8
தேங்கி நிற்கும் நாட்கள்
உன்னை எண்ணியே எழுதும் எழுத்துக்கள் கவிதைகளாய் ஓடிவிட …
உன்னை நினைத்தே வாழும் நாட்கள் கவலைகளாய் தேங்கி நிற்கிறதே ….
காத்திருப்பேன்!
சொல்லிய காதல் சில நேரம் வருங்காலமாக மாறலாம் …
சொல்லிய காதல் சில நேரம் இறந்தகாலமாக மாறலாம் ….
சொல்லாத காதல் என்றும் நிகழ்காலமே …
காத்திருக்கும் எந்த காலத்திலும் !!!
அவளுக்கு பிடித்ததும் பிடிக்காததும்
சூரியன் பிடிக்குமாம் ஒளி பிடிக்காதாம் !
மயில் பிடிக்குமாம் தோகையை பிடிக்காதாம் !
விண்மீன்கள் பிடிக்குமாம் மின்னுவது பிடிக்காதாம் !
மலர்கள் பிடிக்குமாம் தேன் பிடிக்காதாம் !
இயற்கை பிடிக்குமாம் வியக்க பிடிக்காதாம் !
மழை பிடிக்குமாம் மேகம் பிடிக்காதாம் !
வண்ணங்கள் பிடிக்குமாம் வானவில் பிடிக்காதாம் !
கவிதை பிடிக்குமாம் ரசிக்க பிடிக்காதாம் !
என் பேச்சுக்கள் பிடிக்குமாம் கேட்க பிடிக்காதாம் !
என் பார்வை பிடிக்குமாம் பார்க்க பிடிக்காதாம் !
என்னை பிடிக்குமாம் என் காதலை பிடிக்காதாம் !