"

10

இயற்கை

 

நீ கூந்தலில் சூடிய பூவையும் …

மலையில் விழும் நீர்வீழ்ச்சியையும் …

எனக்கென்னவோ இரண்டாக பார்க்கத் தெரியவில்லை!!!


 

 

மொத்தத்தின் மீதம்

 

மௌனத்தின் மீத வார்த்தை உந்தன் மொழியா ?

கவிதையின் மொத்த சுவை உந்தன் சிரிப்பா ?

கதிரவனின் மீத வெயில் உந்தன் நிறமா ?

இரவின் மொத்த இருளும் உந்தன் களைப்பா ?


 

 

விழியஞ்சல்

தினமும் சோதனை செய்யமாட்டாயா ?

கோடி கோடியாய் கொட்டிக்கிடக்கும்

என் விழியஞ்சல் உன் கண்ணில் !!!


 

 

எது அழகு ?

தொலைவில் இருக்கும் நிலவழகா ?

அருகில் இருக்கும் நீயழகா ?

பட்டிமன்றம் நடத்தும் உன்னைப் பார்க்கும் ஒவ்வொரு பார்வையாளனின் விழிகள் !!!