12
உன்னைத் தேடி
என் மூச்சு வேண்டுமானாலும் ஆக்ஸிஜனை தேடலாம் !
ஆனால் என் விழி என்னவோ உன்னைத் தேடியே !!
மை
என் ஆண்மை அவளின் பெண்மை சேர்ந்தது போல் !!
என் பேனா மை அவளின் கண்மை சேர்ந்ததால் இதோ “கவிக்குழந்தை” !!!
கருந்துளை
அதென்ன கண்களில் கருவிழியா ? கருந்துளையா ?
யோசிக்க தொடங்கியவர்கள் யாரும் தப்பியதில்லை …
அதில் நானும் ஒருவன் ….
ஏமாறுகிறேன்
ஏமாறுகிறேன் எனத் தெரிந்தே ஏமாறுகிறேன் …
நிலவு தரையிறங்கும் என்று உணவு உண்ணும் பிள்ளைப் போல !!!
தனி உலகம்
தினமும் கனவுலகில் உன்னை பதிவிறக்கம் செய்து …
இவ்வுலகில் தரையிறக்குவேன் !!
இங்கு நீயும் நானும் மெய்நிகரின்(virtuality) மெய் !!!