"


நகராட்சியில் அது பறச்சேரியாக இருந்தது. மாநகராட்சியில் அது பறய தெருவாக அழைக்கப்பட்டது. அந்தப்பறயத் தெருவுக்கு ஒரு நாட்டாமை அந்த நாட்டாமைக்கு பல வைப்பாட்டிகளில் ஒரு வைப்பாட்டியின் மகள் அவள்.அவள் பார்ப்பதற்கு அழகில்லாதவள். சுமார் என்றும் சொல்வதற்கும் லாயயிக்கில்லாதவள். தமிழ்நாட்டு அத்தாவைவிட சற்று குண்டானவள் பெருத்த மார்பகங்களை கொண்டவள். அதோடு வயிறும் அதன் பங்குக்கு முட்டி மோதிதள்ளிக் கொண்டு இருக்கும். அவளுடைய மாறாப்பு மார்பகத்தையும்.வயிற்றையும் எப்போதாவதுதான் மூடியிருக்கும்.

அந்த பறயதெருவிலுள்ள ஆம்பிள பொம்பிள அனைவருக்கும் ஆம்பிள பொம்பள நாட்டாமையைவிட அவள்தான் பவரானவள். இவளுடன் சண்டையிட்டு மோதி  ஜெயிக்க முடியாத அளவுக்கு பராக்கிரமம் பெற்றவள்.

இவள் கம்பெடுத்து சண்டையிட்டு வெற்றி வாகை சூடும் விராங்கனையல்ல  ஒலக வாயி, ஒலக ஒலிப்பெருக்கி என்று பெயரெடுத்தவள் அந்த பறய தெருவில் குடியிருக்கும் சீமான் சிமாட்டிகளின் கள்ளக்காதல்.களவாணிக் காதல் திருட்டுக்காதல் போன்றஎல்லாதிரை மறைவு அயோக்கியங்களும், களவானி தனங்களையும் தெரிந்து வைத்திருந்ததால்……..

இவள் சண்டையிடும் போது  சண்டையிடுபவர்களின் அத்தனை கயவாளி தனங்களையும் ஒலிபெருக்கியாய்  நேரடி வர்னனையுடன் ஒளிவு மறைவு இன்றி தேனாறும் பாலாறுமாக ஓடும். தன்னை மதிக்காமல் இருககும் நேர்மையாளர்களின் வீட்டில் இரவில் கல்லெறிவாள். பொய்யாக அவதூறாக அவர்கள் மீது போலீஸில் புகார் செய்து அலைய வைப்பாள். இதனால் அவள் அந்தத் தெருவில் பொம்பள தாதாவாக வலம் வந்தாள்.

வாழ்க்கை சக்கரத்தில் ஒரு நாள்  இவள் மண்ணெண்னெயில் வெந்து இறந்து போனால். எப்படி இறந்தாள் என்பது மர்மாகத்தான் இருக்கிறது.இவள் ஒரு டாஸ்மாக் குடிமகள். இதோடு போதை மாத்திரை பழக்கமுள்ளவள்.

இவள் இறந்த சிலநாட்கள் கழித்து இவள் வீட்டிற்குள் கழுதை ஒன்றை விட்டு கதவை பூட்டு போட்டு பூட்டி விட்டார்கள். மூன்று நாட்கள் கழித்து கதவை திறந்து கழுதையை தெரு வழியேஇழுத்துச்சென்றார்கள்-
அவளின் கனவனும் தம்பியும்………………….

கழுதையை வீட்டுக்குள்ளே பூட்டியது எதுக்குஎன்றால். மூன்று நாட்களாக அடைக்கப்பட்ட கழுதை கத்தியிருந்தால் அவள் பேயாக அந்தவீட்டிலே இருக்கிறாளாம், கழுதை கத்தாதினால் அவள் பேயாக இல்லையாம்……….

தற்கொலையோ, கொலையோ நடந்த வீட்டில் இறந்தவர்கள் பேயாக இருக்கிறார்களா? இல்லையா? என்பதை அறிய கழுதை மூலம் கண்டுபிடித்த  அந்த மகா விஞ்ஞானியின் பேரும் ஊரும்  தெரிவில்லை. தெரிந்திருந்தால்
அவருக்கு கோயில் கட்டி சுவத்தில சாத்தி வச்சுருக்கலாம்……………….

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

வலிப்போக்கன் சிறுகதைகள் Copyright © 2014 by வலிப்போக்கன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.

Share This Book