16
காதல் குழந்தை
பிரசவித்த குழந்தை அழுவதால் உணர்த்துகிறது
“நான் உயிரோடு இருக்கிறேன்” என்று !
பிரசவித்த காதல் இப்போது அழுவதால் உணர்கிறேன்
“என் காதல் உயிரோடு இருக்கிறது” என்று !
எனக்கு பிடித்தது
பித்து பிடித்து போனதால் உன் பின்னே அலைந்த காலம் உண்டு !
பித்து பிடித்துப்போனதால் பிதற்றி தள்ளுகிறேன் இன்று !
நினைவிருக்கிறது …
என் மனைவி நீ என பதிவு செய்த நாள் !
என் உயிரின் மறுபாதி இவ்வுலகை கண்ட நாள் !
குழம்பாதே.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்புக் காதலி !!!
நாட்டுக்காக
மன்னுக்கு இறையாகாதே இறந்த பின் !
மன்னுக்காக இறையாகு இறக்கும் முன் !!!