"

என் தாயாரும் என் தகப்பனாரும் சேர்ந்து கட்டிய வீட்டைபக்கத்து ஏரியாவுல இருக்கிற முன்னால் பஞசாயத்து அதலைவரும் இன்னால் காந்தி மன்ற தலை வருமான அய்யணன் அம்பலம் என்பவரு, என் அப்பா பெயரிலிந்த வீட்டுவரி யைதன் பெயருக்கு தன் செல்வாக்கை பயன்படுத்தி முறைகேடாக மாத்திட்டாருங்க,அப்ப எனக்கு இருபது வயசு இருக்குமுங்க அப்போ, எனக்கு வீட்டுவரி அது சம்பந்தமான விபரங்கள் ஒன்னுமே தெரியலைங்க.என் அம்மாவோ என்னைய விட சுத்தமுங்க.

என்அப்பா,நான்பிறந்து நாலு அய்ந்த வருசத்துலஇறந்துட்டாருங்க. 1980-ல வீட்டுவரிய மாத்திபுட்டு ரெண்டு வருசம் கழித்துஎன் அம்மாவுக்கு கோர்ட் லிருந்து சம்மன் அனுப்புனாருங்க

கோர்ட்லிருந்து சம்மன் வந்தப்பிறகுதாங்க,வீடு நமக்கு சொந்தமானதுக்கு ஆதாரம் வீட்டு வரிதான் என்று தெரிஞ்சது. எங்கவீடு நாகரீகமானவர்களின் பாஷையில் சொல்வதென்றால் அது சேரிங்க. அந்தச் சேரியில் இருப்பவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களெல்லாம் ஒரே வந்தே மாதரமுங்க்

வந்தேமாதமுன்னா என் பாஷையில் ஒரேசாதிக்காரங்கன்னு அர்த்தமுங்க. நான்குடியிருந்த வீடு ஆயிரம் கண்ணுடையாலுங்க வானத்திலே விமானம் பறந்தாலும், காக்கை குருவி பறந்தாலும் வீட்டிற்குள்ளயே சிரமமில்லாம உட்கார்ந்தபடியே பார்க்கலாமுங்க வெயில் காலத்தில் நார்மல்ங்க, மழைக்காலத்தில் எங்க வீட்டிலயே மீன் புடிக்கலாமுங்க.

அந்த வீட்டில் என் அக்காவை கட்டி கொடுத்த பிறகு நானும் என் தாயாரும் மற்றும் கோழி, நாயி, பல்லி , எலி, சாம்பிரானி, கொசு, மூட்டைபுச்சி காப்பான்பூச்சி கன்னுக்கு தெரியாத ஜீவனுடன்தாங்கஇருந்து வந்தோம்.

பாம்பு,பல்லிகளுடன் அஞ்சாமல் வாழ்ந்து வந்தவங்க யாருன்னா அது நாங்க தாங்க. வீட்டுக்கு கிழக்கு பக்கத்தில் கொஞ்சம் காலி இட முண்டுங்க மொத் ததில் வீட்டையும் காலி இடத்தையும் சேர்த்தால் 6 செண்ட் வருமுங்க தாத்தா வழி பூர்வீக சொத்து அதாவது ரயத்துவாரி சொத்து என்பதால பத்திரம் எதுவும் இல்லீங்க நம்மாலால அடகு,ஒத்தி என்பன போன்று வச்சா தாங்க பத்திரம் என்று பின்னாடி எனக்கு புரிஞசதுங்க.

பக்கத்து ஏரியா அய்யணன் அம்பலம் அனுப்பிய கோர்டடு சம்மன் வந்த பிறகு தானுங்க வீட்டு வரி ரசீதைப் பற்றி தெரிஞ்சதுங்க. என் அம்மாகிட்ட பழைய ரசீதுகளைப் பற்றி கேட்டபோது ஊராட்சி,பஞ்சாயத்து, நகராட்சி மாநகராட்சி வரைக்கும் என் அப்பா பெயரில் கட்டிய இரசீ தெல்லாம் வழக்கு போட்ட அய்யணன்அம்பலத்திடம்தான் கொடுத்து வச்சுருந்தோம் என்று சொன்னங்க

அய்யணன் அம்பலம் என்பவரு, பெரிய பண்னை யாருங்க,கள்ளர் சாதியை சேர்ந்தவருங்க..முன்னால் பஞ்சாயத்து தலைவருங்க.. தற்போது எங்கஏரியா மாநகராட்சியா மாறியி ருச்சாஅதுவும் அவருக்கு வயசாயிருச்சா எங்க ஏரியா காந்தி மன்றத் தலைவரா இருக்காருங்க. இவர்கிட்ட தாங்க என் அப்பு பண்னைக காரனா வேலை பார்த்தாரு.பண்ணையாரின் வயலுக்கு தண்ணி பாய்ச்சுவதற்கு கண்மாயிலிருந்து பிரிந்துவரும மடையை திறப்பதற்கு தண்ணிரில் முழ்கிதான் மடையை திறக்க வேண்டும்.அப்படி பல நாளில் ஒரு நாள் முழ்கி மடையை திறக்கும் போது மூச்சு திணறி செத்துபோனாருங்க.அந்தப் பண்ணையாரு,அத மறைத்து ,பன்னிக்கறி சாப்பிட்டு போனதால மடையில இருக்கிற முனி அடிச்சதனால செத்துப் போனாருன்னு சொல்லிட்டாரு.

எங்க அம்மாவும் நம்பி குறி கோடாங்கி அடித்து, மந்திரித்து என்னனென்ன மூடநம்பிக்கை இருக்கோ அத்தனையும் பாத்து என் அப்பன பிழைக்க வைக்க
முடியலங்க. அரசாங்க ஆசுபதிதிரின்னு ஒன்னு இருந்ததே தெரியலைங்க

………………….(2)தொடருவேன்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

வலிப்போக்கன் சிறுகதைகள் Copyright © 2014 by வலிப்போக்கன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.

Share This Book