"

கூடங்குளம் அருகிலுள்ள சிற்றுரில் ஒருவர் குளித்துவிட்டு போவோர் வருவோரை வாடச்பண்ணும் லத்தியுடன் நிறபவரை மிரட்சியுடன் கடந்து. நட்ட கல்லு ஒன்று தெய்வமாக காட்சியளிக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்.சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு நட்டகல்லாய் நிற்கும் சாமியிடம் மனமுருக வேண்டினார்.பக்தர் மிக சத்தமில்லாமல் வேண்டியதால் சில வேண்டுதல்கள் அவர்க்கு கேட்கவில்லை, சிலதுகள்மட்டும் கேட்டன.

சாமி.தப்பெ செய்யாத என்னை போலிசுகிட்ட இருந்து என்ன காப்பாத்து மூனு வேளை கஞ்சி இல்லாட்டியும் பரவாயில்லை. நோய் நொடி  இல்லாம காப்பாத்து என்று பக்தர் கேட்டதும்.சற்று எரிச்சல் அடைந்த சாமி…. பக்தரிடம் நேரிடையாக பேசினால் போலீசு போராட்டத்தை துாண்டியதாக கேஸ் போட்டு இருக்கும் நிலையை ஆட்டி  விடுவார்கள்என்று எண்ணி… மரப்பல்லி மூலமாக பேசினார் சாமி.

பக்தரும் மரப்பல்லி மூலமாக சாமி பேசியதைக் கேட்டுவிட்டு, மரப்பல்லிஜோசியம் பார்ப்பவரிடம் சென்று சாமி என்னா
சொல்லுச்சு என்று கேட்டார்.

பல்லி ஜோசியர் சாமி பேசியதை சொன்னார்.

அடச் சண்டாளா,அனுஉல வேணுன்றவன் ஒனக்கு முன்னாடி வேண்டிட்டு போறான். அனுஉல வேனான்னு சொல்லுறவனு என் ஆயுளை கெட்டிப்படுத்துங்கிறான். பிறந்த எல்லோரும் ஒருநாள் இறப்பது உறுதி. அதுபோல் அனுஉலயும் வெடிப்பது உறுதி. என்னுடைய ஆயுசே கெட்டியாக இல்லாதபோது. நான் எப்படிடா? உன்ஆயுச கெட்டிப்படுத்த முடியும்..அட,போடா போக்கத்தவனே………………

இதைக் கேட்டதும் பக்தனுக்கு கோபம் வந்துவிட்டது. சே….. போயும் போயும “பவர் இல்லாத சாமி ”யிடம் வேண்டினேன என்ன செருப்பால அடிக்கனுமுன்னு சொல்லிக்கொண்டு “பவர் உள்ள சாமி”யைத் தேடி புறப்பட்டான் .

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

வலிப்போக்கன் சிறுகதைகள் Copyright © 2014 by வலிப்போக்கன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.

Share This Book