"

5

பெண்மை

 

உன் பார்வையில் கண்டுகொண்டேன்

என்னையல்ல பொறுமையை !

உன் முகத்தில் கண்டுகொண்டேன்

அழகையல்ல தன்னம்பிக்கையை !

உன் உதட்டில் கண்டுகொண்டேன்

சிரிப்பையல்ல சிந்தனையை !

உன் நடையில் கண்டுகொண்டேன்

நாணத்தையல்ல வீரத்தை !

மொத்தத்தில் உன்னிடம் கண்டுகொண்டேன்

பெண்மையையல்ல வாழ்க்கையை !!!


 

 

வருத்தம்

 

என்நிழலும்உன்னைவிட்டுபிரிய

வருந்துமே !

உனக்கு வருத்தமில்லையா??


 

 

மறந்திடுமா ?

 

கண்மூடினால் நடப்பது நின்றிடுமா?

என் கண்ணுக்கு எட்டாத இடம் சென்றால் உன் நினைவு மறந்திடுமா ??


 

 

அவளின்பொட்டு

 

இரண்டு வானவில்லுக்கு நடுவில் ஒளிராத நிலா !!!