"

ஒலக அறிஞரும்,ஒலக அழகியும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து கொண்டனர்.அப்போது ஒலக அழகிக்கு ஒலக அறிஞர் பேசிய

பேச்சின் போது ஒலக அறிஞர் மீது காதல் வந்தது.

அந்தக் காதலை ஒலக அறிஞரிடம் வெளிப்படுத்தும் விதமாக ஒலக அழகி .ஒலக அறிஞரிடம் சொன்னார்.

ஒலக அறிவுள்ள நீங்களும்.ஒலக அழகி நானும்.ஆக நாம் இருவரும் திருமணம் புரிந்து கொண்டால்.பிறக்கும் குழந்தை
ஒங்க அறிவும் என் அழகும் சேர்ந்து இருக்கும்.இதனால் ஒங்க அறிவும் என் அழகும் இந்த ஒலகத்தில் அழியாமல் இருக்கும். அதனால் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம். என்ன சொல்கிறிர்கள் என்று கேட்டார்
ஒலக அழகி.

ஒருகணம்.மயங்கி.திகைத்து.சுதாரித்தக்கொண்ட ஒலக அறிஞர்.ஒலக அழகியிடம் சொன்னார்.

அப்படியா! …அழகில்லாத என் அழகும் .அறிவில்லாத உன் அழகும் சேர்ந்து பிறந்தால். பிறக்கும் குழந்தை“ உலகத்துல
அழியாத அவமானச் சின்னங்களில் ஒன்றாக இருந்துவிட்டால் என்ன செய்வது……

ஒலக அறிஞரின் இந்தப் பதிலைக்கேட்ட ஒலக அழகி பதிலேதும் சொல்லாமல் சென்றுவிட்டார். அதிலிருந்து ஒலக அறிஞரை சந்திப்பதையே தவிர்த்துவிட்டராம்.

ஒலக அறிஞரின் அறிவும் ஒலக அழகியின் அழகும் சாமானிய மக்களுக்கு பயன் பட்டதாக வரலாறே இல்லை.

(குறிப்பு. அறிவும்.அழகும்உள்ள விந்துதானம்.மற்றும் இதே ஒலக அழகி வழியில் சிந்திப்பவர்கள் கவனிக்கவும்)

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

வலிப்போக்கன் சிறுகதைகள் Copyright © 2014 by வலிப்போக்கன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.

Share This Book