"

வழக்கமாக காலை வேளையில் குளிப்பதற்ககாக ஆற்றுப்பக்கம் சென்று இருந்தேன். நான் வழக்கமாக குளிக்கும் இடத்தில் மூன்று பேர்கள் குளித்துக் கொண்டு இருந்தார்கள்.அவர்கள் குளித்து முடிக்கும் வரை அருகில் உட்கார்ந்து கொண்டு அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டு இருந்தேன். அவர்கள் எனக்கும் கேட்கும் விதமாக சிறிது சத்தத்துடன் பேசிக் கொண்டு இருந்தார்கள்அதில் ஒருவர் சொன்னார், இந்த அம்மா எப்போ ஆட்சிக்கு வந்தாலும் விலைவாசி பிரச்சினையைத்தான் எதிர் கொள்ளும். ஆட்சி நிர்வாகமும் ஒழுங்கா போகும். முன்பு. பால்விலை, பஸ்கட்டணவிலை. இப்போது மின்கட்டணம்,பத்திரபதிவு கட்டணம் போன்றவை.மத்தியரசு ஏற்றிய ரயில் கட்டணம், கேஸ்சிலிண்டர் கட்டணம், போன் சேவைக்
கட்டணம் போன்றவை ஏற்றியது சரியான நடவடிக்கைதான். என்றார்

ஆமாமா,எல்லாம் சரிதான் கூலி உயர்வுக்கு தகுந்தமாதிரிதான்  விலைவாசிஉயர்வையும் ஏத்தினாதானே. அரசாங்கமும் தாக்கு பிடிக்கமுடியும்ஒரு கொத்தனாரும்,சித்தாளும் பத்து மணிக்கு வாராங்க,அப்படியும் இப்படியும் ஆட்டுநாங்க ஆறு மணியானவுடனே கொத்தனாருக்கு அய்ந்துறுாறும் சித்தாளுக்கு முன்னுாறும் வாங்கிடுறாங்க. சாதாரன அரசுஊழியரே கொஞ்சமா வாங்குறாங்க. அவுகளுக்குகெல்லாம் படியளக்குறதுக்கு வேனாம்மா என்றார்.

என்ன கொஞ்ச நாளைக்கு இந்த சிவப்பு சட்டைகாரங்க போஸ்டர் ஒட்டுவாங்க,  உனண்ணாவிரதம். தர்னான்னு
கத்துவாங்க.அப்புறம் அவுங்களும்அமைதியாயிடுவாங்க. என்றார் வேறெருவர்.

நான் அமைதியாக அவர்கள் பேசுவதையே கேட்டுக் கொண்டே   இருந்தேன் அவர்கள்  மூவறும் முரண்பாடாக பேசிக்கொள்வில்லை .விலை உயர்வு சரிதான் என்பதற்கான காரணங்களை அவர்களுக்கு தெரிந்த விசயங்களை
பகிர்ந்து கொண்டாதாகவே எனக்கு பட்டது.

அவர்களுக்குள் பகிர்ந்து கொண்டு சொன்னவைகள்  சில வகைகள்  உண்மையாகத்தான் தெரிந்தது. எல்லாக்  கட்சித்தலைவர்களும் கட்டண உயர்வைஎதிர்த்து அறிக்கை  விடுவதும் கட்சியின் பெயரால் ஆர்ப்பாட்டம் .உண்ணா போராட்டம்.நடத்திவிட்டு ஓங்ந்தவிடுவதுமாகத்தான் நடந்து  கொண்டு இருக்கிறது

அரசாங்கமும் ஒரு பொருட்டாகவும் எடுத்துக்கொள்வதில்லைபணம் இருப்பவர்களுக்கு  எந்தப்பிரச்சிணையும் இருப்பதில்லை. இல்லாதவர்களுக்கும்  பிரச்சினையில்லை. ரெண்டுங் கெட்டான் பேர்வழிகளுக்குதான் பிரச்சினை. அவர்களும் சிறிது நாட்களுக்கு ஒப்பாரி வைத்து அழுதுவிட்டு நிலைமைக்கு எற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள்.

கட்டணத்தைஏற்றிய அரசை பணியவைக்கவோ,  ஏற்றின கட்டணத்தை வாபஸ் வாங்கவைக்கும்படியான விரமிக்க போராட்டமோ நடைபெற போவதில்லை.யாராவது போராடாடுவார்கள் என்று  தொன்னாந்து இருப் பார்கள் அவர்கள் .சிற்சில வினாக்களை என்னைப்பார்த்து கேட்டபோது .என்னசொல்வது என்று முழித்தேன்.அவர்கள் பேசியதிலிருந்து இப்படியும்  புரிந்து கொண்டேன்

சிறை.கோர்ட என்று படைகட்டி ஆளும் அரசாங்க  கூட்டத்தை. படைஇல்லாத கூட்டம் வென்றுவிடுமா?

இடிந்தகரை போராட்டத்தை படையைக் கொண்டு முறியடித்தார்கள்.நவீன அரசாங்க கோயாபல்சை யெல்லாம் வைத்துதானே புளுகித்தள்ளினார்கள் அவர்களின் வாயைத்தான் மூடத்தான் முடிந்ததா?? அந்த உண்மையை பாதுகாக்க முடியவில்லையே!!

பஸ் கட்டணம் ஏறிய போது பஸஸில் போகமால்தான் இருந்தார்களா? டீ,காபி குடிக்காமல் இருந்தது யாரு?  மின்கட்டணம் ஏறும்போது பயன்படுத்தாமல் இருந்திடுவார்களா? பொட்ரோல் விலை ஏறியபோது வணடி ஓட்டாமல்தான் விட்டார்களா? பத்திர பதிவு கட்டணம்  உயர்ந்ததினால்விடு,இடத்தை விற்காமல் வாங்காமல்  இருக்கமுடியுமா? போன் பேசாமல் தவிர்த்துதான் விடுவார்களா? கேள்வி கேட்டார்கள் அவர்களே பதிலையும்சொன்னார்கள்  அப்படியெல்லாம் எதுவம் நடக்காது. என்று!!!!

கல்யாணமாகி புது வீட்டுக்கு வந்த புதுப்பொன்னு , கொஞ்சநாளைக்குபரபரப்பா இருக்கும். அப்புறம் சோர்ந்து போயிடும். அது மாதிரிதான் இந்த மக்களும்  கட்டண உயர்வு என்றவுடன் பரபரபரப்புடன் கத்துவார்கள்தாவி குதிப்பார்கள்

அப்புறம்………. அப்புறம்… அடுத்த தேர்தல் வந்துடும் எல்லாத்தையும் முடடைகட்டி கடாசிவிட்டு  ஓட்டு போடாம இருக்கமுடியுமா?ன்னு கேள்வி கேட்டு  இருக்கிற பதிலை உள்வாங்கிக்  கொள்ளாமல். ஜனநாயகக் கடமையை ஆற்றி விட்டு  வருவார்கள்.

ஆற்றில் குளித்தவர்கள் இப்படித்தான் ஸனநாயகக் கடமையை செய்பவர்களை கிண்டலடித்தார்கள்.என்க்கும் சத்தமில்லாமல் சிரிப்புவந்தது. ஆனால் அவர்கள் சசிகலாவின் அக்கா விசுவாசிகள் அல்ல என்பது தெரிந்தது.

அண்ணன் இருக்கும்போது அண்ணி என்று விட்டு,  அண்ணன் செத்த பிறகு பதவிக்கு வந்த அண்ணியை அம்மா. அஆத்தா, தாயே . பேயே, என்று துதி பாடுபவர்களா?  இம்புட்டு பேச்சு பேசியிருப்பார்கள் ?????

எந்தவொரு மக்கள் விரோத சட்டங்கள் தோல்வி அடையாமல் இருப்பதற்கு  காரணம் எது?

கஷ்டப்படவும்,கட்டுப்பாட்டை உடைத்தெறியவும் உயிரை இழக்கவும்தயாராக இல்லாதவர்களால் எந்தக் காரியத்திலும் வெற்றி அடைய முடியாது என்று பெரியார் சொன்னதுதான் என் நிணைவுக்கு காரணமாக வருகிறது

முன்பு இண்டர் நெட்டால் உலகமே சுருங்கி விட்டதாக ஆராவாரம் செய்தது போல் மக்களின் மனமும் சுருங்கித்தான் போய்விட்டது.

இப்போது தனியார்மயமும,தாராளமயமும் சேர்ந்து மக்களின் பேராட்ட உணர்வையும் தனியார் மயமாக்கி விட்டது

என் சிறு வயதில் இல்லாமையால் இல்லாதிருந்த தேநீர் பழக்கத்தினனாலும் ,சைக்கிளிலே நகரை வலம்வந்த பயிற்சியினால் கேஸ்.குளிர் சாதனம்பய்னபாடு இல்லாததால் அரசாங்ககொளைளைக்காரியிமிருந்து ஓரள்வு தப்பிக்கமுடிந்தாலும் மின் கட்டணம் போன் கட்டணம் போன்றவற்றில் முழுமையாக என்னால் தப்பிக்க முடியவில்லை!!!!.

கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறேன், கட்டுப்பாட்டை நாளும் உடைத்துக் கொண்டுதான்  இருக்கிறேன். உயிரை விடவும் தயாராகத்தான் இருக்கிறேன். என்ன செய்வது….தனிமரம் தோப்பாகுமா………????????????

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

வலிப்போக்கன் சிறுகதைகள் Copyright © 2014 by வலிப்போக்கன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.

Share This Book