"

2

காதல் தவறு !
காதல் செய்வது தவறு என்ற பெண்ணே ..
உன் தவறை எப்போது திருத்திக்கொள்ளப்போகிறாய் !!!

 


 

 

இசை
வெற்றிடத்தில் இசை கேட்கிறது !
என் மனதில் நீ பேசிய பேச்சுக்கள் !!

 


 

 

நிறம்
புல்வெளியில் தூங்கினாலும் உன் மடியில் தூங்கியதாக உணர்கிறேன் …
பச்சை உனக்கு பிடிக்கும் என்பதால் !!


 

 

தேடாதே
உன் கண்ணில் மை தீட்டி வீணாக என்னைத் தேடாதே….

ஏனெனில் அங்கே தான் நான் தொலைந்தேன்!!!


 

 

ஊனம்
நீ பேசுகையில் நான் ஊமை தான்…
நீ பேசாமல் இருக்கையில் நான் காது கேளாதவனும் ஆகிறேன்!!


 

 

ஏன்னென்றால்
என் மேல் மட்டும் ஏன் இந்த காதல் என்கிறாய்!!
நீ என்ன காகித பூவா உன் மேல் பனித்துளி படராமல் இருக்க??