"

எங்க வீட்டு வரி ரசீத வீட்ல வைக்க இடமில்லை என்று அய்யா. பன்னையாரு வீட்டுல கொடுத்து வச்சுருந்தாரு என் அப்பு பன்னையாரும் பெருந்தன்மையா சேரி பொம்பளய வளைச்சு போடுவது மாதிரி என் ஆறு சென்ட் இடத்தையும் வளைச்சு போட என் அப்பு காலத்திலேயே முடிவு பன்னிட்டாரு.

வரி வசூலிக்கும் மாநகராட்சி ஆபிஸ்ல போயி கேட்டா வரி கட்டியாச்சுன்னு சொன்னாங்க, யாரு பேருல வரி இருக்கு என்று கேட்டா பன்னையாரு பெயரிலதான் இருக்குன்னு தெரிஞசதது.

அப்போ, மறுப்பு, எதிர்ப்பு மனு ஒன்னு கொடுக்கனும்னு எதுவும் எனக்கு தெரியல, என் அம்மா வீட்டு வேல செய்யும் முதலாளி அம்மா மூலம் அவர்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் பேரு பெற்ற பெரிய வக்கிலைப் புடுச்சு ஏழை எளியவர் களுக்கு குறைந்த பீஸ் வாங்கும் அவர்மூலமா பன்னையாருக்கு பதில் கொடுத்த முங்க. 1980 வரை என் அப்பா பெயரில் வீட்டுவரி பதிவாகி இருக்குங்கஇ1981க்கு பின்னாடி பன்னையாரு தன் பெயர்க்கு வீட்டுவரியை மாத்தின பிறகு இரன்டு வருஷங்கள் கழித்து வீடு அவரின் கைவசம் இருந்தது என்ற ஆதாரத்தை ஏற்ப்படுத்தின பிறகே,அவர் வீட்டில் நாங்கள் வாடகைக்கு குடியிருந்ததாகவும் கடந்த ஒரு வருடமாக வாடகை கொடுக்காமல் இருந்ததாகவும் மேலும் வீடானது இடிந்து விழும் நிலையில் இருப்பதாகவும் அதை இடித்துவிட்டு காங்கிரிட் வீடு கட்ட இருப்பதாகவும் பலமுறை பிரதிவாதியை காலி பண்ணச்சொல்லியும் மறுத்து வருவதால் மேற்படி பிரதிவாதியை வீட்டை காலி செய்ய உத்திரவிடுமாறும் நஷ்டஈடு வழங்கமாறும் வேண்டி தாலுகா கோர்டடில் வாடகை கட்டுப்பாட்டு நீதிமன்றத்தின் மூலமாக சம்மன் வந்ததுங்க…..

அந்த சம்மன் தமிழ்ல இல்லாம இங்கிலீசுல இருந்ததினால என்ன விவர முன்னு எனக்கு அப்போ தெரியலைங்க.என் அம்மா நம்ம மகனத்தான் படிக்க வச்சுட்டோம். என்ற சந்தோஷத்தில் என்னடா எழுதியிருக்குன்னு கேட்டாங்க நானும் முன்ன வந்த வக்கில் நோட்டிசில் இருந்த விவரத்தை சொல்லி எங்க அம்மாகிட்ட பேரு வாங்கிட்டேனுங்க. இங்கிலிசுல இருக்கிறத மகன் படித்து சொல்லிட்டானுன்னு என் அம்மாவும் பெருமை பட்டாங்க.

தெரிந்தவர்களின் ஆலோசனை பிறகாரம் என் அப்பா பெயரில் இருந்த வீட்டு வரி எப்படி அய்யணன்அம்பலம் என்பவர்க்கு மாறியதுன்னு கேட்டு பல தடவை மனுபோட்டேனுங்க.ஒரு வெண்ணையும்,வெளக்கெண்ணையும் பதில் சொல்லலங்க, நானும் விக்கிரமாதித்தன் மாதிரி விடாம் மனுபோட்டு மனு போட்டு ஓயமா முயற்சி செய்துகிட்டே வந்தேன். அப்படி, ஒரு முயற்சியின் பயனாக வீட்டிலுள்ள மண்பானை,நெல் போட்டு வைக்கும் குழுமை ,பிற இடங்களில் நோண்டியதில் (இணையத்தில் தேடுவது மாதிரி) என் அப்பா பெயரில் இருந்த வெவ்வேறு காலகட்டத்தில் கட்டிய ரசீதுகள் மூன்று கிடைத்தன.கடைசியாக கட்டிய மாநகராட்சி ரசீதும் கிடைத்தது
அந்த ரசீதால் வாடகை கட்டுப்பாட்டு கோர்ட்டில் பண்ணையாரு போட்ட வழக்கு தள்ளுபடியாச்சு இந்த தீர்ப்பும் பத்து வருடத்துக்கு மேல கிடைச்சதுங்க.

இந்த தீர்ப்பு கிடைப்பதற்கு முன் என்னனென்ன துன்பங்கள் துயரங்கள ,பண்ணையாரும் அவரது எடுபிடிககளும் தெருவிலுள்ள நாட்டாமைகள் நாட்டாமையின் சின்னவீடு

தொடரும்-3

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

வலிப்போக்கன் சிறுகதைகள் Copyright © 2014 by வலிப்போக்கன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.

Share This Book