"

6

அவளின் பெயர்

 

மூன்றெழுத்தில் கவிதை அம்மா என்றால்

மூன்றெழுத்தில் மூன்று கோடி கவிதை அவளின் பெயர் !!


 

 

நான் கொண்டு வரவா ??

 

மின்னலின் கிளையினில் பூக்கும் பூக்களை கொண்டு வரவா ??

என் காதலை சொல்லும் போது ???


 

 

ஆனால்

 

உன் அழகால் நான் உன்னை காதல் செய்ய நினைத்தேன் ..

ஆனால் ..

உன் அன்பால் என்னை உன் அடிமையாக்கிவிட்டாய் …


 

 

நினைவுப்பரிசு

 

உனக்காக நான் வாங்கிய என் நினைவுப்பரிசு ….

நீ ஏற்க மறுத்ததால் அது உன் நினைவுப்பரிசு ஆனதோ !!


 

 

ஓவிய மேகம்

 

வானமும் உன் முகத்தை வரைந்து பார்க்க ஆசைப்படுகிறதோ ??

மேகங்களாய் அதன் தோற்றத்தை மாற்றி …