"

11

உண்மை

 

உண்மையில் நான் ஹரிச்சந்திரன் இல்லை !

உன் அழகைப் பற்றி வர்ணிக்கும் போது மட்டும் தவிர !!


 

 

சுத்தம்

 

கங்கை அசுத்தமாகிவிட்டதாம் !

ஒருமுறை நீ அதில் குளித்துவிட்டு போ …. சுத்தமாகிவிடும் !!


 

 

கவிதை நோட்டு

 

உன் பெயரை என் நோட்டில் எழுதி சென்றாய் !

அன்று முதல் இன்று வரை அதுவே என் முதல் கவிதை நோட்டு !!


 

 

பெயர்

 

நீயோ உன் பெயர் வேறேதோ சொல்கின்றாய் !

எல்லோரும் உயிர் பறிப்பதெல்லாம் எமன் என்கிறார்கள் !!


 

 

காலம்

 

காலம் பொன் போன்றதாம் !

எனவே அதை உனக்கு அலங்கரித்தே ரசிக்கிறேன் !!