9
அடேயப்பா எத்தனை மனது உள்ளே இருக்கிறது? இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும்!! ஒவ்வொரு மனிதன் உள்ளேயும் ஒரு சக்தி இருக்கிறது, தவறான காரியம் செய்யும்போது, உள்மனது வேண்டாம் என்கிறது அதை கண்டுகொள்ளாமல் காரியம் செய்யும்போது ,மனசாட்சி இல்லாமல் காரியம் செய்தோம் என்று சொல்கிறார்கள்,
இந்த உள்மனது சொல்வதைக் கேட்க ஆரம்பித்தாலே போதும் காவல் நிலையங்களும் வழக்குரைக்கும் மன்றங்களோ தேவைப்படாது, உள் மனதை அலட்சியப்படுத்தி விட்டு, செயலாற்றுபவர், திருடன் ,காமுகன் ,குடிகாரன், கொலைகாரன், என்ற பட்டங்களை சுமக்க வேண்டியுள்ளது.
ஆகவே, எண்ணங்களை வைத்து யாரும் தண்டனை வழங்குவதில்லை, செயலை வைத்துதான், தீர்ப்பளிக்கிறார்கள், தண்டனை வழங்குகிறார்கள், இந்த மனது இருக்கிறதே, அதன் எண்ணங்களை, துல்லியமாய் அளக்க ,இன்னும் கருவி கண்டு பிடிக்கவில்லை,
ஆனால் நீதி மன்றங்களில், தண்டனை கிடைக்கிறதோ, இல்லையோ, நம் மனம் மட்டும் நாம் செய்யும் எதையுமே மறப்பதில்லை, பொல்லாதது இந்த மனது, அவ்வப்போது எச்சரிக்கிறது, உறுத்துகிறது ,நம் நிம்மதியைக் கெடுக்கிறது, ஆகவே நீதி மன்றம் வெளியே இல்லை, நம் உள்ளேயே இருக்கிறது.!!!
ஆகவே மனம்,நம்மை ஆட்டிவைக்கும் கருவி, எச்சரிக்கும் கருவி, ஆக மனம் என்பது ,ஒரு கருவி , கருவி இருக்கிறது , ஆனால் அது எங்கிருக்கிறது ? அதுதான் ஆண்டவனின் சூக்ஷுமம், அதனால்தான் ஞானிகள் “உன்னை நீ உணர்” என்று சிறிய வார்த்தையில் பெரிய தத்துவதைக் கூறுகின்றனர்.