13
என் எழுத்து
உன் பெயரை எழுதி தவழ்ந்துக் கொண்டிருந்த என் எழுத்துக்கள் ..
கவிதைகளாய் எழுந்து ஓடுகின்றது உன் கன்னக்குழியை நோக்கி !!
விளையாட்டு
என் விழிகளில் பயணித்து இமை எனும் கடற்கரையில் நின்று
கண்ணீரில் கால் நனைத்து விளையாடுகிறாய் …
பொழுதுபோகவில்லையா ??
உன் தாகம்
என் கண்ணீர் உன் தாகத்தை தீர்க்குமெனில்
உன் தாகம் தீரும் வரை நான் அழுவேன் !!
கவிதை ரகசியம்
உனக்கே தெரியாமல் கவிதை எடுக்கிறேன்
கவிதை களஞ்சியம் உன் கண்கள் !!
உனக்கே தெரியாமல் கவிதையை களவாடுகிறேன்
கவிதைகளின் ரகசிய அறை உன் நினைவுகள் !!