"
சிவனும் பார்வதியும் இரு அமர்வு நீதிபதிகளாக அமர்ந்திருக்க, மனுதாரர் தரப்பு வழக்குரைஞராக வடபழனி முருகனும் அவருககு சீனியராக சிறிரெங்கத்து ரெங்கநாதனும்

மனுதாரர்க்கு எதிராக வழக்குரைஞர் எமதர்மராஜாவும் அவருக்கு உதவியாக சித்ரப்குப்தனும்

ஆஜராக வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வடபழனி முருகன் தன் வாதத்தை முன் வைத்தார்.
மை லார்ட் ,என் கட்சிக்காரர் ஆதியில் பணமும் புகழும் படைத்தவர். அவரின் திருவுரும் அனைத்து மக்களுக்கும் பிரசித்தமானது. அவர் மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும். சிறந்த நிர்வாகத்தை வழங்கவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர். அப்பேர்ப்பட்டவரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று வீண்பழி சுமத்தப்பட்டுள்ளார்.

இந்த வீண்பழியானது.என் கட்சிக்காரர் சொர்க்கத்துக்கு செல்வதை தடுப்பதற்க்காக புனைந்து போடப்பட்டவை,

இந்தப் பழியைத்தீர்க்கத்தான் விலையில்லாஅரிசியும்,  விலையில்லா,மின்விசிறி, மிக்ஸிகிரைண்டர் போன்றவை
வழங்கப் படுகின்றன்.
முன்பு ஆட்சி புரிந்தவர்களால் கொடுக்கப்பட்டஇலவச தொலைக்காட்சியில் மக்கள் மயங்கிவிடக்கூடாது  என்பதற்க்காக, தேவ பானக் சரக்கு அதிக எண்ணிக்கையில் விற்க உத்தரவிடப்பட்டுள்ளன.  இது போதான்று என்
கட்சிக்காரரினசார்பில் என்னுடைய திருத்தலங்களில் தங்கத்தேர் இழுத்து நேர்த்திக்கடனும் செய்யப்படுகின்றன
இடையில் சீனியர் ரங்கநாதன் எழுந்து வடபழனி முருகனின் காதில் கிசுகிசுத்தார். முருகன் தலையாட்டி புன்முறுவல்பூத்தார்.
யெஸ்,மை லார்ட் என் சீனியர் ரங்கநாதன் திருத்தலத்திலும் பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார். இவைகளை
இணைத்தும் நிணைத்தும் பார்த்து , சொர்க்கத்துக்கு செல்வதில் விதிக்கப்பட்ட தடையை விலக்கி கொள்ளுமாறு பிராஸ்திக்கப்படுகிறது.
தேங்க் யூ மைலார்ட்.— மூன்று முறை தலைவணங்கி தன் இருக்கையை நோக்கி அமர்திருந்த சீனியர் ரங்கநாதனை
பார்த்து தலையசைத்தார்.
பதிலுக்கு சீனியர் ரங்கநாதனும் தலையசைத்தார்.
அமர்வு நீதிபதிகள் இருவரும் எதிர்தரப்பை பார்த்தார்கள்.
கணத்த தொந்தியை மறைத்தவாறு எழுந்தார் எமதர்
மனுதாரரின் பணமும் புகழும் பற்றிய கணக்கு வழக்குகள் தாக்கல் செய்யப் படவில்லை.நல்ல நிர்வாகத்தையும், வழங்க
செய்வதற்கு முன் மனுதார் சொத்து 2கோடியாக இருந்தது. அவர் தொண்டு செய்தபின் அவரின் சொத்து 66கோடியாக
உயர்ந்தது. இந்த அதிசியத்தின் காரணமாகத்தான். மனுதார் சொர்க்கத்துக்கு செல்ல தகுதியற்றவரனார். அதன் பேரில்தான் அவருக்கு தடையானை பிறப்பிக்கப்பட்டது. .
இடையில் அமர்வு நீதிபதியில் ஒருவரான பார்வதி குறுக்கிட்டார்.
“அந்த 2கோடியப்பத்தி இங்கு பேச வேண்டாம் அது முடிந்து போன கதை” என்றுவிட்டு அடுத்த அமர்வு நீதிபதியான சிவனை பார்த்தார்.
அவரும்,“ஆமாம், அது தொடர்பான வழக்கிற்கு சம்பந்தமில்லாத விபரங்களை இங்கு பேச வேண்டாம் என்றார்.
“எஸ் மை லார்ட் என்றுவிட்டு, எம்தர்மர் தன்னிலை விளக்கமளித்தார்.
மனுதார் தான் பெற்ற பணத்தையும் புகழையும் கொண்டு தானுண்டு தன்வீடுன்னு இருந்தாரென்றால். அவர் சொர்க்கத்துக்கு நேரா செல்வதற்கு தடையேதுமில்லை, வாதி நல்ல நிர்வாகத்தையும். தொண்டயும் வழங்குவதற்கு
வந்துள்ளதால் 2கோடி எப்படி வந்தது என்று கேட்க வேண்டி வந்தது என்றார்.
இரண்டு அமர்வுகளும் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
அந்த இடைவெளியில் சித்ரகுப்தன் சில குறிப்புகளை எமதர்மரிடம் கொடுத்தார்.
எமதர்மர் தன்வாதத்தை தொடர்ந்தார்
.மை லார்ட்,  சொர்க்கத்துத்துக்கு செல்பவர்கள் தங்களுடைய கரும பாவங்களை தீர்க்க.பல்வேறு வழிமுறைகள் உள்ளன.
அவற்றில் ஒன்று தங்கத்தேர் இழத்தல், உண்டியலில் காணிக்கை செலுத்துதல் என்பன.
சொர்க்கத்தின் சட்ட ஆகம விதிகளின்படி சொர்க்கத்துக்கு செல்பவர்கள்தான் தங்கத்தேர் இழுக்க வேண்டும், அவரேதான் உண்டியலில் காணிக்கையிட வேண்டும்,விதிவிலக்காக, ஒருவர் பிறந்த நாளில் அவருக்காக மற்றவர்கள்,தான தருமங்கள், பரிசலிப்புகள், திருத்தலங்களில் அபிசேக ஆராதனை செய்யலாம்.
தங்கத்தேர் இழுத்தல், உண்டியலில் காணிக்கை செலுத்துதல் போன்றவை  சம்பந்தப்பட்டவர்களைத்தவிர மற்றவர்கள் செய்தால் சம்பந்தபட்டவர் சொர்க்கத்துக்கு செல்ல முடியாது என்பதை அடிப்படையாக வைத்தே  தடையாணை
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சொர்க்கத்துக்கு செல்வதற்கு வாதி தன் பாவ கருமங்களை தொலைப்பதற்கு உண்டான பரிகாரங்களை வாதியே செய்யாததால், வாதிக்கு சொர்க்கத்துக்கு செல்ல தகுதியில்லை ஆகவே மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து குறுக்கு வழியில் சொர்க்கத்துக்கு செல்ல முயலும் மனுதாரர்க்கு வாழ்நாள் தடையாணை விதிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன் என்று எமதர்மரும் தன் தொந்தியை தாங்கியவாறு முனு முறை தலை வணங்கி நிமிர்ந்தார்
இரு அமர்வு நீதிபதிகளில் பார்வதி மண்டையை சொரிந்தார், சிவன்  அண்ணாந்து மொகட்டை பார்த்தார்.
பின் இருவரும் தங்களுக்குள் பார்த்துக்கொண்டனர். பின் அவர்களுக்குள் கிசுகிசுத்தனர்.
பின் சிவன் தொண்டையை செருமியவாறு சொன்னார். “ஆகம விதிகளில் சொல்லப்பட்டு இருக்கிற சட்டப்பிரிவுகளை விளக்கி சொர்க்கத்தை நிர்வாகிக்கும் பிரம்மன் நான்கு வாரத்திற்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்படுகிறது.
அடுத்த அமர்வு நீதிபதி பார்வதி, அடுத்த அஜென்டாவை படித்தார் “மறு தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கு ஒத்தி
வைக்கப்படுகிறது என்றார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

வலிப்போக்கன் சிறுகதைகள் Copyright © 2014 by வலிப்போக்கன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.

Share This Book