1
இறைவன்
எண்ணிக்கைக்கு முடிவுண்டு ..
எண்களுக்கு முடிவில்லை …
இதை உணர்ந்தவர்களுக்கு புரிவதுண்டு …
எண்ணுபவர்களுக்கு புரிவதில்லை !!
என் அம்மாவுக்காக
ஒரு உடல் இரு உயிர் அன்று …
இரு உடல் ஒரு உயிர் இன்று …
உன் வயிற்றில் பிறக்கத்தான் பத்து மாதம்
கருவறையில் தவம் கிடந்தேனோ என் அம்மா !!!
நானும் காதலித்தேன்
காதல் என்ற வார்த்தையை அவள் காதலிக்கவில்லை …
எனவே
காதலிக்கவில்லை என்ற வார்த்தையை நான் காதலித்தேன் !!!
தீண்டாமை
என்னை தொட்டு பேசி விடு ….
தீண்டாமை பாவச் செயலாம் !!