4
ஆன்மீகம்
சிந்தித்தால் வினா!
எழுதினால் ஆச்சர்யம்!!
மொத்தத்தி்ல் அவளும் ஒரு ஆன்மீகம்!!
காட்டிக் கொடுத்தது
காற்றின் உருவம் கேட்டேன் உன்னைக் காட்டியது !
நீரின் நிறம் கேட்டேன் உன்னைக் காட்டியது !!
உயிர் சென்று சேரும் இடம் கேட்டேன் உன்னைக் காட்டியது !!!
என்னில் கலந்தவள்
நீ என் சிரிப்பில் கலந்ததால் சிரிக்கிறேன் ..
நீ என் அழுகையில் கலந்ததால் அழுகிறேன் …
நீ என் உயிரிலும் கலந்ததால் நான் இன்னும் உயிர் வாழ்கிறேன் என் உயிரே….
எல்லாம் நீ
என் உயிர் உள்ள வரை நினைத்திருந்தேன்
என் உயிர் நீ தான் என்று…
என் மரணத்தின் போது தான் தெரிந்தது
என் மரணமும் நீ தான் என்று ….