ஞாயிற்றுக கிழமை.மாலை வேளையில் கொட்டி தீர்த்த மழை ஓய்ந்து சாரலாக பெய்து கொண்டுயிருந்தது. சாலையில் மக்கள் நடமாட்டமும் போக்குவரத்தும் குறைந்திருந்தது.
துாறல் மழையில் நனைந்தபடி பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்தேன்.பஸ் நிறுத்தத்தில் நான் போய் நின்ற சமயம் நடுத்தர வயதை உடைய ஒருவரும் என்னருகே வந்து நின்றார்.
எவ்வளவு வெயில் அடிச்சாலும் மக்கள் போய்கிட்டும் வந்துகிட்டும் இருக்கிற சனங்க, ஒரு மழைக்கு சிட்டா ஓடி ஒளிஞ்சுருதுகளே!.
அவர் பேசியதைக்கேட்டு புன்னகைத்தேன். மழை சாரலாகத்தான் பெய்து கொண்டு இருந்தது.
பின்,அவராகவே பேசினார்.ஆமா,இன்னும் பஸ் வரலியே?
மழைக்கு ஒதுங்கியிருக்கும் .மழை நின்றவுடன் வந்துடும்.”
என்னை மேலும் கீழும் பார்த்தவர் சிரிக்க ஆரம்பித்தார். நான் அவரை பார்க்காமல் வானத்தை அன்னாந்து பார்த்தேன்.
ஆமாமா, சனங்களே! மழைக்கு ஒதுங்கயில்லே, பஸ்சும் ஒதுங்கத்தானே செய்யும். கொஞசம் சத்தமிட்டு சிரித்தார்
அவரு மட்டும் சிரிக்கிறாறே.—பொறாமையில் அவரைப் பார்த்தேன்.
அப்போது,இளம் பென்னோருத்தி குடை பிடித்தபடி வந்து நின்றார். எங்கள் இருவர் கண்களும் பார்த்தன.. இதே சமயத்தில் அந்தப் பொன்னும் எங்கள் இருவரையும் பார்த்துவிட்டு வெடுக்கென்று தலையை திருப்பிக் கொண்டாள். எனக்கு புரிந்தது
நான் பார்ப்பதற்கு அழகாகயில்லை.அவரும் அப்படித்தான ஈரத்துடன் நின்றுயிருந்தோம்.
சிறிது இடைவெளிக்குப்பின் அழகான கதாநாயகன் ஒருவன் அந்தப் பெண்னருகே வந்து நின்றான். நாங்கள் இருவரும் அவனைத்தான் கவனித்தோம்.
துாரத்தில் பஸ் வருகிறதா?ன்னு பார்த்தேன்.மழை கொஞ்சம் பெரிய சொட்டாக பெய்ய ஆரம்பித்தது.யுவனும் யுவதியும் ஒரே குடைக்குள் நின்றனர். எங்களுக்கு .ஒதுங்க இடமில்லாததால்
மழையில் நனைந்தவாரே நின்றோம்
அவரைக் கவனித்தபோது கண்கள் விரிய குடைக்குள் இருப்பவர்களை பார்த்துக் கொண்டு இருந்தார். அப்படி என்னத்த வாய திறந்து பார்க்கிறாரு -நானும் குடைக்குள் இருந்தவர்களைப் பார்த்தேன் எனக்கு என்னவோபோல் ஆகிவிட்டது.எப்படி சொல்வதென்று தெரியவில்லை.கை கால் நடுங்க ஆரம்பித்துவிட்டது.
அந்த பஸ் நிருத்தத்தில் நான்கு பேரைத்தவிர யாருமில்லை முக்கால்வாசி நனைந்துவிட்டேன் மழை சிறிது குறைந்தது.
இந்த கூத்தத்தான் கண்டேங்களா! நாடு எங்க போகுதுன்னு பாத்தீங்களா!
நா……ன்….எங்க பாத்தேன்.நீங்கதான் கண்ண அசைக்காம பாத்தீங்க…..
அப்பவாச்சும்,ஒருத்தன் நம்மல பாக்குறானே ன்னு வெட்கப்படுவாங்கன்னு பாத்தா,வெட்கம் என்னவிலன்னு கேட்பாங்க போலிறுக்கு.
“சின்னஞசிறுசுக,தைரியம் அதிகம்தான்”
“அதுக்காக இப்படி வெட்டவெளியிலா”.
இப்பவாச்சும் ,பரவாயில்லீங்க, பேருக்காக குடைய மறச்சுகிட்டு முத்தம் குடுத்து கிட்டாங்க.நம்ம நாடு வல்லரசாக மாறியிடுச்சுன்னா குடையோ முக்காடோ எதுவுமே தேவைப்படாது..எங்கெங்க சந்திக்கிறாங்களோ அங்கங்கே உதடடோடு உதடாக முத்தம் கொடுத்துக்கலாம்..
நிஜமாகவா?……
பின்னே,பொய்யா சொல்றேன்.
எப்ப வல்லரசா மாறும்,,,,
அவசரப்படாதிங்க…இப்பத்தானே, பஸ் ஸ்டாப்புல பாத்துயிருக்கீங்க சீக்கிரமாகவே வல்லரசாயிடும்.
மழை விட்டதும் பஸ்வருமுன்னு சொன்னமாதிரி பஸ் வந்து நின்றது எங்களுடன் யுவதியை முத்தமிட்ட யுவனும் பஸ்ஸில் ஏறினான் பஸ் மறையும்வரை முத்தமிட்ட பெண் முத்தமிட்ட இளைஞனுக்கு காற்று முத்தமிட்டவாறே, கையை ஆட்டி விடைகொடுத்துகொண்டு இருந்தாள்.
முத்தமிட்ட இருவரும் காதலர்களா? கனவன்மனைவியா? இப்பவரைக்கும்
எனக்கு தெரியவில்லை..