1

யுனிக்ஸ் (Unix) போன்றதொரு இயங்கு தளத்தினை (Operating System) உருவாக்கிட 1984 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட திட்டம் குனு (GNU). இதனைத் துவக்கியவர் ரிச்சர்டு ஸ்டால்மேன். இந்த இயங்கு தளம் ஒரு கட்டற்ற மென்பொருளாகும் (Free Software). இதற்கு குனு அமைப்பென்று பெயர்.

குனுவின் கரு (Kernel) பூர்த்தியடையாததால் லினக்ஸ் கருவுடன் பயன்படுத்தப்படுகிறது. இன்று பல கோடி பேர் பயன்படுத்தும் இந்த குனு மற்றும் லினக்ஸின் கூட்டமைப்பிற்கு குனு / லினக்ஸ் என்று பெயர்.

“குனு யுனிக்ஸ் அல்ல” (Gnu’s Not Unix) என்பதன் பெயர்ச் சுருக்கமே குனு ஆகும். கு – நூ என இது உச்சரிக்கப்படுகிறது. விலங்’கு’ எனும் போது எழும் குற்றியலுகரத்தைப் போல் இதிலுள்ள ‘கு’ ஒலிக்கும்.

License

Icon for the Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License

கட்டற்ற மென்பொருள் by ம. ஸ்ரீ. ராமதாஸ் is licensed under a Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book