17
என் பெயர் …
நான் மொழி வெறியன் அல்ல …
மொழியின் சுவைக்கு அடிமையானவன் !
நான் மதத்திற்கு எதிரானவன் அல்ல…
சமரசத்தை என்றும் விரும்புபவன் !
நான் பிற கலாச்சாரத்திற்கு ஒத்துப்போகாதவன் அல்ல …
இந்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டவன் !
நான் செயற்கையை வரவேற்காதவன் அல்ல …
இயற்கையை அணு அணுவாய் ரசிப்பவன் !
நான் வெற்றிக்கு உழைக்காதவன் அல்ல …
சிறு உணர்ச்சிக்கும் வீழ்பவன் !
கடவுளை அடுத்து நான் மட்டுமே
“வேறு உலகில் அதிக நேரம் வாழ்பவன் ”
கற்பனைக்கு அப்பாற்பட்டவன் …
என் பெயர் கவிஞன் !!
-தொடரும்