்த கருப்பு பாரப்பனர்கள்,மற்றுமொரு ஆதிக்க வெறியர்களிடம் சண்டையிட்டுதனால போலீசு நிலையத்துக்கும் வீட்டுக்கும் அலைஞ்சதிலும் பாதி வருசம் ஓடிப்போயிருச்சுங்க.
வழக்கும் இன்னும் முடியாம வாய்தாவுக்கு வாய்தாவா போய்கிட்டு இருக்கு, இந்தா வாய்தா காலத்துல செவ்வா கிரகத்துக்கே போயிட்டு வந்திருக்கலாமுன்னு தோனுதுச்சங்க போறதுக்கு ராக்கெட்டு இல்லிங்க…
இந்தநிலையில் 2005ல தகவல் அறியும் உரிமைச் சட்டமுன்னு வந்தச்சு, வந்துச்சா, அதப்பத்தின விபரம் எனக்கு 2010லுதானுங்க தெரிஞ்சது. அப்ப,என்வீட்டுவரி ரசிதைப் பற்றி மாநகராட்சியிடம் தகவல் கேட்க, என் அப்பன் பெயரில் இருந்த விட்டுவரி முறைகேடாக அய்யா பண்ணையாரு பெயர்க்குமாறியிருக்கிற விபரம் தெரிய வர மேலும் தகவல்கேட்டு மாநில ஆணையத்துக்கு மனுபோட மனுதாரர் கேட்ட தகவலை தர உத்திரவு போட, இப்படியாக பதினொரு தடவை மனு போட்டு பத்து தடவை தோத்து ஒரே தடவையாக ஜெயித்தேனுங்க, பண்ணையாரு பெயரில்முறைகேடாக மாற்றப்படடு இருந்த விட்டு வரியானது திரும்ப எங்கப்பன் பெயருக்கே, மாற்றித் தந்துவிட்டார்கள்.
அந்த விட்டு வரியை வைத்து என்விட்டுக்கு கரண்ட இழுக்க முயற்சிக்க, செத்தப்போன ஒங்கப்பா பெயருல இழுக்க முடியாது விட்டுவரிய ஓங் பெயருக்கு மாத்தினாதான் இழுக்க முடியுமுன்னு சொல்லிட்டாங்க, இதத் தொடர்ந்து, தினசரி கல்லா கட்டும் கிராம அலுவலரைச் சந்திக்க… அவரோ.ஒங்கப்பா செத்த சான்றிதழ் வேணுமுன்னாரு, அந்த சான்றிதழ் எங்கப்பா இருக்குன்னு தேடிமாநகராட்சி செல்ல, ஒங்கப்பா.செத்தப்போ, பஞ்சாயத்தா இருந்துச்சு இப்போ மாநகராட்சியில பதிவு இல்லேன்னு சொல்ல, பிறகு என்ன செய்யுறதுன்னு யோசிக்க…….
எங்கப்பன் செத்த சான்றிதழ கோர்ட்டுல போயிதான் வங்கனு முன்னு சொல்ல, அதுக்கு ஒரு வக்கில பிடிக்க, அவரு கோர்ட்டுலதாக்கல் செய்ய,சிறிது காலத்துக்குப்பின் மாநகராட்சி தலைமை ஆபிசக்கு போயி கேக்க.,அவுக. ஏரியா வார்டு சுகாதார ஆய்வா ளரை பார்க்கச் சொல்ல, சுகாதார ஆய்வாளரை பார்க்க போக
சுகாதர ஆய்வாளரான அல்லா பிச்சையை வெறுங்கையோடு பார்க்கச் சென்றதுக்கு தண்டனையாக மூன்று மாதம் கழித்து
வரச்சொல்ல, இதப்பற்றி வக்கில் அய்யாவிடம் சொல்ல அவரோ,வெறுங்கையோடு போனா அப்படித்தான் சொல்லு
வாங்கே, 200ரூபா கொண்டு போயி கொடுத்தினா, உடனே விசாரிக்கம .விசாரிச்சோம்ன்னு சீட்டு தருவாங்கே,அத
வாங்கிட்டு வான்னு, சொல்ல..
அந்த இருநூறு ரூபாய வச்சுக்கிட்டு.ஒரு வாரமா அலைய கடைசியாக, சுகாதார ஆய்வாளரைப்பார்த்து 200 ரூபாயை கொடுக்க எண்ணயா ,சுத்த விபரம் தெரியாத ஆளா இருக்க, அண்ணிக்கே கொடுத்து இருக்கவேணாமா? என்று கேட்டு இன்னும் இருநூறு கேட்க……..
நானு.பதறிப்போயி.அய்யா.சாமி. பாத்து செய்யுங்க. என்று கெஞ்ச, நாளைக்கு. இருநூறுயை கொண்டுவந்து கொடுத்
துட்டு சீட்டை வாங்கிட்டு போன்னு சொல்ல…
ஒருவழியா படியளந்து, சீட்டை வாங்கிப்போயி கொடுக்க அங்கிருந்த டெச்பாச் அம்மா. கவனிக்கச் சொல்ல, மொத்தமா சுகாதார ஆய்வாளரே வாங்கிட்டாருன்னு சொல்ல, அந்தம்மா, கண்ணாடியை ஏத்தி எனனைய பார்க்க, அது அவரு செய்த வேலைக்கு .இது நான் செய்யிற வேலைக்கு என்று சொல்ல.. .வக்கில் அய்யா.சொன்னது “அவனின்றி(பணம்) அணு அளவும் நகலாது ”ஞாபகத்துக்கு வர, கடைசியாக ஒரு மாதம் கழித்து வந்துடெத் சர்பிகேட் வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்ல…
கோர்ட்டு மூலமா போயி, மாநகராட்சியிடமிருந்து அலஞ்சு எங்கப்பா சொகமில்லாம செத்தாருன்னு சான்றிதழ் வாங்குவது உறுதியாடுச்சுங்கோ…..
சாரிங்க….ஏங் சொந்தக் கதய படித்து சோர்ந்து போயிருப்பீங்க, பொழுது போக்க உலாவரும் சீமான் மாருங்க.“ இதெல்லாம் ஒரு பதிவாக்கும்” என்று எழும்பில்லாத நாக்காலவார்த்தைய வீசுவாங்க… என் அனுபவத்த எழுதுறேனுங்க…
. ரிலாக்ஸ்………..ரிலாக்ஸ் ………..ரிலாக்ஸ்.