ஊரை கொள்ளையடித்து உண்டு களிக்கும் ஒரு குண்டனும்,
ஊரிலுள்ள பொதுச் சொத்தை பட்டாபோட்டு விற்பனை செய்து செல்வத்தை பதுக்கி வைத்த ஒரு ஒல்லியனும்.
பக்கத்து ஊரில் நடக்கும் திருவிழாவில் கலந்து கொண்டார்கள்.
குண்டனும், ஒல்லியனும் பணக்கார பிரபலங்களாக இருந்ததால். விழா கொண்டாடும் முக்கியஸ்தர்கள் குண்டனையும் ஒல்லியனையும் ஒருவருக்கொருவரையும் அறிமுகம் செய்து வைத்தார்கள்.
அந்த அறிமுகத்தின்போது குண்டன்,ஒல்லியனை பார்த்து
” என்னப்பா, உங்க ஊருல அவ்வளவு பஞ்சமா……..? அநியாயத்துக்கு இப்படி ஒல்லியா இருக்கயே” என்று கிண்டலாக கேட்டான்.
குண்டனின் கிணடலால் கோபம் கொண்ட ஒல்லியன் பதிலுக்கு, ”அத ஏன்? கேக்ரப்பா, எங்க ஊரு பஞ்சத்துக்கே காரணம் நீதானப்பா, எல்லாத்தையும் நீயே சாப்பிட்டு இப்படி பெருத்து போயி இருக்கிறயேப்பா…? என்றான்.
கிண்டலுக்கு பதில் கிண்டல் கிடைத்தவுடன். சிரித்து மழுப்பிய குண்டன். ஊரு மக்களுக்கு நாம வேறு வேறானவர்கள் என்று காட்டிக் கொள்ளத்தானப்பா? நான் உன்ன கிண்டல் அடிச்சேன் என்றான்.
நானும்,அந்த அர்த்த்த்தில் தானப்பா பதிலுக்கு கிண்டல் அடிச்சேன் என்றான் ஒல்லியன்.
ஆக,ரெண்டு கொள்ளையர்களும், உள்ளுக்குள் கூட்டு சேர்ந்து ஊரை கொள்ளையடிப்பதுதான் பஞ்சத்துக்கு காரணம் என்று, . அந்த ஊரு மக்களுக்கு கடைசி வரைக்கும் தெரியவேயில்லை………..