"
 
சொரக்கட்டை ஒன்று, பக்கத்து ஊரில் நடக்கும் திருவிழாவுக்கு செல்வதற்க்காக, தன் பொண்டாட்டி சொரக்கட்டையிடம்…….
 அடியே.  அடியே……..  நான் திருவிழாவுக்கு போயிட்டு வர்ரேன்டி.. எனக்கு சோறு கட்டி கொடுடீன்னு சொல்லிட்டு சோத்து பொட்டலத்துடன் திருவழாவுக்கு புறப்பட்டு சென்றது சொரக்கட்டை…….
சொரக்கட்டை போகும்போது. வழியில் சரியான மழை, மழையானமழை, பேஞ்சு ஊத்திபிடுச்சு.. ஊத்தி. மழையில் நணைந்த சொரக்கட்டைஒதுங்குவதற்கு வழியில்லாமல், மாட்டு வண்டி செல்லும் வழிதடத்துப்பாதையில் அதாவது மாட்டுவண்டிப்பாதையிலுள்ள மணலில் புதைந்துகொண்டு இளப்பாறியது.
ஒருவழியாக மழையும் நின்றுவிட்டது. மழை விட்டதும் அந்த வழியாகவந்த மாட்டு வண்டி ஒன்று வந்தது. மாடு
களின் கால்களுக்குள் சிக்கி மிதிபடாமல் தப்பித்த தவளை, மாட்டு வண்டியின் சக்கரத்துக்கு தப்பிக்க முடியாமல்
வண்டி சக்கரம் ஏறி குடல் தள்ளிப்போயி கிடந்தது
அந்த நேரம் உணவுக்காக அலைந்து திரிந்த கொக்கு ஒன்று குடல் தள்ளிப் போயி கிடந்த தவளையைக் கண்டு அதன் அருகில் வந்தது.
கொக்கு அருகில் வந்ததை, கண்ட குடல் தள்ளிப்போயி கிடந்த சொரக்கட்டைஅண்ணா, கொக்கு அண்ணா……………
மன்னர் திருமலை நாயக்கர் பொண்டாட்டி மேலே கையைப் போட்டேன்.மன்னர் அம்பால குத்தியதால்
குடல் தள்ளிப்போயி கிடக்கிறேன்.அண்ணா, என்னய ஒன்னும் செஞ்சிறாதிங்க அண்ணா……….. எனக்கு ஒரு உதவிமட்டும் செய்யுங்கண்ணாஎன்று கேட்டது சொரக்கட்டை,கொக்கும், மன்னர் பொண்டாட்டி மேல கையப்போட்ட சொரக்கட்டய  பெருமையாகவும் கொஞ்சம் பயந்தும் இருந்ததை காட்டிக்கொள்ளாமல்
என்ன, உதவிப் பன்ன்னுமுன்னு கேட்டுச்சு…………….
மாட்டுவண்டி சக்கரம் ஏறி குடல் தள்ளிப்போயி கிடப்பதை மறைச்சு..“ திருமலை நாயக்கர் பொண்டாட்டி மேல கையைப் போட்டதால் மன்னர் அம்பால குத்தி குடல் தள்ளிப்போயி கிடக்குறேன்னு, என் பொண்டாட்டிகிட்ட சொல்லி என்னய பார்க்க வரச் சொல்லுங்கண்ணா…. என்றது.
கொக்கும் பறந்து போயி சொரக்கட்டையின் பொண்டாட்டிகிட்டே, இப்படி சொல்லியது. “ ஓம் புருஷன்  திருமலை நாயக்கர் பொண்டாட்டி  மேல கையை போட்டதால…. மன்னர் அம்பால குத்த்துப்பட்டு குடல் தள்ளிப்போயி கிடக்காரும்மா”………..
ஒன்னையும் ஒங்க கூட்டத்தையும் பார்க்க வரச்சொன்னாரும்மா………… என்றது கொக்கு.
மாட்டு வண்டி சக்கரம் ஏறி குடல் தள்ளிப்போனதை மறைச்சு ரெம்ப பெருமையாக திருமலை நாயக்கர் பொண்டாட்டி மேல கையைப் போட்டதால குடல் தள்ளிப்போனதாக உதார்விட்ட சொரக்கட்டை போல்தானுங்க,…….. ஆதிக்கச்சாதி வெறிப்பிடித்தலையும் கூட்டம் நாங்க ஆண்ட பரம்பரை என்று உதார் விடுவதும், அடக்கப்பட்ட. ஒடுக்கப்பட்ட. திருகுமாவளவன் போன்ற சாதிக்காரர்கள். ஆதிக்கச்சாதிவெறிக் கூட்டத்த எதிர்க்க துப்பின்றி….. நாங்களும் ஆண்ட பரம்பரை. ஆளும் பரம்பரை என்று சொரக்கட்டை மாதிரி உதார் விடுவதும், தன்க்கு கீழ் உள்ள  சாதிக்காரர்களையும்.
ஒரே சாதியிலுள்ள வரியவர்களையும் அடக்கி ஒடுக்கி எல்லா சாதிக்காரர்களும் இந்த சொரக்கட்டை மாதிரிதான் உதார்
விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

வலிப்போக்கன் சிறுகதைகள் Copyright © 2014 by வலிப்போக்கன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.

Share This Book