1

அடிப்படை நியதிகளை, நெறிகளை கோட்பாடுகளை உணர்ந்து கொள்வதும் எவற்றை முதலில் தொடங்க வேண்டும் என்று புரிந்து கொள்வதும், மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஒரு செயலை நடுவிலிருந்து தொடங்குவதும், கடைசியில் இருந்து தொடங்குவதும் அரைகுறையாக செயலாகவே முடியும். நடுவர்களின் கொடி அசைவிற்கு முன்பே ஓட்டத்தை தொடங்கியவனுக்கு ஓட்டப்பந்தயத்தில் பரிசு வழங்கப்பட முடியாது. அவன் தன் கால்களை கோட்டிற்கு உள்பக்கமாக வைத்துக்கொண்டு கொடி அசைத்த கனமே தொடங்கி வெற்றி பெற வேண்டும். மாணவனும், மிக உயர்ந்து கணிதவியலிலோ இலக்கியத்திலோ தொடங்குவது இல்லை. எண்ணிலும் எழுத்திலும் தான் தொடங்குகிறான். அதே போன்று வாழ்கையிலும் அடி மட்டத்திலிருந்து தொழில் தொடங்கியவர்களே பெரும் தொழில் அதிபர்களாக மாறி உள்ளனர்.

ஆன்மீகத்திலும் ஞானத்திலும் சிகரத்தை அடைந்தவர்கள் யார் என்று கவனித்தால் அவர்கள் தங்களை சேவைக்கு உட்படுத்தி கொண்டு எளிய பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபத்திக்கொண்டு மனித குலத்திற்கு ஏற்படும் அனுபவங்களை பார்த்து பின்வாங்காமல் கற்று கொள்ள வேண்டிய பாடங்களை கவனித்து கற்று கொண்டவர்கள் தாம்.

எனவே, இன்பமான மகிழ்ச்சியான, நிம்மதியான, வெற்றிகரமான இனிய வாழ்விற்கு அடிபடையானது சரியான நெறிகளே, நியதிகளே, கோட்பாடுகளே. சரியான நெறிகள் இல்லாமல் தொடங்குவது தவறான பாதைக்கு, பழக்கங்களுக்கு இட்டு சென்று குழப்பமான நிம்மதியற்ற வாழ்வில் முடியும். விஞ்ஞானத்தின், வணிகத்தின் கோடிகோடி வகையிலான செயல்பாட்டிற்கு, ஆராய்ச்சிகளுக்கு, கணிப்புகளுக்கு பயன்படுவது பத்து எண்களே. அறிவுக் கருவூலமான ஆங்கிலத்தின் இலட்சக்கணக்கான புத்தகங்களுக்கு இருபத்தி ஆறு எழுத்துக்களே அடிப்படை. மிகவும் பெரிய விண்வெளி ஆய்வாளனும், பத்து எண்களை புறந்தள்ள முடியாது. அறிவுக் கடலாக விளங்குபவனும் அவன் அறிந்த மொழியின் எழுத்துக்களை கொண்டே நூல்களை படைக்க முடியும். இவ்வாறு அடிப்படைகள் என்பது எல்லா துறைகளிலும் சிலவே, எளிதானவைகளே.

எனினும் அவை இன்றி பேரறிவும் பெருஞ்சாதனையும் இல்லை. வாழ்கையின், உண்மையான வாழ்வின், அடிப்படை நெறிகளும் எளிய சில நெறிகளே. அவற்றை முழுமையாக கற்று உணர்ந்து தம் வாழ்வில் ஒன்றறக் கலந்து வாழ்வது, குழப்பங்கள் அற்ற தெளிவான மனதை – பாதுகாப்பான பலம் வாய்ந்த அடித்தளத்தில் அசைக்க முடியாத குண நலன்களை உருவாக்கி வளர்க்கநிலையான நிரந்தரமான வெற்றிக்கு அழைத்து செல்லும் அந்த அடிப்படை நெறிகளை முழுமையாக பற்றி வாழ்வின் எல்லா அம்சங்களிலும் சிக்கலான சூழ்நிலைகளிலும் கை விடாது இருப்பவன் வாழ்க்கையை புரிந்தவனாகிறான்.

வாழ்வின் அடிப்படை அறநெறிகள் சீரிய ஒழுக்கமே. அவற்றை பட்டியலிடுவது எளிதானது, அவை வெறும் வார்த்தைகளாக எல்லோரது உதடுகளாலும் உச்சரிக்கப்படுகிறது. ஆனால் தங்கு தடையற்ற செயல்களாக எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காமல் சிலராலலேயே கடைபிடிக்கப்படுகிறது. இந்த சிறிய உரையில் ஐந்து அடிப்படை அறநெறிகளை குறித்து விளக்கப்படுகறது. இவ்வைந்து நெறிகளே வாழ்வின் ஆணிவேராகும். அன்றாட வாழ்வின் எல்லா நிலைகளிலும் நெருங்கிவர கூடியவைகள் ஆகும். காரணம் அவை ஒரு கலைஞனையோ வணிகர்களையோ குடும்ப தலைவர்களையோ சாதாரண குடிமகனையோ எல்லோராலும் எப்போதும் தொட்டு விடக்கூடிய தூரத்திலேயே இருக்கின்றன, அவற்றை விட்டு எறிந்து வாழ்வதற்கு பெரும் விலை கொடுக்க வேண்டியதாய் இருக்கும். அவற்றை இறுகப்பற்றி பயன்படுத்த விழைபவன் வாழ்வின் பல வித இன்னல்களையும் தோல்விகளையும் கடந்துவிடுகிறான், என்றும் வற்றாது சுரக்கும், வலிமையான இனிமையான எண்ணங்களின் ஜீவ ஊற்றில் பருகி வெற்றி பெறுகிறான். அந்த ஐந்து நெறிகளில் முதன்மையானது:

கடமை : மிக மிக உச்சரிக்கப்படுகிற வார்த்தை, ஆனால் அதன் உட்பொருளை உணர்ந்து செயலாற்றுபவனுக்கு அரிய பொக்கிஷங்களை வழங்க அது காத்து இருக்கின்றது. கடமை என்பதன் அடிப்படை தன்னுடைய வேலையில் எவ்வளவு ஈடுபட வேண்டுமோ அவ்வளவு ஈடுபடுவதும் அடுத்தவர்களது வேலையில் தேவையின்றி ஈடுபடுவதை தவிர்ப்பதும் ஆகும். மற்றவர்களது வேலையில் குற்றங்குறைகளை கண்டுபிடித்து திருத்திக்கொண்டே இருப்பவன் தன்னுடைய வேலையை நிறைவேற்ற முடியாமல் இருந்து விடுகிறான். கடமை என்றால் கைக்கு எட்டிய பணியில் சிதறாத முழு கவனத்தை செலுத்துவதாகும். குவிந்த மன நிலையில் செயல்படுவது ஆகும். திறமையாக, துல்லியமாக, முழுமையாக தேவையானதை செய்வதாகும். ஒவ்வொரு மனிதனது கடமையும் மற்ற மனிதனது கடமையில் இருந்து வேறுபடுகின்றன. ஒருவன் தன் கடமையை முழுமையாக அறிந்தவனாக இருக்க வேண்டும், மற்றவனது கடமையை அறியும் முன், மற்றவன் தன் கடமையை குறித்து அறிந்ததை விட தான் தன் கடமையை அதிகம் அறிந்தவனாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரது கடமையும் வேறுபடுகின்றன. அவற்றின் அடிப்படை ஒன்று தான். கடமையின் கட்டளைகளை நிறை வேற்ற காத்திருப்பவர்கள் யார்?

நேர்மை : நேர்மைதான் அடுத்த அறநெறியாகும். நேர்மை என்றால் அடுத்தவனை ஏமாற்றாமல் இருப்பது ஆகும். அல்லது அவனுக்கு வழங்கிய ஒன்றின் ஈடானதை விட அதிகமாக விலை பேசாமலிருப்பதாகும். வார்த்தையாலோ, பார்வையாலோ, செய்கையாலோ அடுத்தவர்களை ஏமாற்றாமல் இருப்பதாகும். பொய்யை கைவிடுவதாகும். சூழ்ச்சிகளை, தந்திரங்களை அறவே நீக்குவதாகும். வாய்மையை பின்பற்றுவதாகும். சொல் ஒன்று செயல் வேறொன்று என்று இல்லாமல் இருப்பதாகும். வீண் புகழ்ச்சிகளை, அலங்கார வார்த்தைகளை தவிர்ப்பதாகும். ஒருவனது நேர்மை மற்றவர்களுக்கு அவன் மேல் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. அந்த நம்பிக்கை அவனது தொழில் சிறக்க, மகிழ்ச்சியான வெற்றியை அறுவடை செய்ய உதவுகின்றது. நேர்மையின் உச்சத்தை எட்டியவர்கள் யார்?

விரயமின்மை /வீணடிக்காதிருக்கும் தன்மையே மூன்றாவது அறநெறியாகும். தன்னுடைய பொருளாதாரத்தில் விரயமின்மையை கடைபிடிப்பது என்பது இந்த நெறியின் ஒரு சிறு பகுதியே. எனினும் அது உண்மையான வளம் நிறைந்த வாழ்விற்கு அழைத்து செல்லும் ஒரு நுழைவாயில் ஆகும். இதன் முழு பொருள் உடலின், மனதின் ஆற்றலை, சக்தியை உள்துடிப்பை வீணடிக்காது இருப்பதாகும்.

கொண்டாட்டங்களில் திளைத்த வண்ணம் இருப்பதையும், அளவுக்கு மீறி புலனின்ப செயல்களில் ஈடுபடுவதையும் நீக்கி உடலின், மனதின் ஆற்றலை, சக்தியை சேகரிப்பதாகும். இவ்விரயமின்மையை கடைபிடிப்பவன் வலிமை, மனஉறுதி, விழிப்புணர்வு சாதிக்கும் ஆற்றல் பெற்றவனாகிறான். இந்த அறநெறியானது தன்னை முழுதும் கற்று உணர்ந்தவர்களுக்கு மாபெரும் சக்தியை பரிசளிக்க காத்து இருக்கின்றனது. வீணடிக்காத்திருக்கும் தன்மையை கற்று உணர்ந்தவர்கள் யார்?

வீணடிக்காதிருக்கும் தன்மையை தொடர்வது தாராளமாகும். தாராளம் என்பது வீண் விரயத்திற்கு எதிரானது அல்ல, வீண் விரயத்தை தவிர்ப்பவனால் மட்டுமே தாராளமாக இருப்பதற்கு முடியும். வீணடிக்கும் தன்மை கொண்டவன் பணரீதியாகவோ, உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ, தன்னுடைய சொந்த நலத்தில் எல்லாவற்றையும் தொலைத்து விடுகிறான். அவனிடம் மற்றவர்களுக்கு வழங்குவதற்கு எதுவுமில்லை.செல்வத்தை, பணத்தை வாரி வழங்குவது தாராளத்தின் சிறு பகுதியே, நல்லெண்ணங்களை, நற்செயல்களை, அன்பை இரக்கத்தை தாராளமாக வழங்குவது, நிந்திப்பவர்களையும் அரவனைக்கும் தன்மை கொண்டிருப்பது போன்றவை மற்ற பகுதிகள் ஆகும். இந்த தாராள மனமானது தனியே தவிப்பதை தகர்க்கின்றது, நம்பிக்கைக்குரிய தோழர்களை, உயிர்நண்பர்களை வரவழைத்து தருகின்றது.

தன்னடக்கம் அல்லது சுயகட்டுப்பாடே இந்த முக்கிய ஐந்து அற நெறிகளில் இறுதியானதாகும். ஆனால் மிக முக்கியமானதாகும். இதை மறந்து வாழ்வதே பெருந்துக்கங்களுக்கு, எண்ணிலடங்கா தோல்விகளுக்கு, பல நூறு வகையான மன உறுத்தல்களுக்கு, உடல் சோர்விற்கு, கடன் சுமைகளுக்கு ஆளாக்குவதற்கு காரணமாகும். சிறிய விஷயத்திற்க்காக தன் நிலை தடுமாறி வாடிக்கையாளருடன் கோபம் கொள்ளும் வியாபாரியை கவனியுங்கள், அதே மனபாங்கினை தொடர்ந்து கடைபிடித்திருப்பவர்களை தோல்வி நெருங்குவதையும் காண்பீர்கள். இந்த சுயக்கட்டுப்பாட்டின் ஆரம்ப நிலையை மட்டுமே எல்லா மனிதர்களும் கடைபிடித்தால் கூட, கோபமும் சினமும் அதன் கூடவே வரும் எல்லாவற்றையும் விழுங்கும் நெருப்பும் அனைந்து போகும். இந்த சுயகட்டுப்பாட்டில் பொறுமை,தூய்மை, அகங்காரமற்ற மென்மை, அன்பு, அசையாத உறுதி முதலியவை முக்கிய கூறுகளாகும். இந்த தன்னடக்கத்தை சுயகட்டுப்பாட்டை மனிதர்கள் மெதுவாக முழுமையாக கைக்கொள்ளும் வரை அவர்களது வெற்றி உறுதி செய்யப்படவில்லை. அவர்கள் பண்படுத்தப்பட்ட உயர்ந்த மனிதர்களாக விளங்குவதற்கு வாய்ப்பை பெற்றிருக்கவில்லை. தன்னை அடக்கும் ஆற்றல் பெற்றிருப்பவன் யார்? அவன் எங்கிருந்தாலும் அவன் ஒரு சிறந்த வழிக்காட்டியே.

இந்த ஐந்து அறநெறிகளும் கொண்டு ஓழுக வேண்டிய ஐந்து நடைமுறைகளாகும். சாதனைக்கு அழைத்து செல்லும் ஐந்து வழிகளாகும். அறிவின், ஞானத்தின் ஐந்து ஊற்றுகளாகும்.

முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.———————–616

எனவே இந்த ஐந்து அறநெறிகளை உதட்டில் கொள்ளாமல் உள்ளத்தில் கொண்டு முயல வேண்டும். அந்நெறிகளை முழுமையாக அறியவும், வேறு எவற்றாலும் வழங்கப்பட முடியாத விலைமதிக்க முடியாத பரிசினை விழைபவன், அந்நெறிகளை செயல்படுத்த வேண்டும்.