7
கிரகணம்
உன் கண்கள் என்ன சூரிய கிரகணமோ ?
உன் கண்கள் பார்த்த பின்பு தான் பார்வைக்கு பதிலாக என் மனதை இழந்தேனோ ???
உன்னை தேடும் பறவை
அலைந்து திரிந்து பறக்கும் பறவைகளுக்கு என்றும் வியர்ப்பதில்லை ….
உன்னைக் காணவே வெளியில் அலையும் எனக்கு என்றும் சோர்வு வருவதில்லை !
ஐம்பூதம்
தூக்கி எறிந்தேன் என் காதலை
தூக்கி எறிந்தாலும் பூமியை விட்டு மறையவில்லை !
எரித்துவிட்டேன் என் காதலை
எரித்தாலும் அதில் உள்ள அன்பு பிரியவில்லை !
தலை மூழ்கிவிட்டேன் என் காதலை
தலை மூழ்கினாலும் அவளின் நினைவு கரையவில்லை !
தென்றலோடு பறக்கவிட்டேன் என் காதலை
காற்றோடு விட்டாலும் அவளின் வார்த்தை என்னை விட்டு நகரவில்லை !
புதைத்துவிட்டேன் என் காதலை
புதைத்தாலும் காதலின் பொக்கிஷம் மக்கவில்லை !