3
அவை: 1. மனம் :- மனதாழம், மனத்தின் வீச்சு, மனதின் சக்தி
2. மூளை:- ஒரு மூளையில் பதிவாகிய விஷயங்களை மற்றொறு மூளையில் பதிவு செய்ய ஒரு இயந்திரம்!
3.மூளையும் , மனதும் ,ஒன்று தானா?இல்லை வேறு வேறா?!
4.மனம், இந்தப் ப்ரபஞ்சத்துக்குள், அடங்குகிறதா அல்லது இந்த ப்ரபஞ்சம், மனதுக்குள், அடங்குகிறதா?!
இவை நான்றையும் கண்டு பிடித்துவிட்டால், ஓரளவு படைப்பின் மூலத்தின் ஒரு பகுதியையாவது, கண்டுபிடித்ததாக மனிதன் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்,!
எதைப்பற்றி ஆராய்ச்சி செய்யவேண்டுமென்றாலும்,அதற்கு ஒரு ஆய்வுக்களம் ,அல்லது ஒரு விஞ்ஞான ஆராய்ச்சிக்கூடம், வேண்டும்! சரி ,மனதைப் பற்றி ஆய்வு செய்ய எங்கு போவது?
எங்கும் போக வேண்டாம் ,நம் மனமே நம் ஆராய்ச்சிக்களம் .
விந்தை தான் ,ஒரு விஷயத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அந்த விஷயமே, ஒரு ஆராய்ச்சிக் களமாவது,விந்தையிலும் விந்தைதான்.
மனதைப் பற்றி ஆய்வு செய்ய விஞ்ஞானக் கூடம் வேண்டாம், மெய்ஞானக்கூடம் தான் வேண்டும்! ஏனென்றால், மெய்யிலேதானே மனம் இருக்கிறது, ஆமாம், மெய் எனும் உடம்பு ,என்று சித்தர்கள் சொன்னது போல், இந்த மனம் உடம்பிலேதான் இருக்கிறதா?