நம்மைப் படைத்து பரிபாலித்து காக்கும் கடவுளுக்கு மட்டும் பயந்தால் போதுமானது என்றார். கடவுளுக்கு பயப்படாமல் போனதால்தான் நாட்டில் வன்முறையும் சீர்குலைவும் தலைவிரித்தாடுகிறது என்றார்.
சாமியாரின் கூட்டத்தில் அமர்திருந்த அவ்வூர் மக்களில் பலர்
“சாமி, நீங்கள் சொன்னபடியேதான் நாங்களும் எங்கள் முன்னோர்களும் இறைவனுக்கும் ஊரில் உள்ள பெரிய மேன்மக்களான பணக்காரர்களுக்கும் பயந்து இறை அச்சத்துடனே வாழ்ந்து வருகிறோம். அப்படியிருந்தும் இறைவன் எங்களை ஏறேடுத்தும் பார்ப்பதில்லை எங்களுக்கு எந்த ஆசியும் வழங்குவதில்லை. பணக்காரர்களை மட்டும்தான் அவர் பார்த்துக் கொள்கிறார். நீங்கள்தான், கடவுளிடம் சொல்லி, எங்களையும் பணக்காரர்கள் ஆக்க ஒரு வழி காட்ட வேண்டும் என்றனர்.
பணக்காரர்களுக்கு இறையச்சம் இல்லாமல் போனதினால்தான் இவ்வளவு விளைவு என்றுவிட்டு இருந்தாலும் பணக்காரர்கள் செய்யும் தான தருமங்களில் கடவுள் மயங்கி விடுகிறார். ஆனாலும் நீங்கள் எப்பொழுதும் இறையச்சத்துடன் இருந்தால் கடவுள் உங்களுடனே துணையிருந்து உங்களுக்கும் அருள் காப்பார் அதற்கு நான் கேரண்டி என்றார்.
அந்த ஊர் மக்களும், சாமியார் சொன்னதை அருள்வாக்காக நிணைத்து கொண்டு,அச்சம் என்பதை அறிவுடமையாக்கி, தனக்கு மேல் இருப்பவர்களுக்கு பணிவு காட்டி மனதில் அச்சம் கொண்டு தனக்கு கீழ் உள்ளவர்களிடம் கோபம் கொண்டு மிரட்டி அடக்கி ஒடுக்கி வந்தனர்.
இப்படி ஒவ்வொரு மக்களும் தங்களுக்கு கீழ் உள்ளவர்களை மிரட்டியும் அடக்கியும் அதிகாரம் செலுத்தி ஆண்டான் அடிமை என்ற அச்சத்தை விதைத்து இறைவனிடம் இறையச்சம் கொண்டவர்களாக வாழையடி வழையாக வாழ்ந்து வந்தனர்.