"

14

எங்கும் நீ

 

என்னையே பார்த்துக்கொண்டே இருக்கிறான்  என்று சொல்கிறாயே !

எங்கும் நீயாகவே தெரிகிறாய் இதை நான் எங்கு போய் சொல்வது ??


 

 

 நீ… நான்

 

விண்ணாக நான் மழையாக நீ  !

கோபுரம் நான் சிலையாய் நீ !

கரும்பாக நான் தேனாக நீ !

கடலாக நான் அலைகளாய் நீ !

பள்ளமாக நான் மேடாக நீ !

உடலாக நான் உயிராக நீ !

நீயின்றி நானில்லை … நான் இருந்தாலும் மதிப்பில்லை !!!


 

 

காதல் கணிதம்

 

உன் விழி வட்ட பாதையில் என் காலத்தை கழித்து கொண்டிருக்க..

நீ என் காலத்தை பெருக்கிக்கொண்டே போனால் என்ன அர்த்தம் ??


 

 

 முடியாதவை

 

உன் அழகு …

நீரின் சுவை …

இவ்வுலகில் யாராலும் விவரிக்க முடியாதவை !!