"

புரட்டு புராணத்தில்…இலங்கையில் இராவணனை அழித்து சீதையை மீட்ட ராமன். அயோத்தி செல்வதற்குமுன் . இராவணனைக்கொன்ற தோஷத்தைநீக்கவேண்டும்வேண்டுமென்பதற்க்காகராமேஸ்வரத்துக்குவந்தான். அப்போது அவன் பொண்டாட்டிக்கும் அவனது அய்ந்தாவது தம்பியான குகன்மற்றும் ராமனுக்கு துனையாக வந்த குரங்குகளுக்கும் தண்ணீர் தாகம் எடுத்தது

அப்போது,அவர்களின் தாகத்தை தணிப்பதற்க்காக… வில்லன் ராமன் கடலை நோக்கி ஒரு அம்பை எய்தானாம். எய்தஅம்பு தங்க்கிமடம் அருகேகடலில் விழுந்து ஆர்டிசியன் ஊற்று போல தண்ணீரை பீய்ச்சியடித்தாம்.

கடலுக்குள் இருந்து வந்த அந்தத் தண்ணீர் உப்புக்கரிக்காமல் அமிர்தம்போல் இருந்ததாம். அதை அனைவரும் பருகி தாகத்தைதீர்த்துக்கொண்டார்களாம். ராமன் கடலுக்குள் அம்புவிட்ட இடம்.இப்போது வில்லுாண்டிதீர்த்தம் என்றுஅழைக்கப்படுகிறதாம். இன்னும் அந்த கடல் தண்ணீர் இனிக்குதுன்னு அங்குபோய்வந்தவர்கள் சொல்லுகிறார்களாம். கேப்பையில் நெய் வடிகிறது என்றுஎன்ற கதைதான்.

இருபத்தி ஒன்னாம் நுாற்றாண்டில் கடல் குடி நீராக்குவதற்கும்,  நிலத்தடிநீரை பெருக்குவதற்கும் தகடு தத்தம் வேலையே வேண்டாம் போலிருக்கிறது.பேசாம “ராமன் ரிட்டன்ஸ்” ல ,ராமன வரச்செய்து நல்ல தண்ணிர கொண்டு வந்தா.. ஒரே அம்புல தண்ணீ கஷ்டமெல்லாம் தீரும்ல்ல. கோக்கோ-கோலா,பெய்ஸி,அக்குவா.போன்ற தாகம் தீர்க்கும் கம்பெனிக்கெல்லாம் நல்லா கல்லா கட்டும்ல

கொக்கா மக்கா, போகிற போக்க பாத்தா…
செவ்வாய் கிரகத்துல தண்ணீர கண்டுபிடுச்சாலும் வில்லன் விட்ட அம்புலதான் தண்ணீ வந்துச்சுன்னு பிலிம் காட்டுவானுக……..

நாமதாப்பா, கஷ்டப்பட்டு மண்டையில இருக்கிறல மூளையில் இவிங்க காட்டுறல பிலிம்ல… புசணம்
பிடிக்காம பாதுகாக்கனும்

குறிப்பு், வில்லை எடுத்தவன் வில்லன்னு முன்னால் நடிகர் சுருளி ராஜன்சொல்லியிருக்காரு… அதான் நானும்
வில்லன்னு எழுதிட்டேன். ராமனுடைய அடிமைகள்……சே…..சே……. ராமனுடைய  ரசிக கர்கள் தெரிந்து கொள்க!!!!!!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

வலிப்போக்கன் சிறுகதைகள் Copyright © 2014 by வலிப்போக்கன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.

Share This Book